Published:Updated:

டாப்சிலிப் திரும்பும் கும்கி யானைகள்; கன்னிவாடியில் யானை பிரச்னை முடிவுக்கு வருகிறதா?

கும்கி

எத்தனையோ முறை வனத்துறையிடம் முறையிட்டு வந்தபோதிலும் வனத்துறையினர் கண்டு கொள்ளவில்லை. வனத்துறை தரப்பில் ஓர் உயிர் போன பிறகுதான் டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கலீம் மற்றும் சின்னதம்பி ஆகிய கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.

டாப்சிலிப் திரும்பும் கும்கி யானைகள்; கன்னிவாடியில் யானை பிரச்னை முடிவுக்கு வருகிறதா?

எத்தனையோ முறை வனத்துறையிடம் முறையிட்டு வந்தபோதிலும் வனத்துறையினர் கண்டு கொள்ளவில்லை. வனத்துறை தரப்பில் ஓர் உயிர் போன பிறகுதான் டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கலீம் மற்றும் சின்னதம்பி ஆகிய கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.

Published:Updated:
கும்கி

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள கொடைக்கானல், தாண்டிக்குடி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, சிறுமலை, வத்தலகுண்டு, நத்தம் ஆகிய பகுதிகளில் யானை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. கோடைக்காலங்களில் தண்ணீருக்காக வனவிலங்குகள் மலை அடிவாரங்களுக்கு வருவது வழக்கம். இதனால் வனவிலங்கு-மனித எதிர்கொள்ளல் திண்டுக்கல் மாவட்ட மலையடிவாரப் பகுதிகளில் அதிகம் நடந்து வருகிறது.

கன்னிவாடி வனப்பகுதி
கன்னிவாடி வனப்பகுதி

கடந்த மாதம் கன்னிவாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள பண்ணைப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் தொந்தரவு அதிமாக இருந்தது. இந்தப் பகுதியில் மட்டும் யானை தாக்கியதில் 3 பேர் பலியாகிய நிலையில் வனப்பாதுகாவலர் சுந்தரம் கோம்பை அருகே சுற்றித்திரிந்த யானைகளை விரட்டியபோது யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எத்தனையோ முறை வனத்துறையிடம் முறையிட்டு வந்தபோதிலும் வனத்துறையினர் கண்டு கொள்ளவில்லை. வனத்துறை தரப்பில் ஓர் உயிர் போன பிறகுதான் கன்னிவாடி பகுதியில் சுற்றித் திரியும் குட்டை கொம்பன் உள்ளிட்ட யானைகளை விரட்ட மே 1-ம் தேதி பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கலீம் மற்றும் சின்னதம்பி ஆகிய கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.

சின்னதம்பி
சின்னதம்பி

கன்னிவாடி அருகே கோம்பையில் உள்ள முத்து பாண்டி கோயில் பகுதியில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. கன்னிவாடி பகுதியில் அட்டகாசம் செய்த குட்டை கொம்பனை பிடிக்க வேண்டும் என்பதே கோம்பை, பண்ணைப்பட்டி பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக இருந்தது. இதனால் கும்கிகள் மூலம் குட்டை கொம்பன் மற்றும் அதனுடன் சுற்றும் யானைக் கூட்டத்தைக் கண்காணித்து வருவதாகவும், மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததும் குட்டை கொம்பனை பிடித்துவிடுவோம் எனவும் வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் முகாமில் 18 நாள்கள் வைக்கப்பட்டிருந்த கும்கிகளான சின்னதம்பிக்கும், கலீமுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது எனக் கூறி டாப்சிலிப் அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி சுற்றுவட்டாரப் பகுதிகள், ஆத்தூர், ஆடலூர், பன்றிமலை. கே.சி.பட்டி, பாச்சலூர், பள்ளத்து கால்வாய், தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள் பட்டி, அண்ணா நகர் உட்பட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் யானைகள் நடமாட்டம் இருப்பதாகவும் மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

கலீம்
கலீம்

இந்நிலையில் மே 18-ம் தேதி கன்னிவாடி சுரக்காபட்டி பகுதியில் இலவம் பஞ்சு எடுக்கச் சென்ற பெருமாள், ஜானகி தம்பதியை யானை விரட்டி தாக்கியது. இதில் படுகாயமடைந்த ஜானகி(42) திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதையடுத்து மே 26-ம் தேதி பழனி சண்முகப்பாறை பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் 10-வது படிக்கும் தனது மகன் ஹரி தர்ஷன் இருவரும் மலையடிவாரப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது யானை விரட்டி தாக்கியதில் ஹரிதர்ஷன் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல பல இடங்களில் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தியும், மனிதர்களை விரட்டி தாக்க முயல்வதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இதுகுறித்து கன்னிவாடியைச் சேர்ந்த சக்திவேலிடம் பேசினோம். ''மனிதர்களை தாக்கியும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் வரும் காட்டு யானைகளை விரட்டுகிறோம் என்ற பெயரில் வனத்துறையினர் யானைகளை கோபப்படுத்தினர். இதனால் யானைகள் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. தற்போது யானைகள் கூட்டம் கூட்டமாக கன்னிவாடி, ஆத்தூர், பன்றிமலை உள்ளிட்டப் பகுதிகளுக்கு சென்றுவிட்டன. அவை எந்நேரமும் மீண்டும் கன்னிவாடி பகுதிக்கு வர வாய்ப்புகள் உண்டு.

சக்திவேல்
சக்திவேல்

இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினரோ இப்பகுதி மக்களின் போராட்டத்தை தடுக்க கண்துடைப்புக்காக கும்கிகளை வரவழைத்து கலீமுக்கு வயிற்றுபோக்கு எனவும், சின்னதம்பிக்கு மஸ்த் பிடித்துவிட்டது எனவும் கூறி டாப்சிலிப் அனுப்பி வைத்துவிட்டனர். கும்கிகளை அழைத்து வந்தபோதே எங்கு யானைக்கூட்டத்தின் நடமாட்டம் இருக்கிறதோ அந்தப் பகுதிகளுக்கு கும்கிகளை அழைத்துச் செல்லாமல் அவை கிழக்கே இருந்தால் கும்கிகளை மேற்கே நிறுத்தி வைத்துக்கொண்டனர். இது விவசாயிகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

நான்குவழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, விளைநிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கினார்கள். அதேபோல எங்கள் பகுதி விவசாயிகளின் நிலத்தையும் வனத்துறை எடுத்துக் கொள்ளட்டும். அதற்குரிய இழப்பீட்டை வழங்கினால் விவசாயிகள் மலையடிவார விளைநிலத்தை விட்டு வெளியேற தயாராக உள்ளனர். ஒவ்வொரு நாளும் யானை தாக்குதலுக்கு ஆளாகிவிடுவோமோ, குழந்தை போல பாதுகாத்து வளர்த்த மா, தென்னையை அழித்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்க்கையை நடத்த யாரும் தயாராக இல்லை'' என்றார்.

கும்கி
கும்கி

கன்னிவாடி வனச்சரகர் சக்திவேலிடம் பேசினோம்.'' கும்கிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டாப்சிலிப் அனுப்பிவிட்டோம். தற்போது கன்னிவாடி பகுதியில் யானைகள் தொந்தரவு இல்லை. அவை ஆடலூர் வனப்பகுதிக்கு விரட்டுப்பட்டுவிட்டன'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism