Published:Updated:

நாட்டுக்கோழிகள் அத்தனையும் நாட்டுக்கோழிகள் அல்ல... ஏன்?

food
food

நம் நாட்டில் சிறுதானியங்களுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி, உரங்கள் பயன்படுத்துவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

சமீபத்தில் சென்னையில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry-CII) ஏற்பாடு செய்திருந்த 'ஃபுட் புரோ-2019' கண்காட்சிக்குப் போயிருந்தேன். விரிவாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/2mMn5LZ

பெரிய பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்பவர்களுக்கும் அரங்குகள் அமைத்திருந்தார்கள். இயற்கை வழி விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட உணவுகளுக்கு ஏக வரவேற்பு உள்ளதைக் கண்குளிரப் பார்க்க முடிந்தது. சிறுதானிய உணவுகளுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தது. மிகவும் நேர்த்தியாகப் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் கம்பு, சோளம்... போன்ற சிறுதானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏதோ, வெளிநாட்டுக்காரர்களுக்கு ஞானம் வந்து இதைச் சாப்பிடுவதாக நினைக்க வேண்டாம். எல்லாம், நம் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள்தான், நம் உணவுப்பொருள்களை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

நாட்டுக்கோழிகளை உண்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால்

''சிறுதானியங்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு நிறையவே உள்ளன. கடந்த மாதம் ஒரு விவசாயி, சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு இரண்டையும் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்தார். உரிய ஆவணங்கள் இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். விசாரித்துப்பார்த்ததில் ஓர் அதிர்ச்சிகரமான உண்மை தெரிந்தது. அதாவது, அந்த விவசாயி தன்னுடைய சிறுதானியங்கள் பாக்கெட் மீது 'ஆர்கானிக்' முறையில் விளைவிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்டதற்கான 'ஆர்கானிக் சான்றிதழ்' அவரிடம் இல்லை. இதனால், அவரது பொருள்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

நம் நாட்டில் சிறுதானியங்களுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி, உரங்கள் பயன்படுத்துவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்தத் தகவல் வெளிநாட்டில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரியாது. நாம் உண்மையாக இருந்தாலும், உரிய ஆவணங்கள் அவசியம். வெளிநாடு களுக்கு உணவுப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் ஆர்கானிக் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டும் அதைக் குறிப்பிடவும். சான்றிதழ் பெற்ற இயற்கை வழி விவசாயிகள், 'நேச்சுரல்' என்று குறிப்பிடலாம். இதனால், சிக்கல் ஏற்படாது. குறிப்பாகச் சிறுதானியங்களை ஏற்றுமதி செய்பவர்கள் இதைப் பின்பற்றலாம்'' என்று இந்த அனுபவ பாடத்தைக் கட்டாயம் எழுதுங்கள் என்று கைகளைப் பிடித்தபடிச் சொன்னார், ஏற்றுமதி அமைப்பில் பணியாற்றும் நண்பர்.

''நாட்டுக்கோழிகளை உண்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், சந்தையில் விற்பனை செய்யப்படும் நாட்டுக்கோழிகள் அத்தனையும் நாட்டுக்கோழிகள் அல்ல. நாட்டுக்கோழிகள்போலத் தோற்றம் கொண்டவை'' என்றார் கோயம்புத்தூரில் நாட்டுக்கோழிப் பண்ணை நடத்திவரும் நண்பர். கொஞ்சம் புரியும்படிச் சொல்லுங்கள் என்றேன்.

food
food

''நாட்டுக்கோழிகள் இயற்கையான சூழ்நிலையில் வளர்க்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 5 மணி நேரமாவது மேய்ச்சலில் இருந்தால்தான், நாட்டுக்கோழிக்கு உண்டான தகுதிகளை அவை பெறும்'' என்று நாட்டுக்கோழி வளர்ப்பு ரகசியத்தைச் சொன்னார்.

- மண்புழு மன்னாரு அனுபவத்தை பசுமை விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > மண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்! https://www.vikatan.com/news/agriculture/manpuzhu-mannaru-5

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |

அடுத்த கட்டுரைக்கு