Published:Updated:

100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சிவப்பு நிற லிப்ஸ்டிக் தாவரம்; எங்கு தெரியுமா?

லிப்ஸ்டிக் தாவரம் ( twitter )

100 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தாவரம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது குறித்து, `கரன்ட் சயின்ஸ் ஆன் தி டிஸ்கவரி’ என்ற இதழில் கட்டுரையை வெளியிட்டுள்ளார், இந்திய தாவரவியல் அளவாய்வின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா சோவ்லு.

100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சிவப்பு நிற லிப்ஸ்டிக் தாவரம்; எங்கு தெரியுமா?

100 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தாவரம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது குறித்து, `கரன்ட் சயின்ஸ் ஆன் தி டிஸ்கவரி’ என்ற இதழில் கட்டுரையை வெளியிட்டுள்ளார், இந்திய தாவரவியல் அளவாய்வின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா சோவ்லு.

Published:Updated:
லிப்ஸ்டிக் தாவரம் ( twitter )

100 ஆண்டுகளுக்கு பிறகு, அருணாசலப் பிரதேசத்தில் அரிய வகை லிப்ஸ்டிக் தாவரம் (Lipstick Plant) மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல அரிய வகை தாவரங்கள் காலத்தின் சுழற்சியில் அழிந்து போயின. அவற்றை பெயரிலும் புத்தகத்திலும் மட்டுமே படித்து வரும் நிலை இருந்தது. ஆனால், இயற்கையின் பார்வையில் எந்த ஒன்றும் அழிவதில்லை, அவை அடிக்கடி தன்னுடைய இருப்பை நிலை நிறுத்திக்கொள்கிறது. இப்படிதான் பல ஆண்டுகளாகக் கண்டறியப்படாத தாவரம் ஒன்று 100 ஆண்டுகளுக்குப் பிறகு, அருணாசலப் பிரதேசம், அஞ்சாவ் மாவட்டத்தில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.

'அருணாசலப் பிரதேசம்
'அருணாசலப் பிரதேசம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தாவரத்தின் பெயர் `லிப்ஸ்டிக் பிளான்ட்' (Aeschynanthus monetaria Dunn). பார்ப்பதற்கு லிப்ஸ்டிக் போன்று சிவப்பு நிறத்தில் அதன் இதழ்களும் மலரும் உள்ளதால் இதற்கு இப்பெயர் வந்தது. முதன்முறையாக இந்த தாவரம் 1912-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தாவரவியலாளர் ஸ்டீபன் ட்ராய்ட் டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. எஸ்கினாந்தஸ் (Aeschynanthus) என்ற இதன் பேரின பெயர் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. இதில் எஸ்கைன் (aischyne or aischyn) என்பதற்கு அவமானம் அல்லது தடுமாற்றம் எனப் பொருள். அந்தோஸ் (anthos) என்பதற்கு பூக்கள் என்று பெயர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

100 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தாவரம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது குறித்து, `கரன்ட் சயின்ஸ் ஆன் தி டிஸ்கவரி’ என்ற இதழில் கட்டுரையை வெளியிட்டுள்ளார், இந்திய தாவரவியல் அளவாய்வின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா சோவ்லு. அதில், தெற்கு சீனாவிலிருந்து வெப்பமண்டல ஆசியா வரை காணப்படும் இந்தத் தாவர குழுவில் சுமார் 174 இனங்கள் உள்ளன. இதில் இந்தியாவில் சுமார் 26 தாவர வகைகள் உள்ளன.

லிப்ஸ்டிக் தாவரம்
லிப்ஸ்டிக் தாவரம்
twitter

பல்லுயிர் தன்மை அதிகம் கொண்ட மாநிலமாக அருணாச்சல பிரதேசம் இருப்பதால், இங்கே பல வகையான தாவர இனங்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இங்கு தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவிப்பதாக கிருஷ்ணா சோவ்லு கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism