Published:Updated:

210 கிராமில் ராட்சத முட்டை: நாட்டிலேயே அதிக எடையில் முட்டையிட்ட மகாராஷ்டிரா கோழி!

முட்டையுடன் சவான்

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவருடைய பண்ணையில் கோழி 210 கிராம் எடை கொண்ட முட்டையிட்டுள்ளது. அதை லிம்கா சாதனை புத்தகத்துக்கு விண்ணப்பிப்பது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார். இந்த முட்டைதான் நாட்டிலேயே அதிக எடை கொண்ட முட்டையாக கருதப்படுகிறது.

210 கிராமில் ராட்சத முட்டை: நாட்டிலேயே அதிக எடையில் முட்டையிட்ட மகாராஷ்டிரா கோழி!

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவருடைய பண்ணையில் கோழி 210 கிராம் எடை கொண்ட முட்டையிட்டுள்ளது. அதை லிம்கா சாதனை புத்தகத்துக்கு விண்ணப்பிப்பது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார். இந்த முட்டைதான் நாட்டிலேயே அதிக எடை கொண்ட முட்டையாக கருதப்படுகிறது.

Published:Updated:
முட்டையுடன் சவான்

கோழிகள் வழக்கமாக 50 முதல் 100 கிராம் எடை கொண்ட முட்டைகளை மட்டுமே இடுவது வழக்கம். அபூர்வமாக 140 கிராம் எடை கொண்ட முட்டைகள் இடுவது வழக்கம். இந்தியாவில் இதற்கு முன்பு பஞ்சாப் விவசாயி ஒருவரின் கோழி 162 கிராம் எடை கொண்ட முட்டையிட்டிருந்தது. அந்த முட்டை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. முட்டைகளின் எடைக்கு தக்கபடி தரம்பிரித்து பண்ணைகள் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் கோழி ஒன்று 210 கிராம் எடை கொண்ட முட்டையிட்டுள்ளது. தல்சந்தே என்ற கிராமத்தில் திலிப் சவான் என்ற விவசாயி கடந்த 40 ஆண்டுகளாகக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவருடைய பண்ணையில்தான் ஒரு கோழி 210 கிராம் எடை கொண்ட முட்டையிட்டுள்ளது. இது குறித்து திலிப் சவான் கூறுகையில், ``காலையில் என்னுடைய பண்ணையில் முட்டைகளைச் சேகரித்த போது ஒரு முட்டை மட்டும் மிகவும் பெரிதாக இருந்தது. அதைக் கண்டு ஆச்சர்யத்துடன் எடுத்துச் சென்று முதலில் அதை ஸ்கேல் மூலம் அளந்து பார்த்தேன்.

முட்டையுடன் சவான் மகள்
முட்டையுடன் சவான் மகள்

பின்னர் அதன் எடையைச் சோதித்து பார்த்தபோது 200 கிராம் இருந்தது. மீண்டும் ஒரு முறை அதன் எடையை சோதித்து பார்த்த போது 210 கிராம் இருந்தது. இதனால் எடையை உறுதி செய்து கொள்ள மூன்று இடங்களில் எடையை சோதனை செய்து பார்த்தேன். சரியாக 210 கிராம்தான் இருந்தது. இந்த அளவுக்கு பெரிய முட்டையை இதற்கு முன்பு பார்த்ததில்லை'' என்று தெரிவித்துள்ளார். முட்டைக்குள் 3 அல்லது 4 மஞ்சள் கரு இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த முட்டையை பாதுகாத்து வைத்திருக்கும் திலிப் சவான், அதை லிம்கா சாதனை புத்தகத்துக்கு விண்ணப்பிப்பது குறித்து பரிசீலித்து வருகிறார். இந்த முட்டைதான் நாட்டிலேயே அதிக எடை கொண்ட முட்டையாகக் கருதப்படுகிறது.