Published:Updated:

நடவு முதல் அரிசி வரை; தஞ்சாவூரில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்!

மியூசியத்தில் வடுவமைக்கபட்ட சிலைகள் ( ம.அரவிந்த் )

1,860 சதுர அடி பரப்பளவில் பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் உதவியுடன் ரூ. 1.1 கோடி மதிப்பில் இதை உருவாக்கியுள்ளனர். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சிறப்பு மிக்க அந்த அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார்.

நடவு முதல் அரிசி வரை; தஞ்சாவூரில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்!

1,860 சதுர அடி பரப்பளவில் பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் உதவியுடன் ரூ. 1.1 கோடி மதிப்பில் இதை உருவாக்கியுள்ளனர். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சிறப்பு மிக்க அந்த அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார்.

Published:Updated:
மியூசியத்தில் வடுவமைக்கபட்ட சிலைகள் ( ம.அரவிந்த் )

இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய உணவுக் கழகத்தில் சார்பில் தஞ்சாவூரில் ரூ. 1.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட உணவு அருங்காட்சியகத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். நெல் நாற்று விடுவது தொடங்கி அரிசியாக பொதுமக்களுக்கு கிடைப்பது வரையிலான காட்சிகளை மெழுகு மற்றும் மரப் பொருள்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்படிருந்தது பலரையும் கவர்ந்தது.

உணவு  அருங்காட்சியகம்
உணவு அருங்காட்சியகம்
ம.அரவிந்த்

தஞ்சாவூர் நிர்மலா நகரில் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதில் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உணவு தேவைக்காக வேட்டையாடியது தொடங்கி இந்தியா, எகிப்து, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் விவசாயிகள் உணவு தயாரிப்பதற்கான பொருள்களை விளைவிக்கப் பயன்படுத்தப்பட்ட உழவு கலப்பைகள், தானியங்களைப் பாதுக்காக்க அமைக்கப்பட்ட களஞ்சியங்கள், உணவைத் தாக்கும் பூச்சி வகைகள் உள்ளிட்ட பலவற்றை மெழுகு மற்றும் மரப்பொருள்களின் மூலம் வடிவமைத்திருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1,860 சதுர அடி பரப்பளவில் பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் உதவியுடன் ரூ. 1.1 கோடி மதிப்பில் இதை உருவாக்கியுள்ளனர். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சிறப்பு மிக்க அந்த அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார். இதில், தென்மண்டல செயல் இயக்குநர் டல்ஜித்சிங், முதன்மைப் பொது மேலாளர் சஞ்சீவ்குமார் கௌதம், தமிழக பொது மேலாளர் பி.என்.சிங், தஞ்சாவூர் மண்டல மேலாளர் தேவேந்திர சிங் மார்டோலியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விவசாயம்
விவசாயம்

100 அடி நீளம் 12 அடி அகலத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் விவசாயிகள் விளைவிக்கக்கூடிய அரிசி உற்பத்தி செய்யப்படும் முறையை சென்னையைச் சேர்ந்த கலை இயக்குநர் மோகன் தாஸ் வடிவமைத்திருந்தார். நாற்று விடுதல் தொடங்கி நடவு, பெண்கள் களை எடுத்தல், அறுவடை, மில்களில் அரைத்து அரிசியாக்குவதுடன் கூட்ஸ் ரயில், லாரி மூலம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு பொது விநியோகத்தின் மூலம் மக்கள் வாங்கி பயன்படுத்துவது வரை அனைத்தையும் துல்லியமாக வடிவமைத்திருந்தார். இவை மட்டுமே ரூ. 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியாவில் பயன்படுத்தப்படும் உணவுகள் பலவற்றையும் இந்திய வரைபடத்தில் வரைந்திருந்தனர். தானியங்கள், பழங்கள், பயிர்களைத் தாக்கக்கூடிய பூச்சிகள், விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கான பொருள்கள் போன்றவையும் அமைத்திருந்தனர். இந்திய உணவுக் கழகத்தில் செயல்பாடுகளை விளக்கும் வகையிலான புரொஜெக்சன் மேப்பிங், டச் ஸ்கீரின் கியோஸ்க், ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் போன்ற நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உணவு
உணவு

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ``நெற்களஞ்சியம் எனப் பெயரெடுத்த தஞ்சையில் இந்தியாவிலேயே முதன்முறையாக உணவுக்கென ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. மனிதன் தன் உணவு தேவையை எப்படி பூர்த்தி செய்துகொண்டான் என்பதில் தொடங்கி ஒரு பொருளை எப்படி விளைவித்து பயன்படுத்தினான் அவை என்னென்ன என்பது குறித்து அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தனர்.