Published:Updated:

ஆன்லைன் நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடி; நெல் மூட்டைகளை சாலையில் வீசிய விவசாயிகள்!

நெல்

60 சிப்பம் பதிவு செய்யப்பட்டால் 40 சிப்பம் மட்டுமே ஆன்லைனில் கணக்கில் காண்பிப்பதாகவும், பல்வேறு கிராமங்களின் பெயர்கள் ஆன்லைனில் இல்லை என்றும் இதனால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளுடன் தவித்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

ஆன்லைன் நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடி; நெல் மூட்டைகளை சாலையில் வீசிய விவசாயிகள்!

60 சிப்பம் பதிவு செய்யப்பட்டால் 40 சிப்பம் மட்டுமே ஆன்லைனில் கணக்கில் காண்பிப்பதாகவும், பல்வேறு கிராமங்களின் பெயர்கள் ஆன்லைனில் இல்லை என்றும் இதனால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளுடன் தவித்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

Published:Updated:
நெல்

மயிலாடுதுறை அருகே ஆன்லைன் குளறுபடிகளை சரிசெய்து, நெல் கொள்முதல் செய்யக்கோரி  விவசாயிகள் நெல் மூட்டைகளை சாலையில் போட்டு  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாலையில் வீசப்பட்ட நெல் மூட்டைகள்
சாலையில் வீசப்பட்ட நெல் மூட்டைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் துவங்கப்பட்டு நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் ஏக்கருக்கு 60 சிப்பம் சிட்டாடங்கல் பெற்று ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஆன்லைன் குளறுபடியால் விவசாயிகளின் ஊர், பெயர் விபரங்கள் இல்லாததால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், மயிலாடுதுறை அருகே இளந்தோப்பு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைன் குளறுபடியால் நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து விவசாயிகள் பட்டவர்த்தி கடை வீதியில் சாலையில் நேற்று நெல் மூட்டைகளைப் போட்டு, சாலையை சுற்றி கயிறு கட்டி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 60 சிப்பம் பதிவு செய்யப்பட்டால் 40 சிப்பம் மட்டுமே ஆன்லைனில் கணக்கில் காண்பிப்பதாகவும், பல்வேறு கிராமங்களின் பெயர்கள் ஆன்லைனில் இல்லை என்றும் இதனால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளுடன் தவித்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். உடனடியாக ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் விவசாயிகள்

வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் வைதீஸ்வரன்கோயில்  -  மணல்மேடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism