Published:Updated:

கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்ந்து பல்கலைக்கழகம் இயங்கியபோது இயற்கை வேளாண்மையை பரப்பியவர் நம்மாழ்வார்!

நம்மாழ்வார் சிலை திறப்பு

``உங்களில் பெரும்பாலானோருக்கு, நம்மாழ்வார் சட்டை அணியாத எளிமையான தோற்றம் மட்டும்தான் தெரியும். இவரின் ஆரம்பகாலம் பற்றிய ஓர் ஆச்சர்ய தகவலை சொல்கிறேன்.''

கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்ந்து பல்கலைக்கழகம் இயங்கியபோது இயற்கை வேளாண்மையை பரப்பியவர் நம்மாழ்வார்!

``உங்களில் பெரும்பாலானோருக்கு, நம்மாழ்வார் சட்டை அணியாத எளிமையான தோற்றம் மட்டும்தான் தெரியும். இவரின் ஆரம்பகாலம் பற்றிய ஓர் ஆச்சர்ய தகவலை சொல்கிறேன்.''

Published:Updated:
நம்மாழ்வார் சிலை திறப்பு

தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூரில் இயங்கி வரும் சோழன் மழலையர் பள்ளி வளாகத்தில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு, அமர்ந்த நிலையிலான ஐந்தரை அடி உயரம் கொண்ட முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் தத்ரூபமாகவும் பிரமாண்டமாகவும் அமைக்கப்பட்டுள்ள இச்சிலையை, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூரில் இயங்கி வரும் சோழன் மழைலையர் பள்ளியின் 20-ம் ஆண்டு தொடக்கவிழா, நம்மாழ்வார் சிலை திறப்பு விழா, அக்னிச் சிறகுகள் விருது வழங்கும் விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா அண்மையில் இப்பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமையேற்று பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான சி.மகேந்திரன்,

நம்மாழ்வார் சிலை
நம்மாழ்வார் சிலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நம்மாழ்வாரை நான் ஆரம்பகாலம் தொட்டே நன்கறிவேன். அவரைப் போல் ஆய்வு அறிவும், அனுபவ அறிவும் கொண்ட வேறு நபர், எனக்குத் தெரிந்தவரையில் இந்தியாவில் யாரும் கிடையாது. இயற்கை வேளாண்மையை அறிவியல் பூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் அணுகி, இதை விவசாயிகளிடம் கொண்டு செல்ல, தனது வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்டார். உங்களில் பெரும்பாலானோருக்கு, நம்மாழ்வார் சட்டை அணியாத எளிமையான தோற்றம் மட்டும்தான் தெரியும். இவரின் ஆரம்பகாலம் பற்றிய ஓர் ஆச்சர்ய தகவலை சொல்கிறேன்.

வேளாண் விஞ்ஞானம் பயின்ற இவர், ஆரம்பகாலத்தில் ஆங்கிலேயர் சாயலில் டிப்-டப் ஆக பேன்ட்-சட்டை அணிந்திருப்பார். காலப்போக்கில் தனது உடையில் படிப்படியாக மாற்றம் செய்த நம்மாழ்வார், ஒரு கட்டத்தில் மிகவும் எளிமையாக சன்னியாசி போலவே தோற்றமளிக்கத் தொடங்கினார். தோற்றத்தில் மட்டுமல்ல, தன் வாழ்க்கை முறையையும் எளிமையாக்கிக்கொண்டார். வேளாண் அறிவியல் ஆய்வுகளை மக்கள் மயப்பட்ட ஆய்வுகளாக மேற்கொண்டதுதான் அவரின் தனிச்சிறப்பு. கார்ப்பரேட் நிறுவனங்கள், இங்குள்ள பல்கலைக்கழங்களையும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் மறைமுகமாக தனது லாப நோக்கத்துக்கு பயன்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில், மக்கள் நலனுக்கான இயற்கை வேளாண்மையையும், இது தொடர்பான விழிப்புணர்வையும், நம்மாழ்வார் முழு வீச்சுடன் கொண்டு சென்றார்’’ எனத் தெரிவித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரின் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ``விவசாயிகள் நலனில் அக்கறை தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறும் தருணத்தில், நம்மாழ்வாரின் சிலையை, அதுவும் காவிரி டெல்டாவில் திறந்து வைப்பதை மகிழ்ச்சியாகவும் மிகுந்த பெருமையாகவும் கருதுகிறேன். நம்மாழ்வாரைப் பற்றி எனக்கு ஆரம்பத்தில் அதிகம் தெரியாது. அவரைப் பற்றி அறிய தொடங்கிய பிறகு, அவர் எழுதிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். இயற்கை விவசாயத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் போற்றுதலுக்குரியது’’ எனத் தெரிவித்தார்.

நம்மாழ்வார் சிலை திறப்பு நிகழ்வில்
நம்மாழ்வார் சிலை திறப்பு நிகழ்வில்

நம்மாழ்வார் சிலை உருவாக்கம் குறித்து நம்மிடம் பேசிய, சோழன் மழலையர் பள்ளியின் நிறுவனர் சிவ.சண்முகம், ``நம்மாழ்வாருக்கு சிலை அமைக்கும் முயற்சியில் இறங்கி இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. கொரோனா பிரச்னையின் காரணாக சிலை திறப்பு நிகழ்ச்சி தள்ளிக்கொண்டே போய், தற்போது வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. நம்மாழ்வார் மீது பற்றுக்கொண்ட பலர் நன்கொடை வழங்கினார்கள். குறிப்பாக, கொங்கு மண்டல மக்களின் பங்களிப்பு இதில் அதிகம். பைபரால் ஆன இந்தச் சிலையை உருவாக்க, சுமார் 3 லட்சம் ரூபாய் செலவானது’’ எனத் தெரிவித்தார்.

பத்திரிகையளர் மானா பாஸ்கரன் எழுதிய `நம்மாழ்வார் குறித்த குறிப்புகள் அடங்கிய தொகுப்பு' நூலின் முதல் பிரதியை, தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் வெளியிட்டார். இதை நம்மாழ்வாரின் மகள் மீனா பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் நம்மாழ்வார் விருது, நல்லாசிரியர் விருது, அக்கினிச் சிறகுகள் விருது, காட்டுயிர் காப்பாளர் விருது, உ.வே.சா விருது, வள்ளலார் விருது என பல விருதுகள் வழங்கப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism