Published:Updated:

உழுகலப்பை, மண்வெட்டி, அரிவாள்; சித்திரை முதல்நாளில் உற்சாகமாக நடைபெற்ற நல்லேர் பூட்டும் விழா!

உழவுக் கருவிகளுக்கு பூஜை

இயற்கைக்கு நன்றி செலுத்துவதையும், உழைப்பின் பெருமையையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் நிகழ்வாக நல்லேர் பூட்டும் விழா நடந்து வருகிறது.

உழுகலப்பை, மண்வெட்டி, அரிவாள்; சித்திரை முதல்நாளில் உற்சாகமாக நடைபெற்ற நல்லேர் பூட்டும் விழா!

இயற்கைக்கு நன்றி செலுத்துவதையும், உழைப்பின் பெருமையையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் நிகழ்வாக நல்லேர் பூட்டும் விழா நடந்து வருகிறது.

Published:Updated:
உழவுக் கருவிகளுக்கு பூஜை

வைசித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நல்லேர் பூட்டும் நிகழ்வு தமிழகத்தில் பல கிராமங்களில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழர் பண்பாட்டில் சித்திரை முதல் நாளில் விவசாயப் பணிகளைத் தொடங்குவது நல்லதாகவும், மரபாகவும் உள்ளது. அதை நல்லேர் அல்லது பொன் ஏர் பூட்டும் விழாவாக கிராமங்களில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார்கள்.

நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி
நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி

மதுரை நகரில் சித்திரைத் திருவிழா உற்சாகமாக நடந்து கொண்டிருக்கும்போது மற்றொரு பக்கம் மாவட்டத்தில் பல கிராமங்களில் நல்லேர் பூட்டும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், இயற்கைக்கு நன்றி செலுத்துவதையும், உழைப்பின் பெருமையையும், அறிவியல் உண்மையையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் நிகழ்வாக நடந்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலூர் வட்டாரத்தில் வலம் வந்தபோது நல்லேர் பூட்டும் நிகழ்ச்சிக்காக ஊர் மக்கள் திரண்டிருந்ததைப் பல கிராமங்களில் காண முடிந்தது.

கம்பூர் முத்துப்பிடாரி அம்மன் கோயில், அலங்கம்பட்டி, பெரியகற்பூரம்பட்டி, சின்னக்கற்பூரம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள மந்தையம்மன் கோயில்களில் நல்லேர் பூட்டுதலுக்கான வழிபாடுகள் நடைபெற்றன.

கோயிலில் வழிபாடு
கோயிலில் வழிபாடு

இந்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு ஊர் மக்களுக்கும் இதை அறிவிப்பதற்காக வானில் வெடி வெடித்தனர். விவசாயிகள் தங்கள் உழவு கருவிகளான உழுகலப்பை, மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றை சாமி முன்பு வைத்து வழிபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புத்தாண்டின் முதல் நாளில் உழவுத் தொழிலைத் தொடங்கும் முன்பு மழை தெய்வமான மாயோனிடம் தங்கள் ஊரில் நல்ல மழை பெய்து, விளைச்சல் அதிகமாகக் கிடைக்க வேண்டி வழிபாடு நடத்தினார்கள்.

நல்லேர் பூட்டுதல்
நல்லேர் பூட்டுதல்

பிறகு, தங்கள் வயல்களில் முதல் நாள் உழவைத் தொடங்கினார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய கம்பூர் கிராமத்து இளைஞர்கள், ``பழங்காலத்திலிருந்தே தொடர்ந்து வரும் மரபுகளை விடாது மக்கள் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த நல்லேர் பூட்டும் நிகழ்வில் உழவு செய்கிறவர்களுடன் ஊரின் சாமியாடி, பூசாரி, காரணக்காரர்கள், நாட்டாமை, அம்பலார் கலந்துகொண்டு வழிபடுவார்கள்.

அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு உற்பத்திக்கான விழா என்பதால் அனைவரும் நல்ல மனத்துடன் ஒற்றுமையாக வழிபடுவார்கள். நம் மண் சார்ந்த, மொழி சார்ந்த இதுபோன்ற நல்ல பழக்க வழக்கங்கள் கிராமங்களில் தொடர்ந்தாலும் இந்தக்கால இளவட்டங்களுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என்றனர்.

நல்லேர் பூட்டுதல்
நல்லேர் பூட்டுதல்

வந்திருந்த அனைவருக்கும் விபூதி, சந்தனம், குங்குமம், வெற்றிலைப் பாக்கு வழங்கப்பட்டன. அம்மனுக்கு தேங்காய், பழத்துடன் சாம்பிராணி, சூடம் வைத்து வழிபாடு செய்தனர் பூசாரிகள். பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism