Published:Updated:

வைரல் போட்டோ: மாட்டு வண்டிக்கு 3-வது சக்கரத்தை உருவாக்கியது இப்படித்தான் விளக்கும் மாணவர்கள்!

மாட்டு வண்டியில் பொருத்தப்பட்ட சாரதி

இச்சக்கரம் எடைக்கு தக்கபடி ஏற்ற இறக்கத்துடன் ஹைட்ராலிக் முறையில் செயல்படக்கூடியது. இதன் மூலம் மாட்டு வண்டியில் இருக்கும் எடையில் 80 சதவிகிதம் எடை மாடுகளுக்கு குறையும். சக்கரத்தின் கீழ்ப் பகுதியும் தேவைக்கு ஏற்ப சுழலும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்...

வைரல் போட்டோ: மாட்டு வண்டிக்கு 3-வது சக்கரத்தை உருவாக்கியது இப்படித்தான் விளக்கும் மாணவர்கள்!

இச்சக்கரம் எடைக்கு தக்கபடி ஏற்ற இறக்கத்துடன் ஹைட்ராலிக் முறையில் செயல்படக்கூடியது. இதன் மூலம் மாட்டு வண்டியில் இருக்கும் எடையில் 80 சதவிகிதம் எடை மாடுகளுக்கு குறையும். சக்கரத்தின் கீழ்ப் பகுதியும் தேவைக்கு ஏற்ப சுழலும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்...

Published:Updated:
மாட்டு வண்டியில் பொருத்தப்பட்ட சாரதி

கூட்டுறவு சொசைட்டிகளுக்கு மிகவும் புகழ் பெற்ற மகாராஷ்டிராவில் 200-க்கும் அதிகமான சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இந்தச் சர்க்கரை ஆலைகளில் அதிகமானவை கூட்டுறவு சொசைட்டிகளால் நடத்தப்படுபவையாகும். இந்த சர்க்கரை ஆலைகளுக்கு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து மாட்டு வண்டி, டிராக்டர், லாரிகளில் கரும்பு ஏற்றிச் செல்லப்படுவதுண்டு.

கரும்பு அரவை காலங்களில் புனே, நாசிக், சாங்கிலி போன்ற மாவட்டங்களில் முக்கிய சாலைகளில் மாட்டு வண்டியில் கரும்பு ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் வரிசையாகச் செல்வதைக் காணமுடியும். தமிழகத்தில் இந்த மாட்டு வண்டிகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால், மகாராஷ்டிராவில் இன்னும் அதிக அளவில் மாட்டு வண்டியின் பயன்பாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. மாட்டு வண்டியில் டன் கணக்கில் கரும்பை ஏற்றிச்செல்லும் போது வேகத்தடை, சாலைகளில் கிடக்கும் கல் போன்றவற்றில் வண்டி ஏறி இறங்கும்போது மாடுகள் மிகவும் சிரமப்படுவதுண்டு. சில நேரங்களில் மாட்டின் கால் உடைந்து அல்லது வண்டியின் சக்கரம் உடைந்து விபத்துகள் ஏற்படுவதுண்டு.

சாரதியை கண்டுபிடித்த 5 மாணவர்களுடன் அவர்களுக்கு வழிகாட்டிய டாக்டர் சுப்ரியா
சாரதியை கண்டுபிடித்த 5 மாணவர்களுடன் அவர்களுக்கு வழிகாட்டிய டாக்டர் சுப்ரியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டம் இஸ்லாம்பூரில் உள்ள ராஜாராம் நகரில் இருக்கும் ராஜாராம்பாபு சர்க்கரை ஆலைக்கு தினமும் மாட்டு வண்டியில் விவசாயிகள் கஷ்டப்பட்டு கரும்புகளைக் கொண்டு வருவதை அங்குள்ள ராஜாராம்பாபு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மாணவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். விவசாயிகள் மாட்டு வண்டியில் கரும்பை கொண்டு வரும்போது மாடுகளுக்கு ஏற்படும் கஷ்டத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்று இக்கல்லூரியில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிக்கும் சவுரப் போஸ்லே, ஆகாஷ் கதம், ஆகாஷ் கெய்க்வாட், நிகில், ஓம்கார் ஆகியோர் திட்டமிட்டனர்.

இது தொடர்பாக அம்மாணவர்கள் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடம் பேசி இப்பிரச்னைக்கு எப்படி தீர்வு காணலாம் என்று ஆய்வு செய்தனர். வண்டியில் புதிய சக்கரம் ஒன்றை பொருத்தினால் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆய்வுகள் நடத்தினர். இது தொடர்பாகத் தங்களின் கல்லூரி பேராசிரியர்களிடமும் பேசினர். அவர்களின் புதிய முயற்சிக்கு கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகம் நிதியுதவி செய்தது. பேராசிரியர் டாக்டர் சுப்ரியா சாவந்த் மோரே தேவையான வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கினார். இதனால் ஓர் ஆண்டில் சாரதி என்று பெயரிடப்பட்ட சக்கரத்தை உருவாக்கினர். விமானத்தில் இருக்கும் முன்பகுதி சக்கரம் போன்று இதனை மாட்டு வண்டியில் பொருத்திப் பார்த்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து 5 பேர் கொண்ட அணியில் இடம் பெற்று இருக்கும் மாணவர்களில் ஒருவரான போஸ்லேயிடம் பேசுகையில் கூறியதாவது:

எங்களது கல்லூரி வழியாகத் தினமும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டியில் கரும்பு எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அப்போது மாடுகள் படும் கஷ்டத்தைப் பார்த்து அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்து ஒவ்வொரு கிராமமக்ச் சென்று விவசாயிகளிடம் பேசினோம். அதன் அடிப்படையில், கல்லூரி இறுதியாண்டு புராஜக்டாக மாட்டு வண்டியின் முன்பகுதியில் மூன்றாவதாக ஒரு சக்கரத்தை பொருத்த புதிய சக்கரத்தை உருவாக்க ஆரம்பித்தோம். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரிக்குள் அதை செய்து முடித்தோம்.

கரும்பு லோடு ஏற்றிய வண்டியில் பொருத்தப்பட்டுள்ள சாரதி
கரும்பு லோடு ஏற்றிய வண்டியில் பொருத்தப்பட்டுள்ள சாரதி

சாரதி என்று பெயரிட்டுள்ள இந்த சக்கரத்தை இரண்டு மாடுகளுக்கும் நடுவில் பொருத்தும் வகையில் தயாரித்தால் மாடுகளுக்கு பளு குறையும் என்று நினைத்தோம். இச்சக்கரம் எடைக்கு தக்கபடி ஏற்ற இறக்கத்துடன் ஹைட்ராலிக் முறையில் செயல்படக்கூடியது. இதன் மூலம் மாடுகளுக்கு வண்டியில் இருக்கும் எடையில் 80 சதவிகிதம் எடை குறையும். சக்கரத்தின் கீழ்ப் பகுதியும் தேவைக்கு ஏற்ப சுழலும் வகையில் வடிவமைத் திருக்கிறோம். தேவைப்படும்போது இச்சக்கரத்தைப் பொருத்தி பயன்படுத்திவிட்டு கழற்றி வீட்டில் வைத்துக்கொள்ள முடியும். மாட்டு வண்டியில் பொதுவாக எத்தனை டன் எடை ஏற்றப்படுகிறது என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கு தக்கபடி எடையைத் தாங்கும் வகையில் புதிய சக்கரத்தை உருவாக்கினோம்.

மாட்டு வண்டியில் பொருத்தப்பட்ட சாரதி
மாட்டு வண்டியில் பொருத்தப்பட்ட சாரதி

இப்போது சோதனை முயற்சியாகத் தயாரிக்கப்பட்ட புதிய சக்கரத்தை விவசாயிகளிடம் கொடுத்து பயன்படுத்திப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்தது. மாடுகள் இதில் அதிக அளவில் பாதிக்கப்படாமல் இருப்பதோடு விபத்துகளும் குறைந்தன. இதையடுத்து இந்தப் புதிய சாதனத்துக்கு காப்புரிமை பெற விண்ணப்பித்திருக்கிறோம். அதோடு அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் அதிக அளவில் இதைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். இதற்காக சரியான கூட்டு நிறுவனம் ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறோம். விவசாயிகளுக்கு இதைக் குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது லட்சியம்" என்று தெரிவித்தார்.