Published:Updated:

`அரசாங்கத்தை நம்பலை!' - ரூ.1 லட்சம் மதிப்பில் வாய்க்கால்களைத் தூர்வாரிய விவசாயிகள்

வாய்க்கால்களைத் தூர்வாரும் விவசாயிகள்
வாய்க்கால்களைத் தூர்வாரும் விவசாயிகள்

'அரசாங்கத்தை நம்பினால், வயல்ல தண்ணீர் கொண்டு போய் சேர்க்க முடியாது. அதான், ஊர்கூடி தேர் இழுப்பதுபோல், நாங்களே விவசாயப் பாசனக் கிளை வாய்க்கால்களைத் தூர் வாரிட்டோம்'

``எல்லாத்துக்கும் அரசாங்கத்தை நம்ப முடியுமா?. அதனால்தான், 40 விவசாயிகள் ஒன்றுசேர்ந்து, ஒரு லட்சம் வரை கைக்காசைப் போட்டு, வாய்க்கால்களைத் தூர் வாரிட்டோம். இனி எங்க வயல்களில் தடையின்றித் தண்ணீர் பாயும்" என்று தம்ஸ்அப் காட்டி பேசுகிறார்கள், குளித்தலைப் பகுதி விவசாயிகள்.

வாய்க்கால்களைத் தூர்வாரும் விவசாயிகள்
வாய்க்கால்களைத் தூர்வாரும் விவசாயிகள்

கரூர் தொடங்கி டெல்டா மாவட்டங்கள் வரை உள்ள விவசாய நிலங்களின் பாசனத்துக்காக, கடந்த 12 - ஆம் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதற்கு முன்பு, தமிழக அரசு நீர்நிலைகளைத் தூர் வாரியது. ஆனால், பெரிய ஆறுகளை மட்டும் தூர்வாரினார்கள். அதில் பல முறைகேடு நடந்ததாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

`கைவிரித்த அரசு; கிணற்றைத் தூர்வாரிய இளைஞர்கள்!' - மக்களுக்கு கைகொடுக்கும் 4,000 லிட்டர் நீர்

இந்த நிலையில், தங்கள் பகுதியில் உள்ள 100 ஏக்கர் நிலங்களுக்குப் பிரதான வாய்க்கால்களிலிருந்து தண்ணீர் கொண்டு போய் சேர்க்கக்கூடிய சிறுசிறு கிளை வாய்க்கால்களை, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளே சேர்ந்து பணம் திரட்டி, தூர் வாரியிருக்கிறார்கள்.

வாய்க்கால்களைத் தூர்வாரும் விவசாயிகள்
வாய்க்கால்களைத் தூர்வாரும் விவசாயிகள்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள மருதூர், மேட்டுமருதூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள்தான் இப்படி தூர்வாரி முடித்திருக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களை கடந்த நான்கு நாள்களாக தூர்வாரியிருக்கிறார்கள்

`300 கன அடிக்கே தாங்கல!’ - கல்லணைக் கால்வாய் உடைப்பால் கலங்கும் புதுக்கோட்டை விவசாயிகள்

இது குறித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் பேசினோம்.

``எங்க மாவட்டத்தில காவிரி ஓடினாலும், எங்க வயல்களுக்குத் தங்குதடையில்லாமல் தண்ணீர் பாயணும்னா, இந்தக் கிளை வாய்க்கால்கள் நன்றாக இருக்கணும். ஆனால், அரசு ஒரு வருடம் கூட இந்த வாய்க்கால்களை தூர்வாரியதில்லை. விவசாயிகள் நாங்களே மண்வெட்டிகளை வச்சுக்கிட்டு, மாசக்கணக்குல இந்த வாய்க்கால்களை வெட்டி சரிபண்ணுவோம். இந்த வருடம், ஆறுகள், கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்களை தூர் வார தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

வாய்க்கால்களைத் தூர்வாரும் விவசாயிகள்
வாய்க்கால்களைத் தூர்வாரும் விவசாயிகள்

அதனால், எங்கள் பகுதி வாய்க்கால்களையும் தூர் வாருவாங்கனு நம்பினோம். ஆனால், அப்படி தூர் வாரலை. அதனால்,`அரசை நம்பினால் வயலுக்குச் சொட்டு நீர் கூட போய் சேராது. நம்ம பிரச்னையை நாமே தீர்த்துக்குவோம்'னு முடிவு பண்ணினோம். 40 விவசாயிகள் சேர்ந்து ஆளுக்கு குறிப்பிட்ட தொகையைப் போட்டு, ரூ.1 லட்சம் வரை திரட்டினோம்.

அதைக்கொண்டு, எங்க 100 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் கொண்டுபோய் சேர்க்கக்கூடிய கிளை வாய்க்கால்களை தூர்வாரினோம். ஜே.சி.பி இயந்திரத்தை வைத்து கடந்த நான்கு நாள்களாக தூர் வாரி முடித்தோம். ஒரு மணி நேரத்துக்கு ரூ.800 வீதம் தூர்வார ஜே.சி.பி இயந்திரத்துக்கு வாடகை கொடுத்தோம். புல், பூண்டு, களைச் செடிகள்னு மண்டிக்கிடந்த வாய்க்கால்களால, முன்னாடி ஒரு ஏக்கர் நிலத்துல 5 மணி நேரம் வரை தண்ணீர் பாயும்.

தூர் வாரப்பட்ட கிளை வாய்க்கால்
தூர் வாரப்பட்ட கிளை வாய்க்கால்

இப்போ எல்லாக் கிளை வாய்க்கால்களையும் சுத்தமா தூர் வாரிட்டதால, மூணு மணி நேரத்திலேயே ஒரு ஏக்கர் நிலத்துல தண்ணீர் பாய்ஞ்சுரும். வாய்க்கால்கள் அனைத்தையும் தூர் வாரிட்டதால, அடுத்து நாத்து விடும் பணி, வயல்களை நடவுக்குத் தயார்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டோம். அரசாங்கத்தை நம்பினால், வயல்ல தண்ணீர் கொண்டு போய் சேர்க்க முடியாது. அதான், ஊர்கூடி தேர் இழுப்பதுபோல், நாங்களே விவசாயப் பாசனக் கிளை வாய்க்கால்களை தூர் வாரிட்டோம்" என்றார்கள், மகிழ்ச்சியாக.

அடுத்த கட்டுரைக்கு