Published:Updated:

கலக்கல் வருமானம் கொடுக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

நாட்டுச் சர்க்கரையுடன் தெய்வசிகாமணி-கலாமணி தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுச் சர்க்கரையுடன் தெய்வசிகாமணி-கலாமணி தம்பதி

ஒரு ஏக்கர், ரூ.1,30,000...

கலக்கல் வருமானம் கொடுக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

ஒரு ஏக்கர், ரூ.1,30,000...

Published:Updated:
நாட்டுச் சர்க்கரையுடன் தெய்வசிகாமணி-கலாமணி தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுச் சர்க்கரையுடன் தெய்வசிகாமணி-கலாமணி தம்பதி

மகசூல்

ண்மைக்காலமாக நஞ்சில்லா உணவுப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. அதையொட்டி இயற்கை விளைபொருள் விற்பனை அங்காடிகள் பெருகிவருகின்றன.

இயற்கை விவசாயப் பரப்பளவும் அதிகரித்து வருகிறது. தனக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் இயற்கைவழி வேளாண்மையில் கரும்புச் சாகுபடி செய்து வருவதுடன், வயல்வெளியில் ஆலை அமைத்து, நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்துவருகிறார் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்துள்ள பட்டையகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி தெய்வசிகாமணி. கறுப்பு நதியாக வளைந்து நெளிந்து போகும் தார்ச்சாலை. வழியெங்கும் தோகை அசைந்தாடும் கரும்புத் தோட்டங்கள். பச்சைக்கம்பளம் விரித்ததுபோல் நீண்டுகிடக்கும் வயல்வெளி. அந்தக் காட்சிகளை ரசித்தவண்ணம் தெய்வசிகாமணியின் கரும்பு வயலுக்குள் நுழைந்தோம்.

காய்ச்சிய சர்க்கரைப் பாகை உலர்த்தும் பணி
காய்ச்சிய சர்க்கரைப் பாகை உலர்த்தும் பணி

கரும்புக் கட்டுகளைச் சுமந்து வந்து சிலர் களத்துமேட்டில் அடுக்க, பல்சக்கர அரவை இயந்திரத்தில் கரும்புகள் திணிக்கப்பட்டு, கிடைக்கும் கரும்புப்பால் கொப்பரையில் ஊற்றப்படுகிறது. கொப்பரை அடுப்பு எரிய, அதில் கொதிக்கும் கரும்புப்பாலை துடுப்புக் கட்டையால் கிண்டிவிடுகிறார்கள். குறிப்பிட்ட பக்குவத்தில் கரும்புப்பால் சுண்டி, பாகு நிலைக்கு வருகிறது. ஆறிய பாகுவைக் கரண்டியால் சுரண்டி எடுக்கிறார்கள். அட அதுதான் சர்க்கரை.

தெய்வசிகாமணியும் அவர் மனைவி கலாமணியும் நம்மை இன்முகத்தோடு வரவேற்றார்கள். குவியலாகக் கொட்டி வைத்திருக்கும் நாட்டுச் சர்க்கரையில் கொஞ்சம் அள்ளியெடுத்து நம் கையில் கொடுத்தார் தெய்வசிகாமணி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கத் தேவையான சர்க்கரை இங்கிருந்துதான் வண்டி வண்டியா போகும். 30 முதல் 35 டன் கரும்பிலிருந்து 3,000 கிலோ சர்க்கரை கிடைக்கும்.

‘‘சாப்பிட்டுப் பாருங்க... ருசி அபாரமா இருக்கும். நூறாண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பர்யம்கொண்ட கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரையின் மகிமையே அதன் சுவைதான். `பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கத் தேவையான சர்க்கரையை இங்கேருந்துதான் வண்டி வண்டியா வாங்கிட்டுப் போவாங்க’னு பெரியவங்க சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். இப்பவும் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் சிலருக்கு இங்கிருந்துதான் நாட்டுச் சர்க்கரை போகுது’’ என்று சர்க்கரையின் பெருமை பேசியவர், தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

நாட்டுச் சர்க்கரையுடன் தெய்வசிகாமணி-கலாமணி தம்பதி
நாட்டுச் சர்க்கரையுடன் தெய்வசிகாமணி-கலாமணி தம்பதி

‘‘எங்க பகுதியில கரும்பு விவசாயம்தான் பிரதானம். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து வருஷம் தவறாம, எங்க தோட்டத்துல கரும்பு நடவு செய்யறோம். மத்த ஊர்ல இருக்கும் கரும்பு விவசாயிங்க வெட்டின கரும்பைச் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புறாங்க. இந்தப் பகுதி விவசாயிங்க பெரும்பாலும் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பை அனுப்பறதில்லை. தோட்டத்தில் ஆலை அமைச்சு சொந்தமா நாட்டுச் சர்க்கரை உற்பத்தி பண்றாங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல தலைமுறையா நாட்டுசர்க்கரை உற்பத்தி செய்யும் தொழில் இங்கே நடக்குது. நம்மாழ்வார், பாலேக்கர் போன்றோர் செய்த இயற்கை விவசாய பிரசாரம், என்னை மாதிரி நிறைய விவசாயிங்களை இயற்கை விவசாயம் பக்கம் இழுத்துச்சு. இயற்கை விவசாயத்தில் கரும்பு உற்பத்தி செய்யவும், சர்க்கரை தயாரிக்கவும் முடிவு செஞ்சேன். இயற்கை இடுபொருள்கள் தயாரிக்க ரெண்டு நாட்டுப் பசுக்களை வாங்கினேன். அதுங்க போடுற சாணம், சிறுநீரைப் பயன்படுத்தி பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் தயாரிச்சு கரும்புப் பயிர்களுக்குக் கொடுத்து என்னோட இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன்.

கரும்பைப் பிழிந்து பால் எடுத்தல்
கரும்பைப் பிழிந்து பால் எடுத்தல்

நாட்டு மாடுகளோட சாணத்தை மட்கவெச்சு தொழுவுரமா ஆக்கி, அதுகூட உயிர் உரங்களைக் கலந்து அடியுரமாகவும் மேலுரமாகவும் கரும்புக்குப் போடுறேன். ஏக்கருக்கு 30 முதல் 35 டன் வரை மகசூல் கிடைக்கும். அதை ஆலையில் கொடுத்து அரவை செய்தால், 800 கிலோ கரும்பிலிருந்து 500 லிட்டர் கரும்புப்பால் கிடைக்கும். அதைக் காய்ச்சினால் 90 கிலோ சர்க்கரை கிடைக்கும். 30 முதல் 35 டன் கரும்பிலிருந்து 3,000 கிலோ சர்க்கரை கிடைக்கும்’’ என்றவர் நிறைவாக,

பாகு காய்ச்சும் பணி
பாகு காய்ச்சும் பணி

நாங்க உற்பத்தி செய்யும் சர்க்கரையை சந்தையில விற்பனை செய்யறதில்லை. இயற்கை அங்காடிகளுக்கும் நுகர்வோருக்கும் நேரடியா விற்பனை செய்யறோம். கிலோ 80 ரூபாய் விலைக்குக் கொடுக்கிறோம். 3,000 கிலோ விற்பனை மூலம் 2,40,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

ரசாயன விவசாயிகள் களைக்கொல்லி பயன்படுத்துறதால ஏக்கருக்கு 3,000 ரூபாய்தான் செலவு ஆகுது. இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை ஆட்களை விட்டே களை எடுக்க வேண்டியிருக்கு. அதுக்கான செலவு, கிட்டத்தட்ட 20,000 ரூபாய் ஆகுது. அதே நேரம், ரசாயனச் சர்க்கரை கிலோ 50 ரூபாய்க்குத்தான் போகுது. இயற்கை சர்க்கரைக்கு 30 ரூபாய் கூடுதலா கிடைக்குது. காலப்போக்கில் இயற்கை விவசாய இருபொருள்களால் மண்ணின் வளமும் கூடும். இந்த போகத்துல தொழுவுரம், உழவு, சணப்பை, விதைக் கரணை, நடவு, களை, தெளிப்பு, ஆலைச் செலவுனு சரியா 1,10,000 ரூபாய் ஆகியிருக்கு. வருமானம் 2,40,000 கிடைச்சிருக்கு. கரும்பு மதிப்புக்கூட்டப்பட்டு நாட்டுச் சர்க்கரையா மாத்தி விற்பனை செஞ்சதுல 1 ஏக்கருக்கு 1,30,000 ரூபாய் லாபம் கிடைச்சிருக்கு’’ என்றார் நெகிழ்வுடன்.

தொடர்புக்கு, தெய்வசிகாமணி, செல்போன்: 94882 32662.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயற்கைக் கரும்புச் சாகுபடி முறை!

டவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், சணப்பை விதைத்து உழவு செய்ய வேண்டும். தொடர்ந்து தேவையான பாசனம் செய்ய வேண்டும். பூக்கும்போது அதை மடக்கி உழவு செய்ய வேண்டும். அது நல்ல பசுந்தாள் உரமாக நிலைத்து நின்று கூடுதல் விளைச்சலைத் தரும். தொடர்ந்து நான்கடி பார் அமைத்து அதில் ஓரடி இடைவெளியில் விதைக் கரணைகளை நடவு செய்ய வேண்டும். ஒரு கரணையிலிருந்து இரண்டு துளிர் முளைக்கும். ஒரு ஏக்கருக்கு 12,500 விதைக்கரணைகள் தேவைப்படும். அதன் மூலம் 25,000 குருத்துகள் வெளிவரும். நடவு செய்தவுடன் சொட்டு நீர்ப் பாசனக் கருவிகளைப் பொருத்திவிட வேண்டும். நடவு செய்த 30-ம் நாளில் வயல் முழுவதும் புல், பூண்டு உள்ளிட்ட களைச்செடிகள் முளைத்திருக்கும். ஆட்களைக் கொண்டு கைக்களை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் அமுதக்கரைசல் வீதம் ஒரு ஏக்கருக்குத் தேவையான 70 லிட்டர் கரைசலை வடிகட்டி, சொட்டுநீர்க் குழாய் வழியாகக் கொடுக்க வேண்டும். தோகை அகலமாக விரிந்து வளரவும், வேரோட்டம் தடைப்படாமல் இருக்கவும் அமுதக்கரைசல் உதவிசெய்யும். தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு ஒரு முறை காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் செய்ய வேண்டும். 38-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து, இலைவழி ஊட்டமாகத் தெளிக்க வேண்டும்.

15 நாள்களுக்கு ஒரு முறை அமுதக்கரைசல், வேஸ்ட் டீகம்போஸர் இரண்டையும் சுழற்சி முறையில் கொடுக்க வேண்டும். 60 நாள்களுக்கு ஒரு முறை இ.எம் கரைசல் கொடுக்க வேண்டும்.

65-ம் நாளில் பரவலாகக் களைகள் தென்படும். அவற்றை மண்வெட்டியால் சுரண்டி அப்புறப்படுத்த வேண்டும். 90-ம் நாளில் மண்வெட்டியால் மண்ணைச் சுரண்டி, கரும்பு வேர்ப்பகுதிகளைச் சுற்றிலும் மண் அணைக்க வேண்டும். வளரும் பயிர் பக்கவாட்டில் சாயாமல் நேராக வளர மண் அணைப்பு அவசியம்.

தொடர்ந்து மேலுரமாக, 15 டன் தொழுவுரத்தைப் பரவலாகக் கொட்ட வேண்டும். 120-ம் நாளில் வளர்ந்து நிற்கும் தோகைகளை உரித்து, வயலில் மூடாக்காகப் போட வேண்டும்.எக்காரணம் கொண்டும் தோகைகளைக் கரும்பு வயல் அருகில் கொட்டி எரிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் அழிந்துவிடும். முழுக்க முழுக்க இயற்கை இடுபொருள்களைக் கொடுத்துவந்தால் வேர்ப்புழு உள்ளிட்ட வேர் தொடர்பான நோய்கள் தாக்க வாய்ப்பு குறைவு.

தோகைநோய் மற்றும் இடைக்கணுப்புழு நோய் தாக்கும் வாய்ப்பிருக்கிறது. அது தென்படும்பட்சத்தில் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரித்து, அதைத் தெளிக்க வேண்டும். 10-ம் மாதம் தொடங்கி 12-ம் மாதம் வரை கரும்பைச் சேதப்படுத்தும் எலிகள் வரப்புகளை ஓட்டையிட்டு உள்ளே வரும். அவற்றை விரட்ட புகையிலை, பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். அந்த வாசனைக்கு எலிகள் வயலைவிட்டு ஓடிவிடும். 12-ம் மாத முடிவில் கரும்பு ஆறடிக்கு மேல் வளர்ந்து நிற்கும். எண்ணிப் பார்த்தால் கரும்பு ஒன்றில் 27 கணுக்கள் இருக்கும். தரமான வளர்ச்சிக்கு இது அடையாளம். 13-ம் மாதம் தொடங்கும் நேரம் கரும்பு அறுவடையைத் தொடங்கலாம்.

புவிசார் குறியீடு வேண்டும்!

வுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரையின் சிறப்புகள் குறித்துப் பேசிய திண்டுக்கல்லைச் சேர்ந்த மோ.நா.பழனிசாமி. “அதிக சுவையும் அற்புத மணமும் கொண்டது புகழ்பெற்ற பழநி பஞ்சாமிர்தம். அதன் தித்திக்கும் சுவைக்கு முக்கியக் காரணம் அதில் சேர்க்கப்படும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரையும் விருப்பாட்சி வாழைப்பழங்களும்தான். மலையில் பெய்யும் மழை நீரில் விளையும் பொருள்களில் சுவையும் மணமும் மிகுந்திருக்கும். அப்படி பவானி ஆற்றுத் தண்ணீரில் விளையும் கவுந்தப்பாடி கரும்புக்கும், அதில் உருவாகும் சர்க்கரைக்கும் இனிப்புச் சான்றிதழ் தேவையில்லை.

கலக்கல் வருமானம் கொடுக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க வண்டி வண்டியாக கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை அனுப்பப்பட்டுள்ளது. அது இன்றும் தொடர்கிறது. கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரைக்கு புவிசார் குறியீடு வழங்கினால், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism