Published:Updated:

`மா கவாத்துச் செய்யுங்கள்... லாபத்தை பெருக்குங்கள்!' கூவத்தூர் அருகில் நேரடி களப்பயிற்சி!

மா கவாத்து

கவாத்தை பற்றி இன்னும் விளக்கமாக சொல்லித் தருவதுதான் 'மா கவாத்துச் செய்யுங்கள்...லாபத்தை பெருக்குங்கள்!' என்னும் நேரடி களப்பயிற்சி. இந்த நிகழ்ச்சியை பசுமை விகடன் ஏற்பாடு செய்துள்ளது.

`மா கவாத்துச் செய்யுங்கள்... லாபத்தை பெருக்குங்கள்!' கூவத்தூர் அருகில் நேரடி களப்பயிற்சி!

கவாத்தை பற்றி இன்னும் விளக்கமாக சொல்லித் தருவதுதான் 'மா கவாத்துச் செய்யுங்கள்...லாபத்தை பெருக்குங்கள்!' என்னும் நேரடி களப்பயிற்சி. இந்த நிகழ்ச்சியை பசுமை விகடன் ஏற்பாடு செய்துள்ளது.

Published:Updated:
மா கவாத்து

என்னடா இது? பசுமை விகடன் தொடர்ந்து விவசாயம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நேரலையில் மட்டுமே நடத்தி வருகிறது, நேரடி களப்பயிற்சி இல்லையா? என்று கேட்டுக்கொண்டிருந்த உங்களுக்காக இதோ வருகிறது நேரடி களப்பயிற்சி!

மா கவாத்து
மா கவாத்து

விவசாயத்திலேயே ஊறிப்போயிருக்கும் பலருக்கும் கவாத்து என்றால் என்ன என்று தெரிவதில்லை. ஆமாம், கவாத்து என்றால் என்ன? கவாத்து என்பது பழைய பக்க கிளைகளை வெட்டி அதிக அளவில் புதிய கனிகள் மற்றும் மலர்களை பெறும் முறையாகும்.

கவாத்தை பற்றி இன்னும் விளக்கமாக சொல்லித் தருவதுதான் 'மா கவாத்துச் செய்யுங்கள்...லாபத்தை பெருக்குங்கள்!' என்னும் நேரடி களப்பயிற்சி. இந்த நிகழ்ச்சியை பசுமை விகடன் ஏற்பாடு செய்துள்ளது. இதில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர், பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் பயிற்சி அளிக்க உள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நல்ல மகசூலை எடுக்கலாம்...

இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவதை குறித்து செந்தூர்குமரன் இதோ சுருக்கமாக கூறுகிறார்...

மா மரங்களைப் பொறுத்தவரைக்கும் கவாத்து மிக முக்கியமானது. மரத்தின் அனைத்துக் கிளைகள் மற்றும் இலைகள் மீதும் வெயில் படவேண்டும். கிளைகளுக்கு இடையில் காற்று உள்ளே போய், வெளியேறும் அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும்.

மா கவாத்துச் செய்யுங்கள்... லாபத்தை பெருக்குங்கள்!
மா கவாத்துச் செய்யுங்கள்... லாபத்தை பெருக்குங்கள்!

முதிர்ந்த பழைய கிளைகள் மற்றும் தேவையில்லாத இலைகளை மரத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் மரத்திற்கு கிடைக்கும் சத்துக்கள் விரயமாகும். நடவில் இருந்து மா மரங்களை ஆண்டுதோறும் முறையாக கவாத்து செய்வதன் மூலம், நல்ல மகசூலை எடுக்கலாம்.

ஆண்டுதோறும் மாமரத்தின் அனைத்து கிளைகளும் பூக்காது. நடப்பாண்டில் பூக்காத கிளைகளைக் கவாத்துச் செய்ய வேண்டும். கவாத்து செய்வதால், மகசூல் அதிகரிப்பதோடு தண்டுத் துளைப்பான் பூச்சியிடம் இருந்தும் மா மரங்களைக் காப்பாற்ற முடியும்.

நேரடி களப்பயிற்சியில்...

1. செப்டம்பர் மாதத்தில் மா மரங்கள் கவாத்து அவசியம்

2. அதிகக் கிளைகள், இலைகள் கொண்ட மரங்கள் அதிக மகசூல் கொடுக்காது

3. புதிய கிளைகளை உருவாக்குவதால் மகசூல் இரட்டிப்பாகும்

4. காய்க்காத மா மரங்களைக் காய்க்க வைக்கும் நுட்பங்கள்

5. தண்டுத் துளைப்பானைத் தடுத்து நிறுத்தும் சூத்திரம்

மா கவாத்து
மா கவாத்து

6. தென்னையில் மகசூல் கூட்டும் மந்திரம்

7. தென்னையில் கூடுதல் விளைச்சல் எடுக்கும் நுட்பம்

8. ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழி முறைகள்

9. காண்டாமிருக வண்டை விரட்டி அடிக்கும் தொழில்நுட்பம்

10. இயற்கை வழி வேளாண்மையில் வெற்றிகரமான விளைச்சல்...

இன்னும் பல தகவல்கள் பற்றி பேசவுள்ளேன். விவசாயிகளும், விவசாய ஆர்வலர்களும் இந்த களப்பயிற்சியில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார் செந்தூர்குமரன்.

எங்கே? எப்போது?

இந்த பயிற்சி வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை மாந்தோட்டம், கூவத்தூரை அடுத்த, வடபட்டினம், ஈ.சி.ஆர் சாலை, செங்கல்பட்டு மாவட்டத்தில் நடக்கவுள்ளது.

மா கவாத்துச் செய்யுங்கள்... லாபத்தை பெருக்குங்கள்!
மா கவாத்துச் செய்யுங்கள்... லாபத்தை பெருக்குங்கள்!

கட்டணம் பற்றி...

இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ.999 மட்டுமே. இந்த கட்டணத்தை

NAME OF THE ACCOUNT: VIKATAN MEDIA SERVICES PRIVATE LIMITED

ACCOUNT NUMBER: 917 030 058 660 667

IFSC CODE: UTIB0001165

BRANCH DETAIL: AXIS BANK, CORPORATE BANKING BRANCH, CHENNAI-600 002

MICR CODE: 600211036

என்ற அக்கவுண்ட் நம்பருக்கு பணம் செலுத்திவிட்டு தகவல் சொன்னால், பதிவு செய்து கொள்ளப்படும்.

தொடர்புக்கு, செல்போன்: 99400 22128

மேலும்...

பயிற்சியில் நோட்பேட், பேனா, தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த களப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன் பெற வாரீர்!

முன்பதிவு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.