Published:Updated:

ஆண்டிபட்டியா இருந்தா என்ன, அமெரிக்காவா இருந்தா என்ன? விவசாயத்தில் அசத்தும் நடிகர் நெப்போலியன்!

நடிகர் நெப்போலியன்

விவசாயம் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டால் இடம் ஒரு தடையல்ல என்பதை நெப்போலியன் செய்து காட்டியுள்ளார். விவசாயம் செய்வதோடு, பண்ணை வைத்து அதில் கோழிகளை வளர்த்து வருகிறார்.

ஆண்டிபட்டியா இருந்தா என்ன, அமெரிக்காவா இருந்தா என்ன? விவசாயத்தில் அசத்தும் நடிகர் நெப்போலியன்!

விவசாயம் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டால் இடம் ஒரு தடையல்ல என்பதை நெப்போலியன் செய்து காட்டியுள்ளார். விவசாயம் செய்வதோடு, பண்ணை வைத்து அதில் கோழிகளை வளர்த்து வருகிறார்.

Published:Updated:
நடிகர் நெப்போலியன்

கிழக்குச் சீமையிலே, எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி உட்பட பல படங்களின் மூலம் நமது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் நெப்போலியன். நடிகராக மட்டுமே நமக்கு அறிமுகமான நெப்போலியன், தற்போது விவசாயத்திலும் அசத்தி வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெப்போலியன் விவசாயம் செய்கிறார் என்றதும் தமிழகத்தில் என நினைப்பீர்கள்.. .ஆனால், இவர் விவசாயம் செய்து வருவது அமெரிக்காவில் என்பதுதான் நம்மை வியப்படைய வைக்கிறது. இவர் விவசாயம் செய்துவருவது மட்டுமன்றி, பண்ணை வைத்து அதில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்தப் பண்ணைக்கு `நெப்போலியன் பண்ணை’ எனத் தன் பெயரை வைத்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விவசாயம் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டால் இடம் ஒரு தடையல்ல என்பதை நெப்போலியன் செய்து காட்டியுள்ளார். மேலும் ``கடவுள் எனும் விவசாயி... கண்டெடுத்த தொழிலாளி விவசாயி… விவசாயி...“ என்ற பாடலைப் பாடி தன்னுடைய பண்ணையை சுற்றிக் காட்டி, அமெரிக்க விவசாயி என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தன் கோழிகளுக்கு உணவளித்துக் கொண்டும், விவசாயத்தைப் பார்த்துக்கொண்டும் தன்னுடைய வாழ்க்கையை இன்புற வாழ்ந்து வருகிறார் நெப்போலியன். இவரின் முயற்சிக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism