Published:Updated:

வேகமாகப் பரவும் கோமாரி நோய்! இயற்கை முறையில் எளிய தீர்வுகள்!

கால்நடை

பிரீமியம் ஸ்டோரி

மிழகத்தில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோமாரி நோய் வேகமாகப் பரவி வருகிறது. 2013-ம் ஆண்டு, தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய கோமாரி நோய், பல மாடுகளைப் பலி வாங்கின. அதற்குப் பிறகான ஆண்டுகளில் அவ்வப்போது எட்டிப் பார்த்த கோமாரி நோய் மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்நோயைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் எளிமையான இயற்கை மருத்துவ முறைகள் இருக்கின்றன. இந்த எளிய இயற்கை மருத்துவ முறைகள் குறித்துத் தஞ்சாவூரில் உள்ள மரபுசார் மூலிகை வழி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் முனைவர் புண்ணிய மூர்த்தியிடம் பேசினோம்.

புண்ணியமூர்த்தி
புண்ணியமூர்த்தி


காற்றில் பரவும் கோமாரி

``பருவநிலை மாறுகிற காலங் களில் வைரஸ் கிருமிகள் பரவுவ தால்தான் பல தொற்றுநோய்கள் மனிதர்களுக்கும் கால்நடை களுக்கும் வருகின்றன. குறிப்பாக, வெயில் காலத்திலிருந்து மழைக் காலமாக மாறும்போது, பாதிப்பு அதிகமாக இருக்கும். இயற்கை யிலேயே இதுபோன்ற சுழற்சி இருக்கிறது. கால்நடைகள், பெரும்பாலும் வெட்டவெளி யிலேயே இருப்பதால், எளிதில் பாதிப்புக்குள்ளாகின்றன. கோமாரி நோயும் வைரஸால் பரவும் தொற்று நோய்தான். இந்த வைரஸ் கிருமிகள், காற்றின் வழியாக நீண்ட தூரத்துக் குப் பரவக்கூடியவை.

தடுப்பூசி அவசியம்

கோமாரி நோய் கண்ட மாடு களுக்கு, வாயின் மேல்புறம், மூக்குத் துவாரம், நாக்கு, கால் நகங்களுக்கு இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் புண்கள் வரும். சரியாகத் தீவனம் எடுக்காது. வாயிலிருந்து எச்சில் வடிந்துகொண்டேயிருக்கும். பிறகு, காய்ச்சல் வரும். இந்த அறிகுறிகள் இருந்து, இரண்டு நாள்கள் கவனிக் காமல் விட்டால், மாடுகள் இறந்து விடக்கூடும். இதுபோன்ற நோய் பரவும் காலங்களில் நோய் வருகிறதோ, இல்லையோ... தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. அப்படியே போடாவிட்டாலும் பரவாயில்லை. இயற்கைத் தடுப்பு முறைகளைச் சரியாகச் செய்து வந்தாலே போதுமானது.

பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகே, செலவில்லாத இந்த இயற்கை மூலிகை மருத்துவத்தைச் சொல்லிக் கொடுத்து வருகிறோம். இதற்கு அதிகம் சிரமப்படத் தேவையில்லை. வீட்டுச் சமையலறையில் இருக்கும் 10 பொருள்கள், தோட்டம், வயல்களில் இருக்கும் 10 தாவரங்கள் இவையே போதுமானவை. இவற்றை வைத்தே மழைக்காலக் கோமாரி நோயை எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.

கால்நடை
கால்நடை


கோமாரி வாய்ப்புண்

தலா 10 கிராம் சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவற்றை எடுத்து, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு, மிக்ஸி அல்லது அம்மியில் அரைக்க வேண்டும். கூடவே, பூண்டு - 4 பல், மஞ்சள் தூள் - 10 கிராம் (2 ஸ்பூன்), வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை - 30 கிராம் ஆகியவற்றைக் கலந்து, மீண்டும் அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் அரை மூடி தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பிசைந்து, மூன்று விரல்களில் எடுத்து, மாட்டின் கடவாய்ப் பகுதியில் வைத்து, வாயின் மேல்பாகத்தைப் பூசுவதுபோல் கையை வெளியில் எடுக்க வேண்டும். மாட்டுக்கு மேல்வாயின் முன்பகுதியில் பற்கள் இருக்காது. அதனால் கடித்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை.

இது ஒருவேளைக்கான அளவு. இதுமாதிரி தினமும் 3 வேளை, அதிகபட்சம் 5 நாள் களுக்குக் கொடுத்து வந்தால், வாய்ப்புண் இருக்கும் இடமே தெரியாமல் ஓடிவிடும்.

கோமாரி கால் புண்

250 மி.லி நல்லெண்ணெயில், பூண்டு-4 பல், மஞ்சள் தூள்-2 ஸ்பூன், வேம்பு, துளசி, குப்பைமேனி, மருதாணி இலைகள் தலா 1 கைப்பிடி போட்டு, 10 நிமிடங்கள் சூடுபடுத்தி... கொஞ்சம் ஆற வைத்து, லேசான சூட்டில் நூல் துணி அல்லது பஞ்சில் நனைத்து, மாட்டின் கால் நகங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள புண், புழுக்களைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்த எண்ணெயை புண் மீது படும்படி மேற்புறமும் கீழ்புறமும் தாராளமாக விட வேண்டும். பாதிக்கப்பட்ட கால் தவிர, மற்ற கால்களுக்கும் இவ்வாறு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், கால்புண் ஆறிவிடும்.

கோமாரிக் காய்ச்சல்

கோமாரி நோயுடன் காய்ச்சலும் இருந்தால்... வெற்றிலை-4, சீரகம், மிளகு, தனியா விதை ஆகியவற்றில் தலா 5 கிராம், சின்ன வெங்காயம்-3, முருங்கை இலை-1 கைப்பிடி, நிலவேம்பு இலை-10 அல்லது 5 கிராம் நிலவேம்புப் பொடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, நாக்கில் தடவி விட வேண்டும்.

இது ஒரு வேளைக்குரிய அளவு. இதுபோல ஒரு நாளைக்கு 5 முறை கொடுக்க வேண்டும். மேற்சொன்ன அளவுகள் ஒரு மாட்டுக் கானவை. இந்த அளவு மருந்தை, ஆறு ஆடுகளுக்குக் கொடுக்கலாம்.



தொடர்புக்கு,

முனைவர் புண்ணியமூர்த்தி,

செல்போன்: 98424 55833

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு