Published:Updated:

`கறுப்பு, சிவப்பு, ஊதா ரக அரிசி வகைகளுடன் அரிசித் திருவிழா!' - மகாராஷ்டிரா அரசின் புதிய முயற்சி

அரிசி திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர் அஜித்பவார்

கோதுமையை முக்கிய உணவாக கொண்டிருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரிசி திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதுவும் பாரம்பர்ய அரிசி வகைகள் இடம் பெற்றிருந்தது பலருடைய பாராட்டையும் பெற்றது.

மும்பையில் மாநில வேளாண்மைத்துறை மற்றும் ராய்கட் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 நாள்கள் அரிசி மற்றும் உணவு தானிய திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இவ்விழாவில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டு தங்களது பொருள்களைக் கண்காட்சியில் வைத்திருந்ததோடு விற்பனையும் செய்தனர்.

அரிசி (File Pic)
அரிசி (File Pic)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதோடு விழாவில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விவசாயிகள் எவ்வாறு விவசாயம் செய்வது என்பது தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகள் தங்களது விளைபொருள்களை கொண்டு வந்து இந்த திருவிழாவில் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர். அரிசி மற்றும் உணவு தானியத்திருவிழாவில் கறுப்பு, சிவப்பு, ஊதா ரக அரிசி வகைகள் என பல்வேறு விதமான நிறங்களில் அரிசி ரகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து ராய்காட் தாசில்தார் விஜய் தலேகர் கூறுகையில், ``முதல் இரண்டு நாள்களில் அலுவலகம் செல்வோர் மற்றும் சூப்பர் மார்க்கெட், மால்களில் வேலை செய்பவர்கள் அதிக அளவில் ஆர்வமாக பொருள்களை வாங்கிச்சென்றனர். மூன்றாவது நாளில் குடும்பத்துடன் வந்து நிறைய பேர் அரிசி மற்றும் உணவு தானியங்களை வாங்கிச்சென்றனர்" என்று தெரிவித்தார்.

விவசாயிகளிடமும் இந்த திருவிழாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இது போன்ற அரிசி கண்காட்சியை மற்ற மாவட்டங்களிலும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் கடந்த பிப்ரவரி மாதம் 3 நாள்கள் வருடாந்திர அரிசித் திருவிழா நடைபெற்றது. இதனை மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தொடங்கி வைத்தார்.

அரிசி திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர் அஜித்பவார்
அரிசி திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர் அஜித்பவார்

கோதுமையை முக்கிய உணவாக கொண்டிருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரிசி திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதுவும் பாரம்பர்ய அரிசி வகைகள் இடம் பெற்றிருந்தது பலருடைய பாராட்டையும் பெற்றது.

தமிழ்நாட்டிலும் அரசு சார்பில் பாரம்பர்ய அரிசி திருவிழா நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் விருப்பம்.