Published:Updated:

``பணம் போட்டு பண்ணை அமைச்சா மட்டும் ஜெயிச்சிட முடியாது!" - ஆடுகள் வளர்ப்பு... பிரைவைட் லிமிடெட்!

அருண்குமார்
அருண்குமார்

25 ஆடுகளுடன் 'விநாயகர் கோட் ஃபார்ம்' என்ற ஆட்டுப் பண்ணையை ஆரம்பித்தார் அருண்குமார்

'படிச்ச படிப்புக்கு சரியான வேலை கிடைக்கலை' எனப் புலம்பிக் கிடக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், எம்.பி.ஏ படித்துவிட்டு, ஆட்டுப் பண்ணை நடத்தி, இன்று ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதித்து ஆச்சர்யப்படுத்துகிறார் ஈரோட்டைச் சேர்ந்த அருண்குமார்.

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் அருகேயுள்ள தோப்புக்காடுதான் அருண்குமாரின் சொந்த ஊர். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், எம்.பி.ஏ மார்க்கெட்டிங் படித்திருக்கிறார். 'ஏதாவது ஒரு பெரிய ஐ.டி கம்பெனியில் வேலை கிடைத்துவிட்டால், குடும்பத்தின் நிலைமையே மாறிவிடும்' என பெற்றோரும், உறவினர்களும் நம்பிக்கையில் இருந்திருக்கின்றனர்.

ஆனால் அருண்குமாரோ, 'ஆட்டுப் பண்ணையை உருவாக்கி பிசினஸ் செய்யலாம் என்றிருக்கிறேன்' என்று இறங்க, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறது. வழக்கம்போல குடும்பத்தார், உறவினர்களிடமிருந்து எக்கச்சக்கமான வசவுகள், எச்சரிக்கைகள்.

இவற்றில் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், 25 ஆடுகளுடன் 'விநாயகர் கோட் ஃபார்ம்' என்ற ஆட்டுப் பண்ணையை ஆரம்பித்தார் அருண்குமார். ஆடுகளை வளர்ப்பதில் பத்து வருடங்கள் கடுமையான உழைப்பைக் கொடுக்க, இன்றைக்கு அது பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாறும் அளவுக்கு பெரும் வளர்ச்சிகண்டிருக்கிறது.

``பணம் போட்டு பண்ணை அமைச்சா மட்டும் ஜெயிச்சிட முடியாது!" - ஆடுகள் வளர்ப்பு... பிரைவைட் லிமிடெட்!

"இன்றைக்கு கொரோனாவால் ஒட்டுமொத்த உலகமும் அடிபட்டுக் கிடக்கு. ஆனா, உணவு சார்ந்த பொருள்கள் குறிப்பாக, இறைச்சிக்கான தேவைகள் குறைந்தபாடில்லை. நாட்டுக்கோழிக்கு மாற்றா பிராய்லர் சிக்கன் இருக்கு. ஆனா, ஆட்டுக்கறிக்கு மாற்றா எதுவும் இல்லை. அதனாலதான் ஆட்டிறைச்சியோட தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே இருக்கு.

இன்றைய நிலவரப்படி, ஆட்டை உயிர் எடை ஒரு கிலோ 450-500 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்கிறோம். ஆட்டுப் பால்ல சோப்பு தயாரிக்கிறோம். மாசம் கிட்டத்தட்ட 150 சோப் வரைக்கும் மக்கள் வாங்குறாங்க. விரும்பிக் கேக்குறவங்களுக்கு ஆட்டுப்பாலும் கொடுக்குறோம்.

'நான் 50 ஆடு வாங்கி பண்ணை போட்டா, மாசம் எவ்வளவு லாபம் கிடைக்கும்'னு பலரும் கேக்குறாங்க. நல்ல கேள்விதான். வெறும் வருமானத்தை மட்டும் மனசுலவெச்சுக்கிட்டு இந்தத் தொழிலைச் செய்ய வராதீங்க, ப்ளீஸ். இந்தத் தொழிலை உணர்வுபூர்வமாக அணுகினாத்தான் வெற்றி கிடைக்கும்.

பணத்தைப் போட்டு பண்ணை அமைச்சா மட்டும் ஜெயிச்சிட முடியாது. தினமும் குறைஞ்சது ரெண்டு மணி நேரமாவது பண்ணையில இருக்கணும். இந்தத் தொழில்ல இருக்கிற நெளிவுசுளிவுகளை மொதல்ல கத்துக்கணும். என்ன பிரச்னை, அதை எப்படிச் சமாளிக்கணும்கிறதைத் தெரிஞ்சுக்கணும். லாபம் சம்பாதிக்கக் குறைஞ்சது 4-5 வருஷமாவது காத்திருக்கணும். பொறுமையும் போராட்டக் குணமும் தேவை. சிரமப்படாம எந்தத் தொழில்லயும் யாரும் ஜெயிக்க முடியாது'' என்றார்.

அருண்குமாரின் ஆட்டுப் பண்ணையை ஸ்பாட் விசிட் செய்வதுடன், அவர் கடந்து வந்த சவால்கள் நிறைந்த வெற்றிப் பாதையைத் தெரிந்துகொள்ள நாணயம் விகடன் இதழின் முழு கட்டுரை இங்கே... க்ளிக் செய்க... https://bit.ly/3fbGjjz > லாபத்தில் ஆட்டுப் பண்ணை பிசினஸ்..! - ஆச்சர்யப்படுத்தும் எம்.பி.ஏ பட்டதாரி! https://bit.ly/3fbGjjz

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு