Published:Updated:

நாகை: `1,064 மீட்டர் நீளம்.. 84 மதகுகள்’ -கொள்ளிடம் ஆற்றில் கதவணை பணிகள் தீவிரம்

கொள்ளிடம்
கொள்ளிடம்

கதவணை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, நாகை மாவட்டத்தில் செயல்படும், 610 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் செயல்படும், குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரம் மேம்படும்.

கொள்ளிடம்

கொள்ளிடம் ஆற்றிலிருந்து, வீணாகக் கடலில் தண்ணீர் சென்று கலப்பதைத் தடுக்கும் வகையில், ரூ.396 கோடியில் புதிய கதவணை கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கதவணை கட்டும் பணி
கதவணை கட்டும் பணி

கர்நாடகாவில் மழை, வெள்ளம் ஏற்படும் காலங்களில், மேட்டூர் அணையிலிருந்து, அதிக அளவிலான தண்ணீர் திறக்கப்படும். இதனால், ஏற்படும் வெள்ள சேதத்தை தடுக்க, உபரி நீரானது நாகை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலுக்குச் செல்கிறது.

இந்தத் தண்ணீரைச் சேகரித்து வைக்க வேண்டும் என்ற நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில், 2015-ல், கொள்ளிடம் ஆற்றில், நாகை மாவட்டம், குமாரமங்கலத்தில், புதிய கதவணை கட்டப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

396 கோடி நிதி ஒதுக்கீடு

கிடப்பில் கிடந்த இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார். விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று கதவணை கட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 396 கோடி 2018-ல் நிதி ஒதுக்கீடு செய்தார்.

கதவணை கட்டும் பணி
கதவணை கட்டும் பணி

இதுபற்றி பொதுப்பணித்துறை பொறியாளர் கண்ணனிடம் பேசினோம். ``1,064 மீட்டர் நீளத்துக்கு, 84 மதகுகளுடன்கூடிய புதிய கதவணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக, 3 மீட்டர் ஆழத்துக்கு, 0.75 டி.எம்.சி தண்ணீரை சேகரிக்க முடியும்.

தற்போது கீழ்தள பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதுவரை, 55 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. 2021 ஏப்ரல் மாதத்துக்குள் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

கதவணை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, நாகை மாவட்டத்தில் செயல்படும், 610 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் செயல்படும், குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரம் மேம்படும்.

தெற்கு ராஜன், வடக்கு ராஜன், குமிக்கி மண்ணியாறு போன்ற ஆறுகள் வழியாக 25,000 ஏக்கர் நிலங்கள் கூடுதல் பாசன வசதி பெறும். வெள்ளம் வரும் காலங்களில், தண்ணீர் கடலில் சென்று கலப்பது தடுக்கப்படும்" என்றார்.

பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள், புதிய கதவணை கட்டும் திட்டத்துக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு