Published:Updated:

இந்திய ராணுவத்துக்கு மார்த்தாண்டம் தேன்..!

மார்த்தாண்டம் தேன்
பிரீமியம் ஸ்டோரி
மார்த்தாண்டம் தேன்

கோரிக்கை

இந்திய ராணுவத்துக்கு மார்த்தாண்டம் தேன்..!

கோரிக்கை

Published:Updated:
மார்த்தாண்டம் தேன்
பிரீமியம் ஸ்டோரி
மார்த்தாண்டம் தேன்

`கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேனை இந்திய ராணுவ வீரர்களின் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும்’ என்று தேன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது குறித்து மத்திய தேனீ பாதுகாப்பு முன்னேற்றக் குழுவில், தமிழகத்திலிருந்து இடம் பெற்றுள்ள முன்னோடி தேனீ விவசாயி ஹென்றியிடம் பேசினோம். “மார்த்தாண்டத்தைச் சுற்றியுள்ள 500 கிராமங்களில், தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுவருகின்றனர். 1992-ம் ஆண்டு வரை, இந்தியாவிலேயே தேன் உற்பத்தியில் கன்னியாகுமரிதான் முதலிடத்தில் இருந்தது. அப்போது ஏற்பட்ட நோய்த்தொற்றால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து, தேன் உற்பத்தியும் அடியோடு சரிந்தது. அதன் பிறகு உற்பத்தியாகும் தேனில் மூன்றில் ஒரு பங்கைக்கூட விற்பனை செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டோம்.

ஹென்றி
ஹென்றி

கேரளா, கர்நாடகா, கோவாவில் உற்பத்தியாகும் தேனைவிட, மார்த்தாண்டம் தேன் அதிக ஊட்டச்சத்தும் இயற்கைச்சுவையும் உடையது. இந்திய ராணுவ வீரர்களுக்கு மனவலிமை, புத்திக்கூர்மைக்காக முக்கியமான உணவுப் பொருளாகத் தேன் வழங்கப்படுகிறது. இதற்கான தேனை மார்த்தாண்டத்திலிருந்து கொள்முதல் செய்யும்படி மத்திய அரசின் தேனீ பாதுகாப்பு முன்னேற்றக்குழு மூலம் பிரதமர் மோடிக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பினேன். மார்த்தாண்டத்தில் தேனீ ஆராய்ச்சி மையமும், தேன் உற்பத்தியாளர்கள் நலவாரியமும் அமைக்கப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் ஹென்றி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Marthandam Honey
Marthandam Honey

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் அசோக் மேக்ரினிடம் பேசினோம். “இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசால் தேனை, இந்திய ராணுவத்துக்கு நேரடியாக விற்பனை செய்வது சாத்தியமில்லை. எனவே, தேனீ உற்பத்தியாளர்கள் அடங்கிய தனிக்குழு ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் ராணுவம் மட்டுமல்லாமல் தேன் கொள்முதல் செய்யப்படும் பல பெரும் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யலாம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism