பிரீமியம் ஸ்டோரி

படம்: எஸ்.எம்.ஜக்காரியா

க்டோபர் 4-ம் தேதி இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாள். இவரைச் சிறப்பிக்கும் விதமாக உலக வன விலங்குகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மனிதனைப் பாதுகாத்து, மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன விலங்குகள். அதைப் புரிந்துகொண்டு, மனிதனும் விலங்குகளுக்குத் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால், தனது சுயநலத்துக்காகப் பல்வேறு உயிரினங்களை அழியும் உயிரினங்கள் பட்டியலில் சேர்த்த பெருமை மனிதனையே சேரும். அந்த வகையில் ‘மெட்ராஸ் ஹெட்ஜ்ஹாக்’ (Madras Hedgehog) என்றழைக்கப்படும் முள் எலி வகைகள் மெள்ள மெள்ள அழிந்து வருகின்றன.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காணப்படும் முள் எலி, பாலூட்டி வகையறாக் களில் தனிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்குக் காது சிறியது. வால் கிடையாது. இது பகலில் தூங்கும். இரவில்தான் பூச்சி வேட்டைக்குப் புறப்படும். மனிதர்களுக்கு முள் எலிகளால் தீங்கு ஏதும் இல்லை. இதை எதிரிகள் சாப்பிட வரும்போது தற்காப்புக்காகத் தன் உடம்பில் உள்ள முட்களை விரித்து ஒரு பந்துபோல உருமாறும்.

முள் எலி
முள் எலி


சாதாரண எலியின் அளவிலிருந்தாலும் இதைத் தொட்டால் முள் பந்து போன்று தன் உடலைச் சுருக்கிக்கொள்ளும். திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் முள் எலிகள் காணப் படுகின்றன. முள் எலிக் கறியை உண்டால் உடல் உறவு நேரம் அதிகரிக்கும் என்ற வதந்தி காரணமாக, அதைத் தேடித்தேடி வேட்டையாடுகிறார்கள். தமிழகத்தில் தினசரி சுமார் ஆயிரம் முள் எலிகள்வரை கொல்லப்படுகின்றன என்கிறார்கள் வன ஆர்வலர்கள்.

முள் எலிகள் பற்றிப் பேசும் ஓய்வுபெற்ற வனத்துறை கூடுதல் இயக்குநர் மற்றும் வனவிலங்கு மருத்துவ அலுவலரான மருத்துவர் மனோகரன், ‘‘முள் எலி விவசாயிகளின் நண்பன். விவசாய விளைபொருள்களைச் சாப்பிடாது. ஆனால், விவசாய பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளைச் சாப்பிடும். ஒரு நாளைக்கு 250 முதல் 300 பூச்சிகள்வரை சாப்பிடும். செயற்கை உரங்கள் இல்லாமல் பூச்சிகளை ஒழிக்க இயற்கை நமக்குக் கொடுத்த வரங்களில் முள் எலியும் ஒன்று’’ என்கிறார்.

முள் எலி குறித்த முழு கட்டுரையை வாசிக்க க்ளிக் செய்யவும்.

https://www.vikatan.com/living-things/animals/how-the-madras-hedgehogs-facing-extinction-due-to-false-beliefs

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு