Published:Updated:

மேக்கேதாட்டூ அணை விவகாரம்: ``திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே கச்சேரி நடத்துகின்றன!" - மணியரசன்

மேக்கேதாட்டூ

``மேக்கேதாட்டூ அணைக்கு தடை வித்திக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வழக்கை விரைவுபடுத்துவதற்கு சட்ட முயற்சிகள் எதையும் தமிழ்நாடு அரசு செய்யவில்லை."

மேக்கேதாட்டூ அணை விவகாரம்: ``திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே கச்சேரி நடத்துகின்றன!" - மணியரசன்

``மேக்கேதாட்டூ அணைக்கு தடை வித்திக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வழக்கை விரைவுபடுத்துவதற்கு சட்ட முயற்சிகள் எதையும் தமிழ்நாடு அரசு செய்யவில்லை."

Published:Updated:
மேக்கேதாட்டூ

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்ட, அம்மாநில பட்ஜெட்டில் 1,000 ரூபாய் கோடி நிதி ஓதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் ஒத்துழைப்போடு, மேக்கேதாட்டூ அணையை கட்டியே திருவோம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக அரசோ, மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் இதுவரையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தற்போது அணை கட்ட நிதி ஒதுக்கியும் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மெத்தனமாக இருப்பதாக காவிரி உரிமை மீட்புக்குழுவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

காவிரி
காவிரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``கர்நாடக அரசு 2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த மார்ச் 4-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தது. அப்போது மேக்கேதாட்டூவில் அணைகட்ட ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. நிதி நிலை அறிக்கையை முன்வைத்து சட்டப் பேரவையில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, `தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் இந்திய அரசின் ஒப்புதல் பெற்று அணைகட்டியே தீருவோம்' என்று உறுதிபடக் கூறியுள்ளார். சட்டவிரோதமாக மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் துணை நிற்பதை பார்த்து வந்துள்ளோம். ஆனால் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்திலும் இப்போது தி.மு.க ஆட்சிகாலத்திலும் சட்ட விரோத மேக்கேதாட்டூ அணை கட்டப்படாமல் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அணை கட்ட விடமாட்டோம் என்று பொத்தாம் பொதுவில் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் அறிக்கை வெளியிடுவது தொடர் சடங்காகிவிட்டது. கடந்த காலங்களிலும் இதேபோல் தமிழக ஆட்சியாளர்கள் மெத்தனமாக இருந்ததால்தான், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகளை கட்டியது கர்நாடகம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது மேக்கேதாட்டூ அணை பிரச்னையில் கர்நாடகத்துக்கு ஆதரவாகச் செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தரை பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற ஒரு கோரிக்கையைக் கூட தமிழ்நாடு அரசு முன்வைக்கவில்லை. மேக்கேதாட்டூ அணைக்கு தடை வித்திக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வழக்கை விரைவுபடுத்துவதற்கு சட்ட முயற்சிகள் எதையும் தமிழ்நாடு அரசு செய்யவில்லை.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

சட்டத்திற்குப் புறம்பாகக் கர்நாடக அரசு மேக்கேதாட்டூவில் அணைக்கட்ட மத்திய அரசு துணை போய்விடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகள் சார்பில் ஜனநாயக போராட்டங்களை நடத்த தமிழ்நாட்டு ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ முன்முயற்சி எடுக்கவில்லை. தி.மு.க.வும் அ.தி.மு.கவும் காவிரி பிரச்னையில் லாவணி கச்சேரி நடத்திக் கொண்டுள்ளன.

1970-களில் அன்றைய ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியின் மறைமுகத் துணையோடு கர்நாடகம் சட்டவிரோதமாக ஹேமாவதி, ஹேரங்கி, கபினி அணைகளைக் கட்டியதை நாம் அறிவோம். அதனால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் தடுத்து நமக்குப் பேரிழப்பை உண்டாக்கியுள்ளதையும் நாம் அறிவோம்.

தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் ஆதாரமாய் உள்ள காவிரி உரிமையைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்; ஆட்சியாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.