Published:Updated:

தொடங்கிய மங்குஸ்தான் பழ சீசன்; குற்றாலத்திலிருந்து வந்த பழங்கள்; களைகட்டும் விற்பனை!

மங்குஸ்தான் பழங்கள்
மங்குஸ்தான் பழங்கள்

பழங்களின் அரசி எனப்படும் மங்குஸ்தான் சீசன் துவங்கியுள்ள நிலையில், குற்றாலத்திருந்து பழங்களை வரவழைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

மலைகளின் அரசியான நீலகிரியில் உள்ளூரில் விளையும் விக்கி, தவிட்டு போன்ற அரிய வகை பழங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிலிருந்து இங்கு அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு பழ வகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. தேயிலைத் தோட்டங்களில் ஊடு பயிராக பேரிக்காய், கொய்யா, பிளம்ஸ், பீச் போன்ற வகைகளும் விளைவிக்கப்படுகின்றன.

மங்குஸ்தான் பழங்கள்
மங்குஸ்தான் பழங்கள்
ஒரு கிலோ துரியன் பழம் ரூ.520; கொள்ளை விலையைத் தடுக்க தோட்டக்கலைத்துறையின் புது முயற்சி!

இது மட்டுமல்லாது, மிதவெப்ப காலநிலையில் விளையும் மங்குஸ்தான், துரியன் போன்ற பழ வகைகளும் அரசு பழப் பண்ணைகளில் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் மங்குஸ்தான், துரியன் பழங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இம்முறை மங்குஸ்தான் ஏலத்தில் கடுமையான போட்டி நிலவிதால் விலை ஏற்றம் காரணமாக குற்றாலத்திலிருந்து வரவழைத்து ஊட்டியில் விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய பழ வணிகர் ஒருவர், ``மருத்துவ குணம் நிறைந்த மங்குஸ்தான் பழம் கண், தோல், பற்களின் ஈறு, ஆகிய உறுப்புகளை நோயிலிருந்து காக்கும் தன்மை உள்ளதாக நம்பப்படுகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இதன் சீசன் என்பதால் தற்போது பர்லியார், கல்லாறு பழப்பண்ணை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் மங்குஸ்தான் விளைச்சல் அதிகரித்துள்ளது.

மங்குஸ்தான் பழங்கள்
மங்குஸ்தான் பழங்கள்
ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ₹20,000 மானியம்; விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு!

நீலகிரியில் கட்டுப்படியான விலைக்கு கிடைக்கவில்லை என்பதால் குற்றாலத்திலிருந்து மங்குஸ்தான் பழங்கள் ஊட்டிக்கு கொண்டு வந்துள்ளோம். ஒரு கிலோ ரூ.200 என விற்பனை செய்து வருகின்றோம். பொதுமக்களும் அதிகளவு வாங்கிச் செல்கின்றனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு