Published:Updated:

``நீர்நிலைகளில் கான்கிரீட் தளங்களுக்கு தடை!'' - அரசு அறிவிப்புக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு

கான்கிரீட் பணி
கான்கிரீட் பணி

தமிழ்நாட்டில் குளங்கள், ஏரிகளில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படாது என்று அமைச்சர் நேரு அறிவிப்புக்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. கடந்த அ.தி.மு.க ஆட்சியில், கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் நொய்யல் வழித்தடங்கள் உள்பட பல நீர்நிலைகளில் இயற்கைச் சூழலை சிதைத்து, செயற்கையாக கரைகளில் கான்கிரீட் தளங்கள் அமைக்கும் பணிகள் நடந்தன.

நொய்யல்
நொய்யல்
Vikatan

இதற்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் கான்கிரீட் தளங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.

இதையடுத்து, அந்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கோவை நீர்நிலைகளை, தி.மு.க சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி சமீபத்தில் ஆய்வு செய்திருந்தார். அப்போது, ``கான்கிரீட் தளங்கள் அமைக்கும் பணியை நிறுத்துவது தொடர்பாக கோரிக்கை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்” என்று உறுதியளித்திருந்தார்.

கே.என் நேரு
கே.என் நேரு

இந்நிலையில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``தமிழ்நாட்டில் இனி எங்கு ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டாலும் அங்கே கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படாது” என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பை சுற்றுசூழல் ஆர்வலர்கள் வரவேற்று வருகின்றனர். இதுகுறித்து கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நேற்று காலை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து, கோவை மாநகரில் உள்ள குளங்களில் சுற்றுச்சூழல் அணி மற்றும் கோவையிலுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கையினை வழங்கினோம்.

கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி

அதனை வழங்கிய போதே, அமைச்சர் கோவை மாநகராட்சி ஆணையரை அழைத்துப் பேசினார். இன்று அது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தையும் நடத்தினார்.

அதன் விளைவாக இனி எங்குக் குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டாலும் அங்கே கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படமாட்டாது என்றும், சுற்றுச்சூழல் பேணி பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

கோவை
கோவை
குன்னத்து மலை, சிற்றாறு அணை... இயற்கை எழில்கொஞ்சும் குமரி-கேரள எல்லை நீர்நிலை வனப்பகுதி! (படங்கள்)

இதுதான் மக்களுக்கான அரசு, சுற்றுச்சூழலையும் அதன் அங்கமான பல்லுயிர் தன்மையையும் பாதுகாக்கக் கூடிய அரசு. அரசின் இந்த முடிவுக்காக முதல்வருக்கும், அமைச்சருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நீர் செல்லும் பகுதிகளில் கான்கிரீட் போன்ற கட்டுமானங்களை ஏற்படுத்தும்போது, பூமிக்குள் நீர் இறங்குவது தடைபடும். இதனால் கிணறு, குட்டைகளில் நீர் செறிவூட்டுதல் முற்றிலுமாகத் தடைபடும். மேலும் மண்ணாலான கரைகளில் நடைபெறும் பல்லுயிர் பெருக்கமும் அதன் வாழ்விடமும் மொத்தமாக அழியும்.

நொய்யல்
நொய்யல்

இதனைத் தடுக்கவே குளங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்தோம். உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய முடிவு எடுத்த அரசின் செயலுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு