Published:Updated:

குறைந்த செலவில் நெல் சாகுபடி; `டிரம் ஷீடர்' இயந்திரம் மூலம் அசத்தும் விவசாயி!

``நாற்றங்காலில் விதைவிட்டு கூலியாள்கள் கொண்டு நடவு செய்ய வேண்டுமென்றால் நாற்றுப்பறி, நடவுக் கூலி என்று ஏக்கருக்கு ரூ.10,000-க்குமேல் செலவு செய்ய வேண்டியிருந்தது. ஆள்கள் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் நடவுப் பணிகளை மேற்கொள்ளவும் முடியவில்லை."

மயிலாடுதுறை மாவட்டம்  நல்லத்துக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் 38 வயதான விவசாயி சக்திவடிவேல். பட்டதாரியான இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையிலான நெல் சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கமாக நாற்றுவிட்டு ஆட்களைக்கொண்டு நடவுசெய்து வந்தவருக்கு, சாகுபடி செலவு அதிகரித்ததால் பெரிய அளவில் லாபம் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்ட வேண்டுமென்ற நோக்கில் யோசித்த சக்திவடிவேல் டிரம் ஷீடர் (நேரடி நெல் விதைப்பு) இயந்திரம் மூலம் குறுவை சாகுபடி மேற்கொண்டு நல்ல மகசூல் பெற்றுள்ளார். அதனையடுத்து தற்போது சம்பா சாகுபடியிலும்  டிரம் ஷீடர் இயந்திரத்தைப் பயன்படுத்தியே நேரடி நெல் விதைப்பு செய்துள்ளார்.

டிரம் ஷீடர்
டிரம் ஷீடர்
வனவிலங்குகளைக் காக்க மறுவாழ்வு மையங்கள்; தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஆர்வலர்கள்!

இதுகுறித்து விவசாயி சக்திவடிவேலிடம் பேசினோம்.

``நாற்றங்காலில் விதைவிட்டு கூலியாள்கள் கொண்டு நடவு செய்ய வேண்டுமென்றால் நாற்றுப்பறி, நடவுக் கூலி என்று ஏக்கருக்கு ரூ.10,000-க்குமேல் செலவு செய்ய வேண்டியிருந்தது. ஆள்கள் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் நடவுப் பணிகளை மேற்கொள்ளவும் முடியவில்லை. அதனால் நேரடி நெல் விதைப்பு செய்ய திட்டமிட்டேன்.

ஆள்களை கொண்டு விதைப்பு செய்வதைவிட டிரம் ஷீடர் இயந்திரத்தைப் பயன்படுத்தி நேரடி விதைப்பு செய்வது பற்றி அறிந்துகொண்டு இந்த இயந்திரத்தை வாங்கினேன். இதனைப்  பயன்படுத்தும்போது ஏக்கருக்கு 10 கிலோ விதை நெல்  போதுமானது.

டிரம் ஷீடர் இயந்திரம்
டிரம் ஷீடர் இயந்திரம்
குறைதீர்ப்பு கூட்டத்தில் பயிர் இழப்பீட்டுக்காக குரல்கொடுத்த எம்.எல்.ஏ, எம்.பி; விவசாயிகள் பாராட்டு!

சரியான இடைவெளியில் விதைநெல் விழுவதால் முளைத்துவந்த பிறகு ஒற்றைப்பட்டம் போட்டு நடவு செய்வது போன்று சரியான இடைவெளிகளில் பயிர் வளர்கிறது. இதனால் களை எடுப்பது, உரமிடுவது போன்ற வேலைகள் செய்வதற்கு எந்த இடையூறும் இல்லை. மேலும் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் வேஸ்ட் கம்போஸ்டு, மீன் அமிலம், அசோஸ்பையிரில்லம், பாஸ்போபாக்டிரீயா, சூடோமோனாஸ் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் செலவு குறைவதோடு நல்ல மகசூலும் கிடைக்கிறது. டிரம் ஷீடர் இயந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்யத்தொடங்கினால் விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூலுடன் நெல் சாகுபடியில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.  அனைத்து விவசாயிகளும் இதனைப்  பயன்படுத்தி பயனடைய வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு