Published:Updated:

வரம்பு மீறிய அதிகாரிகளால் கொந்தளித்த விவசாயிகள்; சமாதானப்படுத்திய ஆட்சியர்; என்ன நடந்தது?

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேச வாய்ப்பு கேட்டதற்கு, ``உன் வயசென்ன... நீ என்ன என்னைக் கேள்வி கேட்பதற்கு" என வேளாண்துறை அதிகாரி பதிலளித்ததாக ஆட்சியரிடம் விவசாயி வேதனையுடன் தெரிவித்தார்.

வரம்பு மீறிய அதிகாரிகளால் கொந்தளித்த விவசாயிகள்; சமாதானப்படுத்திய ஆட்சியர்; என்ன நடந்தது?

விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேச வாய்ப்பு கேட்டதற்கு, ``உன் வயசென்ன... நீ என்ன என்னைக் கேள்வி கேட்பதற்கு" என வேளாண்துறை அதிகாரி பதிலளித்ததாக ஆட்சியரிடம் விவசாயி வேதனையுடன் தெரிவித்தார்.

Published:Updated:
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதநிதிகள் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் பேசிய திருவாடனை வட்டார விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர், ``கடந்த முறை நடைபெற்ற வேளாண் பட்ஜெட் தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தில் திருவாடனை பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து வேளாண் துணை இயக்குநர் சேக் அப்துல்லாவிடம் கேட்டபோது, `உன் வயசென்ன நீ என்ன என்னைக் கேள்வி கேட்க' எனத் திமிராகக் கூறுகிறார்.

கூட்டத்தில் பேசிய விவசாயி கவாஸ்கள்
கூட்டத்தில் பேசிய விவசாயி கவாஸ்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயியைப் பார்த்து ஒரு பொறுப்பில் உள்ள அதிகாரி இப்படி பேசலாமா, இதற்கு எனக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என ஆவேசத்துடன் தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற விவசாயிகள் `சரி பேசிக்கொள்வோம்... சத்தம்போட வேண்டாம்' எனக் கவாஸ்கரிடம் தெரிவித்தனர்.

ஆனால் கவாஸ்கர், ``உங்கள் கருத்துகளை பேச அன்று வாய்ப்பளிக்கப்பட்டது, அந்த வாய்ப்பு எங்கள் திருவாடனை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை அதனால் எனது ஆதங்கத்தை ஆட்சியரிடம் கூறுகிறேன்" என வேதனையுடன் பேசினார். ``இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன், கோபப்படாதீர்கள்'' எனக் கூறி ஆட்சியர் அமர வைத்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து விவசாயி கவாஸ்கரிடம் நாம் பேசியபோது, ``வேளாண் பட்ஜெட் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி திருவாடனை ஒன்றியத்தில் இருந்து நானும் என்னுடன் சில விவசாயிகளும் பங்கேற்றோம். அப்போது வேளாண்மை துணை இயக்குநர் சேக் அப்துல்லா எழுதி அனுப்பிய பெயர் பட்டியலில் உள்வர்களுக்கு மட்டுமே பேச வாய்ப்பளித்தார்.

விவசாயி கவாஸ்கர்
விவசாயி கவாஸ்கர்

நாங்கள் நீண்ட நேரமாகப் போராடியும் பட்ஜெட்டில் எங்கள் பகுதிக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெற முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டோம். இதையடுத்து கூட்டம் முடிந்து வெளியில் வந்த அவரிடம் நியாயம் கேட்டதற்கு, `உன் வயது என்ன நீ என்ன என்னைக் கேள்விகேட்பது' என அதிகார தோரணையில் கேட்டுச் சென்றார்.

விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்காகத்தான் வேளாண்துறை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வேளாண் அதிகாரிகள் விவசாயிகளைத் துளியும் மதிக்காமல், அவர்களது குறைகளைக் காதுகொடுத்து கேட்பது கூட கிடையாது" வேதனையுடன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பரமக்குடி விவசாயி நாகரத்தினம் பேசும்போது, ``பரமக்குடியில் 10 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளேன். இந்நிலையில், வேளாண்துறை அலுவலகத்தில் இருந்து மானியவிலையில் நெல் அறுவடை எந்திரம், வைக்கோல் கட்டுகள் கட்டும் எந்திரமும் வாடகைக்குக் கேட்டிருந்தேன். செயற்பொறியாளர் மாணிக்கவேல் 13,000 பணம் கட்டுமாறு கூறினார். அதன்பேரில் ஆன்லைன் மூலம் பணம் கட்டிவிட்டு 6 மாதமாக அலைகிறேன். இதுவரை நெல் அறுவடை எந்திரமும் வழங்கவில்லை, வைக்கோல் கட்டுகள் கட்டும் எந்திரமும் வழங்கவில்லை. கேட்டால் `டிரைவர் இல்லை; சாவி இல்லை' என ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அனுப்புகிறார். எந்திரங்கள் உள்ளதா என்று நேரில் சென்று பார்த்தபோது எந்திரங்களை அவர் தனியாருக்கு கூடுதல் வாடகைக்கு விட்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு முறையான பதில் அளிக்காமல் அலைக்களித்து வருகிறார். இதற்கு இன்று முடிவு செய்து தாருங்கள்" என்றார்.

விவசாயி நாகரத்தினம்
விவசாயி நாகரத்தினம்

அவரது குற்றச்சாட்டு உண்மையா எனச் செயற்பொறியாளர் மாணிக்க வேலிடம் ஆட்சியர் சங்கலால் குமாவத் கேட்டபோது, பேச தடுமாறிய அவர், டிராக்டர்கள் பழுதாகியுள்ளதாகவும், வேண்டும் என்றால் அவர்கள் கட்டிய பணத்தைத் திருப்பி கொடுப்பதாகத் தெரிவித்தார். இதைக்கேட்டு கடுப்பான மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் 6 மாதமாக அலைவதாகத் தெரிவிக் கின்றனர். பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாகப் பொறுப்பற்ற முறையில் பதில் சொன்னால் என்ன அர்த்தம் எனக் கடுமையாகச் சாடினார்.

இதையடுத்து விவசாயி நாகரத்தினம், ``பணத்தைத் திரும்ப வாங்க மாட்டேன். ஆறு மாதமாக அலைந்துள்ளேன். தனியார் வைத்துள்ள கொள்முதல் எந்திரங்கள் பல வருடமாக நன்றாக ஓடுகிறது. அரசு வழங்கி ஆறு மாதத்துக்குள் எந்திரம் எப்படி பழுதாகும். இதில் செயற்பொறியாளர் மாணிக்கவேல் முறைகேடு செய்துள்ளார். மாவட்ட ஆட்சியர் முறையாக விசாரணை செய்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டதால் விவசாயிகள், அதிகாரிகள் அனைவர் மீதும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதையடுத்த மாவட்ட ஆட்சியர் அடுத்த கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளும்போது இதுபோன்ற புகார்கள் வராதவாறு நடந்துகொள்ள அதிகாரிகளை அறிவுறுத்துவதாக உறுதியாக கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism