Published:Updated:

`கதவணையால் பயனில்லை; அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை!' - இறால் குட்டையால் பாதிக்கப்படும் விவசாயிகள்

கதவணை
கதவணை

கதவணை அமைந்துள்ள இடத்திலிருந்து பழையபாளையம் வரை இறால் குட்டைகள் அதிகமாக உள்ளன. அந்த இறால் குட்டைகளிலிருந்து வெளியேற்றப்படும் உப்பு நீருடன் கூடிய ரசாயன கழிவுநீர் உப்பனாற்றில் கலந்துவிடுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தற்காஸ் கிராமம் உள்ளது. இப்பகுதியில் கிட்டியணை உப்பனாறு உள்ளது. இந்த உப்பனாறு, பழைய பாளையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பழையார் மீன்பிடித் துறைமுகம் அருகே சென்று கடலில் கலக்கிறது. இந்த ஆறு பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கும் சுற்றுப்புறத்தில் இருக்கும் குடியிருப்புகளுக்கும் வடிகாலாக இருந்து வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தற்காஸ் கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கதவணை கட்டப்பட்டது.

இறால் குட்டை
இறால் குட்டை
மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை, பசுந்தீவன உற்பத்தி... 
அசத்தும் அரங்கனூர் உழவர் மன்றம்!

கதவணை அமைந்துள்ள இடத்திலிருந்து பழையபாளையம் வரை இறால் குட்டைகள் அதிகமாக உள்ளன. அந்த இறால் குட்டைகளிலிருந்து வெளியேற்றப்படும் உப்பு நீருடன் கூடிய ரசாயன கழிவுநீர் உப்பனாற்றில் கலந்துவிடுகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ``கிட்டியணை உப்பனாற்றில், உப்பு நீர் புகாதவாறு கதவணை அமைக்கப்பட்டும் எந்தவிதமான பயனில்லாத நிலையில் உள்ளது. இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறி வரும் உப்பு நீருடன் கூடிய கழிவுநீர் ஆற்றில் கலந்து ஆற்று நீரை மாசுபடுத்துகிறது. இதனால் சுற்றுவட்டாரக் கிராமங்களான பழையபாளையம், தாண்டவன்குளம், புளியந்துறை, புதுபட்டினம் உள்ளிட்ட 12- க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள கால்நடைகள் தண்ணீரை அருந்த முடியாத சூழலும் உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதியும், விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் வகையிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும் கிட்டியணை உப்பனாற்றில் இறால் குட்டைகளின் கழிவுநீர் வெளியேறுவதை தடை செய்ய வேண்டும். இல்லையேல் இறால் குட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் உப்பனாற்றில் தேங்கியுள்ள உப்பு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கதவணை
கதவணை
``பாடுபட்டு விளைவிச்ச நெல், எங்க கண்முன்னாலேயே சேதமடையுதே!’’ - பதறும் விவசாயிகள்

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறை சார்பில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் இறால் குட்டைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு