Published:Updated:

விவசாயம் செய்ய கடன் வேண்டுமா? அப்ப கிசான் கடன் அட்டை முகாம்ல கலந்துக்கோங்க; அழைக்கும் வேளாண்துறை

விவசாயி

ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் மே 1 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வருவாய் கிராமங்களில் நேரடி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயம் செய்ய கடன் வேண்டுமா? அப்ப கிசான் கடன் அட்டை முகாம்ல கலந்துக்கோங்க; அழைக்கும் வேளாண்துறை

ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் மே 1 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வருவாய் கிராமங்களில் நேரடி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
விவசாயி

கிசான் கடன் அட்டை திட்டத்தின் மூலம் உழவர் ஒருவருக்கு ஆண்டுக்கு மூன்று லட்சம் வரை கடன் வசதி இந்திய அரசால் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகுதியுள்ள விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது.

அதாவது, கிசான் வங்கித் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து, விவசாயிகள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூலம் கிசான் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் மே 1 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வருவாய் கிராமங்களில் நேரடி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள் இந்த முகாமில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கடன் அட்டை பெற பதிவு செய்யலாம்.

 பேங்க்
பேங்க்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது மட்டும் இல்லாமல் முகாமில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் முறைப்படி பதிவு செய்வது எப்படி மற்றும் எவ்வாறு தவறான பதிவுகளைத் தவிர்ப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட உள்ளது. மேலும், விவசாயிகளுக்கான அனைத்து நலத்திட்டங்கள் குறித்தும், உழவன் செயலி பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பயன்பெறும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட உள்ளது.

இந்த முகாமில் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற உள்ளதால், விவசாயிகள் அனைவரும் பங்கு பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. முகாம் நடைபெறும் கிராமங்களின் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism