பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டுநீர், தெளிப்பு நீர் மழைத்தூவான் பாசனத்திற்கான கருவிகள், பி.வி.சி குழாய்களை மானியத்தில் பெற, விவசாயிகள் பி.எம்.கே.ஓய்.எஸ் இணையத்தை பயன்பாட்டில் வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், அயன்வடமலாபுரத்தைச் சேர்ந்த கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசியபோது, “விவசாயத்தை மேம்படுத்த அரசு மேலைநாட்டு தொழில்நுட்ப வசதிகளுடன் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு கருவிகளை மானியமாக வழங்கி வருகிறது. அதனடிப்படையில் பருவநிலை மாற்றங்களால் மழை அளவு குறைந்து வருவதால் , குறைந்தளவு தண்ணீரில் முழுமையான சாகுபடி செய்வதற்கு பயிர்களுக்கு தேவையான நீரை துளித்துளியாக வேர்ப் பகுதியில் நேரடியாக வழங்கி பயிர்கள் செழிப்பாக வளர உதவுகிறது.

பயிரை சுற்றியுள்ள களையை முழுமையாக கட்டுப்படுத்தி குறைந்தளவு உரத்தில் அதிக மகசூலை பெருக்க நுண்ணீர் பாசன திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் சிறுகுறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75% மானியத்தில் சொட்டுநீர், தெளிப்பு நீர் மழைத்தூவான் பாசனத்திற்கான கருவிகள், பி.வி.சி குழாய்கள் மற்றும் பாகங்கள் மின்மோட்டார், அரசால் மானியத்தில் வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇவற்றை விநியோகம் செய்ய ஆண்டுதோறும் தனியார் கம்பெனிகளிடம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு குறைந்த மதிப்பீட்டில் குழாய்கள் விற்கும் நிறுவனங்களிடம் அரசு ஒப்பந்தம் செய்கிறது. கடந்த 2 மாதத்திற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட அரசின் நிதிநிலை அறிக்கையில் போதிய நிதி, இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதில் பயன்பெற விவசாயிகள் தங்களது நிலப்பட்டா, அடங்கல், ஆதார், குடும்ப அட்டை, நிலம் வரைபடம் ஆகியவற்றை பிரதம மந்திரி நுண்ணீர் பாசன இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இந்த இணையதளத்தில் விவசாயிகளின் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. இதனால், தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க உள்ள விவசாயிகள் பயன்பெற முடியாத நிலை உள்ளது. இதுதவிர நுண்ணீர் பாசன பி.வி.சி குழாய்கள் விநியோகம் செய்ய, தனியார் நிறுவனத்திடம் அரசு இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மானியமாக விவசாயிகளுக்கு பிவிசி குழாய் மற்றும் மோட்டார் கிடைப்பதில் கால தாமதமாகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் நிலத்தடியில் குழாய் பதிப்பதற்கு வசதியாக இருக்கும். எனவே காலம் தாழ்த்தாமல் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெற நுண்ணீர் பாசன இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடவும், குழாய் விநியோகிக்கும் நிறுவனங்களில் ஒப்பந்தம் செய்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகைதீனிடம் பேசியபோது, “பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான விவசாயிகளிடமிருந்து விண்ணப்பம் மற்றும் அது தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று வருகிறோம். பதிவேற்றம் செய்வதில் இணையத்தில் சில கோளாறு இருந்தது. அது சரி செய்யப்பட்டுவிட்டது. சொட்டுநீர்ப் பாசன பி.வி.சி குழாய்களின் விலை ஏற்றம் காரணமாக தனியார் நிறுவனங்கள் அதன் விலையை உயர்த்தியுள்ளன. அந்நிறுவனங்களிடம், வேளாண்மைத்துறையின் இயக்குனர் அலுவலகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுவிடும்” என்றார்.