Published:Updated:

கடல்நீரால் நாசமாகும் தோட்டக்கலைப் பயிர்கள்; கவலையில் நாகை விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தோட்டப்பயிர்களை அழிக்கும் கடல்நீர்
தோட்டப்பயிர்களை அழிக்கும் கடல்நீர்

``எப்போ மழை பெய்யும், பெய்யாதுன்னே தெரியாம மண்ணு நமக்கு சோறு போடும்னு நம்பிதான் செலவு பண்றோம். அதன் பலன் கைக்கு கிடைக்குமுன்னே பறிபோவதை எங்களால தாங்க முடியல." - கவலையில் விவசாயிகள்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் சுமார் 2,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதி மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அதிலும்  குறிப்பாக தங்களுக்குச் சொந்தமான புன்செய் நிலங்களில் தோட்டப் பயிர்களான பல்வகை காய்கறிகளை உற்பத்தி செய்கின்றனர். இப்பகுதியிலுள்ள பரவை காய்கறி சந்தை மிகவும் பிரபலமானது.

தோட்டப்பயிர்களை அழிக்கும் கடல்நீர்
தோட்டப்பயிர்களை அழிக்கும் கடல்நீர்
நீச்சல்குளமான சுரங்கப்பாதை; மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்! - சென்னை மழை வெள்ளத்தில் ஒரு நாள்!

தரமான, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் இங்கு விலை குறைவாக கிடைக்கும் என்பதால் பலவேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் தினந்தோறும் இங்கு வந்து கூடுவார்கள். இங்கிருந்து மூட்டை மூட்டையாக காய்கறிகளை வாங்சிச் செல்வார்கள்.

இந்நிலையில் ஆண்டுதோறும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்யும் கனமழையால் தாழ்வான இப்பகுதி குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்கள் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிப்பது வழக்கம்.

அத்துடன் கடல்நீரும் உட்புகுவதால் சாகுபடி பயிர்கள் அழிவதோடு, நிலமும் உவர்மண்ணாகி இப்பகுதியினருக்கு வேதனையைத் தருகிறது.

இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் சிலரிடம் பேசினோம்.

``இயற்கை பேரிடர் காலங்கள்ல கடல் நீர்மட்டம் உயர்ந்து இங்கு பயிரிடப்படும் விளை நிலங்களுக்குள் கடல் நீர் புகுந்து விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் விவசாய பயிர்கள் அனைத்தும் அழிஞ்சுடுது.

தோட்டப்பயிர்களை அழிக்கும் கடல்நீர்
தோட்டப்பயிர்களை அழிக்கும் கடல்நீர்
தென் சென்னை எப்போதும் வெள்ளத்தில் மிதப்பதற்கு காரணம் இதுதானா?

கடன் வாங்கி சாகுபடி செய்து அந்தக் கடனை அடைப்பதற்குள்ள, விளைச்சல் தரும் பயிர்களைக் கடல்நீருக்கு காவு கொடுப்பது கஷ்டமா இருக்கு. எப்போ மழை பெய்யும், பெய்யாதுன்னே தெரியாம மண்ணு நமக்கு சோறு போடும்னு நம்பிதான் செலவு பண்றோம். அதன் பலன் கைக்கு கிடைக்குமுன்னே பறிபோவதை எங்களால தாங்க முடியல. இத்தகைய அழிவுகள் தொடர்கதையா இருக்கு. இதை நிரந்தரமாகத் தடுக்க இப்பகுதியில் இரண்டு இடங்களில் தடுப்பணை கட்டித் தரவேண்டும் என்பது எங்களின் நீண்டநாள்  கோரிக்கையாகும்.  இந்தப் புதிய அரசாவது எங்கள் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் அழியாமல் இருக்க தடுப்பணை கட்டித் தருமா?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு