Published:Updated:

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை மாநாடு: ``தவறுகளை சரிசெய்ய வேண்டிய நேரம் இது!" - மோடி

 மோடி
News
மோடி

``கடந்த ஏழு வருடங்களில் விவசாயத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுவந்திருக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத் துறையின் திறனை அதிகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மீண்டும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் எடுத்திருக்கிறது." - மோடி

விவசாயம் மற்றும் உணவுப் பதப்படுத்தல் தொடர்பான தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி விவசாயம் செய்வதில் இதுவரை நாம் செய்துவந்த தவறுகளைச் சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இன்று குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் நடைபெற்ற `ஜீரோ பட்ஜெட்' இயற்கை வேளாண்மை கருத்தரங்கில் காணொலி மூலமாகக் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி.

Modi
Modi

இந்த மாநாட்டில் விவசாயம் குறித்தும், உணவுப் பதப்படுத்துதல் குறித்தும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்த மாநாட்டை பல மாநிலங்களில் பாஜகவினர் காணொலி மூலமாக ஒருங்கிணைத்திருந்தனர். இதனால் பல மாநில விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க முடிந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது, ``இந்த மாநாட்டில் நாடு முழுவதுமிருந்து 8 கோடி விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். குஜராத்தில் நடந்தாலும் இது நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

கடந்த ஏழு வருடங்களில் விவசாயத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுவந்திருக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத் துறையின் திறனை அதிகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மீண்டும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் எடுத்திருக்கிறது.

மண் பரிசோதனை, விதைகள், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா, குறைந்தபட்ச ஆதரவு விலையை 1.5 மடங்கு உயர்த்தியது, வலுவான பாசன கட்டமைப்பை உருவாக்குதல், கிசான் ரயில் என விவசாயிகள் நலனுக்காக அரசு முன்னெடுத்த முயற்சிகள் ஏராளம்.

`ஜீரோ பட்ஜெட்' இயற்கை வேளாண்மை கருத்தரங்கில் காணொலி
`ஜீரோ பட்ஜெட்' இயற்கை வேளாண்மை கருத்தரங்கில் காணொலி

தற்போது விவசாயிகள் தங்களுடைய கவனத்தை ரசாயன ஆய்வக முறைகளில் இருந்து இயற்கை விவசாய முறைக்கு மாற்ற வேண்டும். இதுவரை செய்த தவறுகளைச் சரி செய்ய வேண்டிய நேரம் இது. இயற்கை விவசாயத்துக்கு திரும்புவதன் மூலம் செலவுகளைப் பெருமளவு குறைக்கலாம். இதனால் 2 ஏக்கருக்கும் குறைவாக உள்ள நிலம் வைத்துள்ள விவசாயிகள் ரசாயன உரங்களுக்கு அதிக செலவு செய்கின்றனர். இதைத் தவிர்த்து இயற்கை முறையில் தயார் செய்த உரங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம் 80 சதவிகித சிறு, குறு விவசாயிகள் பலன் அடைய முடியும்.

ரசாயன ஆய்வகங்களிலிருந்து விவசாயத்தை இயற்கை ஆய்வகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இயற்கை ஆய்வகம் என்று நான் குறிப்பிடுவது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தது" என்று அவர் கூறினார்.