Published:Updated:

வீட்டுத்தோட்டத்திற்கான அடிப்படை என்ன? மரபு விதைகளை எப்படிப் பயன்படுத்துவது? வழிகாட்டும் பயிற்சி

நேரலை பயிற்சி
News
நேரலை பயிற்சி

நவம்பர் 29-ம் தேதி, திங்கட்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொள்ளலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். கீழே உள்ள இணைப்பின் மூலம் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்.

`விதைகளே பேராயுதம்' - இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இது. காய்கறிகளில் விதவிதமான ரகங்களை விளைவித்த மண், தமிழ் மண். இன்றைக்குப் பன்னாட்டு கம்பெனிகளிடம் விதைக்காகக் கையேந்தும் சூழல். இந்நிலை மாற மரபு விதைகளை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இயற்கை ஆர்வலர்கள் பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிரியா ராஜ்நாராயணன்.

பிரியா ராஜ்நாராயணன்.
பிரியா ராஜ்நாராயணன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருப்பூரைச் சேர்ந்த பிரியா, மாடித்தோட்ட விவசாயி. பாரம்பர்ய விதைகளைத் தேடித்தேடிச் சேகரிக்கும் விதை சேகரிப்பாளர். `விதைத் தீவு' என்ற பெயரில் வலைதளங்களில் இயங்கும் பிரியாவிடம் இன்றைக்கு 500-க்கும் மேற்பட்ட மரபு விதைகள் உள்ளன. கத்திரிக்காயில் 50-க்கும் மேற்பட்ட ரகங்கள், அவரையில் 20 ரகங்கள், கீரையில் 40 ரகங்கள், கொடி வகை பயிர்களில் 30 ரகங்கள், மூலிகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்கள் என 500-க்கும் மேற்பட்ட பயிர்களின் விதைகளைச் சேகரித்து வைத்திருக்கிறார்.

மெக்சிகோ நாட்டின் பழங்குடிகள் பயன்படித்தும், `எனர்ஜி ட்ரிங்க்' மாயன் கீரை டீ. அதனைத் தமிழ்நாட்டில் பிரபலப்படுத்தியதில் பிரியாவின் பங்கு முக்கியமானது. இன்றைக்குத் தமிழகத்தில் வீட்டுத்தோட்டங்களில் மாயன் கீரையைப் பலரும் வளர்த்து வருகிறார்கள். வீட்டுத்தோட்டம் பற்றிப் பலருக்கும் ஆலோசனை சொல்லி வருகிறார் பிரியா. இந்நிலையில், வீட்டுத்தோட்டம் மற்றும் பாரம்பர்ய விதைகள் தொடர்பாக ஆன்லைன் பயிற்சி வகுப்பை பசுமை விகடன் ஏற்பாடு செய்துள்ளது.

மாயன் கீரை பற்றிப் பேசும் பிரியா, ``மாயன் கீரையை நம்ம எல்லார் வீட்டிலேயும் வளர்க்கலாம். எங்க வீட்டுல செடி வளர்க்க இடமே இல்லைனு சொல்றவங்கக் கூட இதை வளர்க்க முடியும். இதுக்கு உள்ளங்கை அளவுக்கு இடம் இருந்தால் போதும். 'குரோ பேக்' பழைய 20 லிட்டர் வாட்டர் கேன் மாதிரி ஏதாவது ஒரு ஊடகம் மூலமாக இதை வளர்க்க முடியும். ஒரே ஒரு குச்சியை மட்டும் ஊன்றி வெச்சாப் போதும். பத்தே நாள்ல வளர்ந்திடும். இதோட இலைகளை எடுத்து `கிரீன் டீ' போட்டுக் குடிக்கிற மாதிரி, சுடுதண்ணியில காய வைச்சு, வடிகட்டி, தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை போட்டுக் குடிக்கலாம். அது குடிச்சா நாள்முழுக்க சுறுசுறுப்பாக இயங்க முடியும். இந்தக் கீரையில் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து, பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கு.

மாயன் கீரை
மாயன் கீரை

இது மாதிரி ரம்பை இலை அப்படின்னு ஒரு இலை இருக்கு. இதைக் கருவேப்பிலை மாதிரி சமையலுக்கு பயன்படுத்தலாம். பிரியாணி வாசனை ஆளைத்தூக்கும். வெள்ளை சாதம் கூடப் பிரியாணி அரிசியில செஞ்ச சாதம் போல மணமா இருக்கும். நிறைய சாப்பாடு சாப்பிடத் தோணும். இந்த இலையை நறுக்கி நிழல்ல காய வைச்சு சமையல் அறையில வெச்சுட்டாப் போதும். வீட்டுக்குள்ள நுழைஞ்சாலே பிரியாணி வாசனை மாதிரியான ஒரு வாசனை மணக்கும். இது சிறந்த இயற்கை ரூம் ஃப்ரெஷ்னராகவும் இருக்கும்" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் பேசிய அவர், ``இதுமாதிரி, கெங்கேரி கத்திரி, பப்பில் பீர்க்கன் மாதிரியான பல ரக காய்கறி விதைகள் என்கிட்ட இருக்கு. நம்ம வீட்டு தோட்டத்துல அழகுக்காகப் பல்வேறு செடிகளை வளர்க்கிறோம். அதிக விலை கொடுத்து அந்த மாதிரி செடிகளை வைப்பதற்கு பதிலா உணவு, மருத்துவம் இரண்டுக்கும் பயன்படுற மாதிரி பாரம்பர்ய விதைகளை நடவு செய்யலாம்.

அது மூலமா சுவையான, ஆரோக்கியமான உணவும் கிடைக்கும். காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலி மாதிரியான சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கான மருத்துவ மூலிகைகளும் கிடைக்கும். இன்னிக்கு வீட்டுத்தோட்டம் அமைக்கப் பலரும் ஆசைப்படுறாங்க. ஆனால் பேருக்கு மாடி தோட்டம் போட்டுட்டு, கொஞ்ச நாள்ல ஒரு வெறுப்புல விட்டுட்டு போயிடுறாங்க. ஆனால், ஒரு மாடித்தோட்டத்தை எப்படி அமைக்கணும். அதைத் தொடர்ந்து எப்படி பராமரிக்கணும். அதுல நம்ம ஆர்வம் தொடர்ந்து இருக்கிறதுக்கு என்ன செய்யணும். இது மாதிரியான விஷயங்களைத் தெரிஞ்சிக்கணும்.

நேரலை பயிற்சி
நேரலை பயிற்சி

அதுதான் ரொம்ப முக்கியம். வீட்டுத்தோட்டத்திற்கான அடிப்படை என்ன? அதில் மரபு விதைகளை எப்படிப் பயன்படுத்துவது? மாதிரியான விஷயங்களை உங்களோடு நான் பகிர்ந்துக்கப் போறேன். வரும் திங்கட்கிழமை ஆன்லைன் மூலமா உங்களோட பேசப்போறேன்'' என்றார்.

நவம்பர் 29-ம் தேதி, திங்கட்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொள்ளலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். கீழே உள்ள இணைப்பின் மூலம் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்.

பயிற்சி கட்டணம்: ரூ.100.

முன்பதிவுக்கு https://events.vikatan.com/323-home-gardening/