Published:Updated:

உற்பத்திச் செலவு ரூ. 49... வருமானம் ரூ. 32... பால் விலையேறியும் பயனில்லை!

 ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்குமார்

கொதிக்கும் பால் உற்பத்தியாளர்கள்!

பிரச்னை

பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் ஒரு லிட்டர் மாட்டுப் பாலுக்கு 4 ரூபாயும், எருமைப் பாலுக்கு 6 ரூபாயும் விலை ஏற்றிக் கொடுத்தார். இது பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மையைத் தந்திருக்கிறதா என்று விசாரித்தால், ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்வதற்கு 49.84 ரூபாய் செலவு ஆவதாகவும், பால் விலை 32 ரூபாய்க்கு உயர்த்தப்பட்ட பிறகும் ஒரு லிட்டர் பாலுக்கு 17.84 ரூபாய் நஷ்டம் அடைவதாகவும் கணக்கு கொடுக்கிறார்கள் விவசாயிகள்.

உற்பத்திச் செலவு ரூ. 49... வருமானம் ரூ. 32... பால் விலையேறியும் பயனில்லை!

இதுபற்றி, கிருஷ்ணகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராம கவுண்டர், “நாங்கள் தமிழக அரசுக்குக் கடந்த ஐந்தாண்டுகளாகப் பால் விலையை உயர்த்த வேண்டுமெனக் கோரிக்கை வைத்துப் போராடி வந்தோம். நீண்டகாலத் தாமதத்திற்குப் பிறகு தற்போது தமிழக முதல்வர் பசு மாட்டுப் பால் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் விலை உயர்த்தியும், எருமை மாட்டுப் பால் ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் விலை உயர்த்தியும் உத்தரவிட்டுள்ளார். இதனால், 28 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லிட்டர் பசுமாட்டுப் பால் 32 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படுகிறது. 35 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லிட்டர் எருமை மாட்டுப் பால் 41 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 ராம கவுண்டர்
ராம கவுண்டர்

தமிழ்நாட்டில் பசுமாட்டுப் பால் உற்பத்தியாளர்கள் 99% இருக்கிறார்கள். எருமை மாட்டுப் பால் உற்பத்தியாளர்கள் வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்கிறார்கள். அதனால், பசுமாட்டுப் பால் கொள்முதலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். தமிழக அரசு கொழுப்புச்சத்து 4.5, இதர சத்து 8.5 அளவுடைய பசுமாட்டுப் பாலுக்கே 4 ரூபாய் விலை உயர்த்தி, 32 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
 ஜெயக்குமார்
ஜெயக்குமார்

ஆனால், உண்மை நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள 99% பசுமாடுகள் அரசு குறிப்பிடும் அளவுடைய பால் கறப்பதில்லை. சில பசு மாடுகள் கொழுப்புச்சத்து 4.0-மும், இதரச் சத்து 8.0-மும் அளவுடைய பாலையே மாடுகள் கறக்கின்றன. இந்தப் பாலுக்கு 2.75 ரூபாய் விலை உயர்வுதான் கிடைக்கும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பசுமாடுகள் கொழுப்புச்சத்து 3.0-மும், இதரச் சத்து 7.7-ம் உடைய பால்தான் கறக்கின்றன. இந்தப் பாலுக்கு வெறும் 1.75 ரூபாய் விலை உயர்வே கிடைக்கும்.

இதைத்தவிர ஒன்றியத்திற்காகவும், இணையத்திற்காகவும் 2 ரூபாயும், பால் கூட்டுறவுச் சங்க வளர்ச்சிக்காக 1.25 ரூபாயும் என 3.25 ரூபாய் பிடித்துக்கொள்கிறார்கள். எங்களுக்கு ஒரு லிட்டர் பாலின் விலையிலிருந்து வெறும் 75 பைசா மட்டுமே கிடைக்கிறது. ஆக, பால் விலை உயர்வு என்பது ஆவின் பால் நிர்வாகிகளுக்கும், ஊழியர்களின் சம்பளம் உயர்த்தவும் பயன்படுமே தவிர, பால் உற்பத்தியாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. விலை உயர்வு என்பது உற்பத்தியாளர்களுக்கு வெறும் கண்துடைப்பு நாடகமே’’ என்றார்.

உற்பத்திச் செலவு ரூ. 49... வருமானம் ரூ. 32... பால் விலையேறியும் பயனில்லை!

சேலம் மாவட்டத்தில் சிறந்த பால் உற்பத்தியாளராக அங்கீகரிக்கப்பட்ட பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பால் விவசாயி ஜெயக்குமார், “தமிழகத்தில் 100 சதவிகிதம் கலப்பினப் பசுக்களே வளர்க்கப்படுகின்றன. இவை நாள் ஒன்றுக்குச் சராசரியாக 6 லிட்டர் முதல் 7 லிட்டர் வரை பால் கொடுக்கும் திறன் கொண்டவையாக உள்ளன. இவை ஒரு ஈற்றுக்குச் சுமார் 1,800 லிட்டர் பால் கொடுக்கும் திறன் கொண்டவை.

பால் விலை உயர்வு ஆவின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவே பயன்படும். பசு மாட்டுப் பால் லிட்டருக்கு 40 ரூபாய், எருமை மாட்டுப் பால் 50 ரூபாய் என உயர்த்த வேண்டும்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கலப்பினப் பசுக்கள் கொடுக்கும் பால் லிட்டர் ஒன்றுக்கு 400 கிராம் அடர் கலப்புத் தீவனம் அளிக்க வேண்டும். அன்றாட உடல் பராமரிப்புக்காக ஒன்று முதல் இரண்டு கிலோ வரையிலும் சினைக்காலப் பராமரிப்பில் தினமும் 2 கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். அடர் கலப்புத் தீவனம் அல்லது தவிடு, புண்ணாக்கு, தானிய மாவு வகைகளைக் கறவை காலத்தில் ஒரு நாளைக்குக் கொடுக்கத் தவறும்போது அன்றைய பால் உற்பத்தி அளவு குறையும். மீண்டும் பழைய பால் உற்பத்தி அளவு நிலை உயர்த்துவதற்குக் கறவையைக் கொண்டு வருவதற்குப் பல மடங்கு தீவனம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படியிருக்கும் நிலையில் மாடுகளைப் பராமரிப்பதற்கான கூலி, இன்ஷூரன்ஸ், வைக்கோல், பசுந்தீவனம், அடர்தீவனம், மருத்துவச் செலவு, கொட்டகைக்கான தேய்மானம், போக்குவரத்து எனப் பலவிதங்களில் பால் உற்பத்தியாளருக்குச் செலவு இருக்கிறது. இவற்றையெல்லாம் சேர்த்து மொத்தமாகக் கணக்கு போட்டால் ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய 49.84 ரூபாய் செலவாகிறது. இதில் நிரந்தரச் செலவான 4.80 ரூபாய் கழித்தால்கூட 45.04 ரூபாய் கண்டிப்பாக ஆகும். அரசு பால் விலை 4 ரூபாய் உயர்த்தியிருப்பதாகச் சொல்கிறது. உண்மையில் ஒரு லிட்டருக்கு நாங்களே 17.84 ரூபாய் நஷ்டத்தில் விற்பனை செய்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை’’ என்றார் வருத்தத்துடன்.

அரியா கவுண்டர்
அரியா கவுண்டர்

இதுபற்றி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் அரியா கவுண்டர், “தமிழ்நாட்டில் ஒரு நாளைக்குத் தோராயமாக 1 கோடியே 90 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மழைக்காலங்களில் கூடுதலாகவும், கோடைக்காலங்களில் குறைவாகவும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்தப் பாலை அரசு ஆவின் நிலையங்களில் சராசரியாக 34 லட்சம் லிட்டரும், தனியார் பால் கொள்முதல் நிலையங்களில் சராசரியாக 60 லட்சம் லிட்டரும் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதம் உள்ள பால் சொந்த வீட்டு உபயோகத்திற்கும், சில்லறை வணிகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு லிட்டர் தண்ணீர் 25 ரூபாய்க்கு விற்கும் இந்தக் காலத்தில் ஒரு லிட்டர் பால், ஆவின் பால் நிறுவனம் 26 ரூபாய்க்கும், தனியார் கொள்முதல் நிலையங்களில் ஒரு லிட்டர் பால் 18 முதல் 24 ரூபாய்க்கும் கொள்முதல் செய்கிறார்கள். கால்நடைத் தீவனங்களான பிண்ணாக்கு 50 முதல் 55 ரூபாய்க்கும், பருத்திக் கொட்டை 35 முதல் 40 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 35 ரூபாய்க்கும், கேழ்வரகு 35 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

‘‘ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய 49.84 ரூபாய் செலவாகிறது. அரசு பால் விலை 4 ரூபாய் உயர்த்தியிருப்பதாகச் சொல்கிறது. உண்மையில் ஒரு லிட்டருக்கு நாங்களே 17.84 ரூபாய் நஷ்டத்தில் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம்’’

தற்போதைய சூழ்நிலையில் விவசாயிகளால் மாடுகளை வளர்க்க முடியவில்லை. அதனால், பசுமாட்டுப் பால் லிட்டருக்கு 40 ரூபாய், எருமை மாட்டுப் பால் 50 ரூபாய் என விலை உயர்த்த வேண்டும். மானிய விலையில் தீவனம் கொடுக்க வேண்டும். ஆடு, மாடு வாங்குவதற்கு வங்கிக் கடன் தர வேண்டும் எனப் பல கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து போராடி வந்தோம். தற்போது கண்துடைப்புக்காகப் பால் விலை 4 ரூபாய் உயர்த்தியிருக்கிறது அரசு. இது எங்களுக்குப் போதாது. அதனால், எங்க அமைப்பின் சார்பாகத் தமிழகம் தழுவிய போராட்டங்கள் நடத்தவிருக்கிறோம்’’ என்றார் காட்டமாக.

பால் உற்பத்தியாளர்களின் கணக்கை அரசு கவனத்தில் கொண்டால் சரி.

தொடர்புக்கு ஜெயக்குமார், செல்போன்: 96555 22958.

உற்பத்திச் செலவு ரூ. 49... வருமானம் ரூ. 32... பால் விலையேறியும் பயனில்லை!