Published:Updated:

மயிலாடுதுறை: `அழுகிக் கிடக்கும் தர்பூசணி; வயல்பக்கமே போறதில்லை!’ - கலங்கும் விவசாயிகள்

தர்பூசணி
தர்பூசணி

விலையாகாத தர்பூசணிப் பழங்கள் வயலில் அழுகும் அவலம் ஏற்பட்டுள்ளதைக் காண முடியாமல், வயல் பக்கமே போவதில்லை எனக் கண்ணீர் வடிக்கிறார்கள் மயிலாடுதுறை விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புஞ்சை நிலங்கள் மிகுந்த சிங்கான் ஓடை, இளையமதுகூடம் போன்ற கிராமங்களில் பல ஏக்கர் நிலத்தில் தர்பூசணி பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கால் தர்பூசணியை விற்பனை செய்ய முடியாமல் வயிலிலேயே அழுகிக் கிடக்கின்றன. சாகுபடி செய்த முதலீடு மற்றும் லாபத்தையும் இழந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தர்பூசணி
தர்பூசணி

கோடைக்கால பயிரான தர்பூசணி உடல் வெப்பத்தை தணிக்ககூடியது. கோடைக்காலத்தில் அதிகம் விற்பனை ஆகக் கூடியது. குறைந்த செலவில் அதிக லாபம தரக்கூடியது. எனவே, இதை மயிலாடுதுறை மாவட்டம் புஞ்சை நிலங்கள் அதிகமுள்ள சிங்கான் ஓடை, இளையமதுகூடம் போன்ற கிராமங்களில் பயிரிடுவர். இங்கு விளையக்கூடிய தர்பூசணி பழங்கள் சென்னை, கடலூர், திருச்சி, மதுரை,கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கு அதிக அளிவில் அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது. வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வந்து பழங்களை மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். இந்தப் பழங்கள் ஒவ்வொன்றும் 3 கிலோ முதல் 10 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். இங்கு விளையும் தர்பூசணி பழங்கள் சுவை மிகுந்தது என்பதால், வெளியூர்களிலிருந்து போட்டிப் போட்டு வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் கோடைக்காலத்தை நம்பி பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி, தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வராததால் விற்பனை ஆகவில்லை. இதனால், பழங்களை அறுவடை செய்யாமல் வயல்களிலேயே விட்டுவிட்டதால் தர்பூசணி பழங்கள் முழுவதும் அழுகி விணாகிக் கிடக்கின்றன.

`பயிரிட்ட நிலத்திலே அழுகும் தர்பூசணிகள்!’ - ஊரடங்கால் கலங்கும் விவசாயிகள்

இதுபற்றி தர்பூசணி விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ``எங்களுக்கு தர்பூசணி சாகுபடிதான் மிகப் பெரிய வருமானம் தரக்கூடிய வாழ்வாதாரம். இந்தாண்டு நாங்களே மலைக்கிற அளவுக்கு நல்ல விளைச்சல். ரொம்ப சந்தோஷமா இருந்தோம். ஆனால், உசிரைப் பறிக்கிற கொரோனா எங்க வருமானத்தைக் கெடுக்குமுன்னு கனவிலும் நினைக்கலை. வெளியூர் வியாபாரிகளும் வரலை.

தர்பூசணி
தர்பூசணி

உள்ளூர் வியாபாரிகளும் ஒரு ரூபாய்க்குகூட தர்பூசணி பழங்களை வாங்க முன் வரலை. வயலில் அழுகிக் கிடக்கும் தர்பூசணியைப் பார்க்க மனசு வேதனையா இருக்கு . அதனால் வயல் பக்கம் போறதே இல்லை" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு