Published:Updated:

மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகள்; குறைந்த நெல் கொள்முதல் நிலையங்களால் கவலையில் விவசாயிகள்!

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

நேற்றிரவு திடீரென பெய்த கனமழையால் மணல்மேடு, கடக்கம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாயின.

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக  அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் நேற்று பெய்த கடும் மழையில் நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே தாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்திடவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
நெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..!'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 70,000 ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்து வருவது வழக்கம்.

கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு நேரடி கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு ஒரு நாளைக்கு 40 கிலோ எடைகொண்ட 800 நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும்  திறக்கப்பட்டு 250 முதல் 500 நெல் மூட்டைகள்  மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் பெரும்பாலான விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக கடந்த 10 நாட்களாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்றிரவு திடீரென பெய்த கனமழையால் மணல்மேடு, கடக்கம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாயின. 

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
80 நாட்களாக கொள்முதல் செய்யப்படாத 4,000 மூட்டை நெல்; வீணான 1000 மூட்டைகள்; கவலையில் விவசாயிகள்!

இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்களைத் திறந்து விவசாயிகளைக் காக்க வைக்காமல் உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு