Published:Updated:

`மொதல்ல நான் விவசாயி; அப்புறம்தான் எம்.எல்.ஏ!'- நடவுப்பணியை தொடங்கிய மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன்

நடவுப்பணியை தொடங்கிய பூமிநாதன்
நடவுப்பணியை தொடங்கிய பூமிநாதன்

இவர் வைகோவுடன் சேர்ந்து பொடா சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்தவர். மக்கள் பிரச்சனைகளில் முன் வந்து நிற்கும் மதிமுக மாநகர செயலாளரான புதூர் மு.பூமிநாதனை அறியாத மக்கள் மதுரையில் இல்லை.

வாழ்க்கை முறை மாறிவிட்டால் பாரம்பர்யத் தொழிலான விவசாயத்தை பலரும் கைவிட்டு விடும் நிலையில், அதிக ஆதாயம் தரும் தொழில் என்று கருதாமல் மக்களுக்கு உணவளிக்கும் உன்னத பணியாக நினைத்து விவசாயத்தை விடாமல் தொடர்கிறவர்கள் நம்முடன் அரிதாக வாழ்கிறார்கள்.

நடவுப்பணியை தொடங்கிய பூமிநாதன்
நடவுப்பணியை தொடங்கிய பூமிநாதன்
`ஆடம்பரம் இல்ல; அசராத வேகம்!' - மா.சுப்பிரமணியனின் ஊட்டி ட்ரிப்பைக் கொண்டாடும் மக்கள்

அப்படி ஒருவர்தான் மதுரை தெற்குத் தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினரான மு.பூமிநாதன். வைகோவுடன் சேர்ந்து பொடா சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்தவர். மக்கள் பிரச்சனைகளில் முன் வந்து நிற்கும் மதிமுக மாநகர செயலாளரான புதூர் மு.பூமிநாதனை அறியாத மக்கள் மதுரையில் இல்லை.

தேர்தலில் போட்டியிட்டு இந்த முறை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பெரும்பாலான அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பத்தினரும் வேறு வேறு தொழில்களில் முதலீடுகளை செய்து வரும் நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையிலும் விவசாயத்தை தொடர்ந்து செய்து வருகிறார் பூமிநாதன்.

புதூர் மு.பூமிநாதன்
புதூர் மு.பூமிநாதன்

இன்று மதுரை அருகிலுள்ள அவருடைய நிலத்தில் விவசாயப் பணியை பாரம்பர்ய முறைப்படி தொடங்கியதை பலரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.

இதுபற்றி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதனிடம் பேசினோம். `` நான் எப்பவும் விவசாயிதான். பூர்வீகமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே அரியமங்கலத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். மதுரைக்கு வந்த பின்பும் விவசாயத்துடன் தொடர்பு இருக்க வேண்டுமென்பதால் அப்பன்திருப்பதி அருகே நிலம் வாங்கி, பல வருடங்களாக விவசாயம் செய்து வருகிறோம்.

நடவுப்பணியை தொடங்கிய பூமிநாதன்
நடவுப்பணியை தொடங்கிய பூமிநாதன்

அரசியல்வாதியாக, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு விவசாயிதான். தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், முதல் போகத்துக்கான நடவுப்பணியை இன்று தொடங்கினேன். மக்கள் பணிகளுக்கிடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் விவசாயப் பணிகளில்தான் ஈடுபட்டு வருகிறேன்" என்றார்.

மக்கள் பிரதிநிதியானாலும் பாரம்பர்யத் தொழிலான விவசாயத்தை விடாமல் பூமிநாதன் தொடர்வது, போற்றத்தக்கதே! அதேபோல, ஒரு விவசாயியாக தான் அனுபவிக்கும் பிரச்னைகளை அப்படியே சட்டமன்றத்திலும் எதிரொலித்து, விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வும் தேடித்தந்தால், விவசாயிகள் உலகமே பொங்கல் வைத்துக் கொண்டாடும் பூமிநாதனை!

அடுத்த கட்டுரைக்கு