Published:Updated:

தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் உடைந்தது தரைப்பாலம்! கிராம மக்கள் தவிப்பு; விடியல் எப்போது?

உடைந்த தரைப்பாலம்

மாரங்கியூர் - ஏனாதிமங்கலம் இடையே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே மீண்டும் உடைந்து, வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் உடைந்தது தரைப்பாலம்! கிராம மக்கள் தவிப்பு; விடியல் எப்போது?

மாரங்கியூர் - ஏனாதிமங்கலம் இடையே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே மீண்டும் உடைந்து, வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

Published:Updated:
உடைந்த தரைப்பாலம்
"எப்போதெல்லாம் இந்த ஆற்றில் வெள்ளம் வருகிறதோ, அப்போதெல்லாம் இந்தத் தரைப்பாலம் உடைந்துவிடும். கடந்த 15 வருடங்களாக இப்படித்தான் நடக்கிறது. தரைப்பாலம் உடையும்போது மட்டும் தற்காலிகமாக அதைச் சரிசெய்து கொடுப்பார்கள்" - சரியாக 9 மாதங்களுக்கு முன் இதே தரைப்பாலம் உடைந்த போது, மாரங்கியூர் பகுதி மக்கள் கூறிய உருக்கமான வார்த்தைகள் இவை. அவர்கள் கூறியது போலவே, இந்த வருட வெள்ளத்திலும் அந்த தரைப்பாலம் உடைந்துள்ளது.
தென்பெண்ணை ஆறு
தென்பெண்ணை ஆறு

விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான ஆறாக திகழ்ந்து வருகிறது தென்பெண்ணை. இந்த ஆற்றிலிருந்து ஆற்காடு எனும் கிராமத்தின் அருகே பிரியும் 'கோரையாறு', ஏனாதிமங்கலம் எனும் இடத்தில் மீண்டும் தென்பெண்ணையிலேயே இணைகிறது. தென்பெண்ணை மற்றும் கோரையாறுக்கு இடையே மாரங்கியூர், சேத்தூர், பையூர், கொங்கராயனூர் என்ற நான்கு கிராம பகுதிகள் தனித்தீவை போல காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் போன்ற பகுதிகளுக்கு எளிதாக வந்து செல்ல ஏனாதிமங்கலம் - மாரங்கியூர் இடையே செல்லும் கோரையாற்றில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டதாம். ஆனால், அந்த தரைப்பாலம் சிறிது காலங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பின் சரிசெய்யப்பட்ட தரைப்பாலம், ஒவ்வொரு முறையும் கோரையாற்றில் அதிக தண்ணீர் வரும்போதுதெல்லாம் உடைப்பு ஏற்படுவதும், அதனை தற்காலிக தரைப்பாலமாகவே அரசு சரிசெய்தும் வந்துள்ளது. கடந்த 9 மாதங்களுக்கு முன் கோரையாற்றிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த தரைப்பாலம் அடித்துச்சென்றது. அதனால், 4 கிராம மக்களும் அடிப்படை, அவசர தேவைக்கும் சுமார் 15 கி.மீ வரை சுற்றிச்செல்லும் சூழல் ஏற்பட்டது. அதன்பின், சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சிமெண்டால் ஆன உருளை பாலங்களை கொண்டு இந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையாலும், சாத்தனூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகமானது. அதன்படி கோரையாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு

இந்நிலையில், இன்று அதிகாலை நான்கு மணி அளவில் ஏனாதிமங்கலம் - மாரங்கியூர் இடையிலான தரைப்பாலம் வழக்கம் உடைந்து போயுள்ளது. இதனால், 4 கிராம மக்களும் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் மோகன், இன்று காலை உடைந்த தரைப்பாலத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

"ஆற்றில் வெள்ளம் வரும் போதெல்லாம் தரைப்பாலம் அடித்துச் சென்றுவிடுகிறது. எனவே, அரசு எங்களுக்கு நிரந்தரமான ஓர் உயர்மட்ட பாலத்தை அமைத்துத் தர வேண்டும்" என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக வலுக்கிறது.

மாவட்ட நிர்வாகம், அம்மக்களுக்கு நிரந்தர விடியலை ஏற்படுத்தி தருமா?