Published:Updated:

“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எங்களுக்குக் கிடையாதா?”

நெல் வயல்
பிரீமியம் ஸ்டோரி
News
நெல் வயல்

கொதிக்கும் கொங்கு மண்டல விவசாயிகள்!

பிரச்னை

‘காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உருவாக்கப்படும்’ என்று முதலமைச்சர் கொண்டுவந்த சட்டத்துக்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் எனப் பல அமைப்புகளும் பாராட்டுப் பத்திரம் வாசித்துவருகின்றன.

ஆனால், முதலமைச்சரின் சொந்தப் பகுதியான கொங்கு மண்டலத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

கொங்கு மண்டலம் விவசாயத்திலும் தொழில் வளர்ச்சியிலும் சிறந்த பகுதியாக இருக்கிறது. அதே அளவுக்கு அபாயகரமான விளைவுகளை உருவாக்கும் பிரச்னை களையும் சுமந்துகொண்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செல்வம், தளபதி
செல்வம், தளபதி

சிப்காட், சிட்கோ, பிரமாண்டமான தொழிற்சாலைகள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, தோல் மற்றும் சாய ஆலைக் கழிவுகளால் ஆறுகளும், நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இவைபோக, விவசாய விளைநிலங்களை அழித்தொழிக்கும் எட்டுவழிச்சாலைத் திட்டம், உயர்மின் கோபுர விவகாரம், பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டம் என ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. இந்நிலையில், ‘டெல்டா பகுதி விவசாயிகளைக் காக்க, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் உருவாக்கப்படும்’ என அறிவித்திருப்பது கொங்கு மண்டல விவசாயிகளிடம் கொதிப்பைக் கூட்டியிருக்கிறது.

இது தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், “டெல்டா பகுதிகளைவிட கொங்கு மண்டலத்தில் ஆயிரம் மடங்குப் பிரச்னைகள் இருக்கின்றன. டெல்டாவிலாவது, `நான்கைந்து திட்டங்களால்தான் பாதிப்பு’ என்கிறார்கள். ஆனால், கொங்குப் பகுதியில் ஊர் ஊருக்குச் சாயப்பட்டறைத் தண்ணீர்ப் பிரச்னை இருக்கிறது. நிலத்தடி நீர் சாயப்பட்டறை நீரா மாறிக்கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்திலிருக்கும் பிரச்னைகள் என்னவென்று முதலமைச்சருக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும் ஏன் நடவடிக்கைகள் எடுக்காமலிருக்கிறார்... இதே நிலை நீடித்தால் கொங்கு மண்டலம் விவசாயம் செய்யத் தகுதியற்ற பகுதியாக மாறிவிடும். சிறியதோ, பெரியதோ... நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தும் எந்தத் தொழிற்சாலையையும் காவிரி மண்டலப் பகுதிகள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் எங்குமே அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயத்தையும், விவசாயிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு பாரபட்சமில்லாத நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதி, “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பால் `ஹைட்ரோகார்பன், பெட்ரோலியம், மீத்தேன் போன்றவை எடுப்பது தடை செய்யப்பட்டு, விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும்’ என்று சொல்கிறார்கள். மேற்கு மண்டலத்தில் தொன்மையான நாகரிக வரலாறுகொண்ட நொய்யலாறு முழுக்கச் சிதைந்து போயிருக்கிறது. 750 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்ட ஈரோடு காளிங்கராயன் வாய்க்கால் முற்றிலுமாக மாசுபட்டிருக்கிறது.

நெல் வயல்
நெல் வயல்

முழுக்க முழுக்க தோல், சாய ஆலைக்கழிவுகளால் இவை மாசுபட்டிருக்கின்றன. நொய்யலாற்றுப் பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கர் முற்றிலுமாக, 22 ஆயிரம் ஏக்கர் 50 சதவிகிதம் பாழ்பட்டுவிட்டதாகவும், 30 ஆயிரம் ஏக்கர் 20 சதவிகிதம் பாழ்பட்டு விட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்ற மோகன் கமிட்டியின் அறிக்கை சொல்கிறது. இதற்கு இதுவரை அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? அமராவதி, நொய்யல், பவானி ஆற்றுப் பாசன நிலங்கள் சாய, தோல், தொழிற்சாலைக் கழிவுகளால் கெட்டுப்போனால் பரவாயில்லை; டெல்டா பகுதிகள் மட்டும் பாதுகாக்கப்பட வேண்டுமா? காவிரிக்கு அடுத்தபடியாக வருடத்துக்கு 70 டி.எம்.சி நீரைக் கொடுக்கக்கூடிய பவானி ஆற்றின் மூலமாகக் கொங்குப் பகுதியில் மூன்று லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. இதற்குப் பாதுகாப்புத் தர அரசுக்குத் தோன்றவில்லையா?

வீட்டு வரன்முறை சட்டம் (2018), கொப்பு வாய்க்கால் பராமரிப்புச் சட்டம் (1959), வருவாய்த்துறை ஆணையச் சட்டம் (2014) இப்படி விவசாய நிலங்களைப் பாதுகாக்க ஏற்கெனவே ஏராளமான சட்டங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் முறையாக நடைமுறைப்படுத்தினாலே விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். இதைச் செய்யாமல், புதுப்புதுப் பெயர்களில் சட்டம் இயற்றி என்ன பிரயோஜனம்... தேர்தலுக்கான ஒரு பம்மாத்துபோல, 110 விதியின் கீழ் அறிவிப்பதைப்போல ஏதோ கேலிக்கூத்தாக இந்தச் சட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த அரசுக்கு உண்மையாகவே விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையிருந்தால் பரம்பிக்குளம் - ஆழியாறு, பவானி, அமராவதி, தாமிரபரணி, வைகை போன்ற மிகத் தொன்மையான, இன்னும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பாசனப் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.