Published:Updated:

``இயற்கை விவசாயம்தான் மனநிறைவை கொடுக்குது" கம்ப்யூட்டரிலிருந்து கழனிக்கு... கலக்கும் ஐ.டி ஊழியர்!

இயற்கை விவசாயம் செய்யும் தம்பதியர் ( எஸ்.தேவராஜன் )

இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் நிகர லாபம் பயன்படுத்துற இடுபொருள்கள் இதைச் செயற்கை விவசாயத்தோடு ஒப்பிடும்போது இவற்றில் நிகர லாபம் அதிகம். பயன்படுத்தும் இடுபொருள்களுக்கான செலவு மிகமிகக் குறைவு.

``இயற்கை விவசாயம்தான் மனநிறைவை கொடுக்குது" கம்ப்யூட்டரிலிருந்து கழனிக்கு... கலக்கும் ஐ.டி ஊழியர்!

இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் நிகர லாபம் பயன்படுத்துற இடுபொருள்கள் இதைச் செயற்கை விவசாயத்தோடு ஒப்பிடும்போது இவற்றில் நிகர லாபம் அதிகம். பயன்படுத்தும் இடுபொருள்களுக்கான செலவு மிகமிகக் குறைவு.

Published:Updated:
இயற்கை விவசாயம் செய்யும் தம்பதியர் ( எஸ்.தேவராஜன் )

பாரம்பர்ய உணவு முறைகள், விவசாய முறைகள் யாவும் முன்பெல்லாம் நம் வாழ்வியலோடு கலந்திருந்தது. ஆனால், இன்றைய நவீன உலகில் அவற்றுக்கெல்லாம் சாத்தியமில்லை என மக்கள் நினைக்கின்றனர். அதை சாத்தியமாக்கி கட்டியுள்ளார் சோஹோ (zoho)  மென்பொருள் நிறுவன ஊழியர் ராஜராஜன்.

ராஜராஜன், உமா மகேஸ்வரி | இயற்கை விவசாயம் செய்யும் தம்பதிகள்
ராஜராஜன், உமா மகேஸ்வரி | இயற்கை விவசாயம் செய்யும் தம்பதிகள்
எஸ் .தேவராஜன்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  ராஜராஜன் (46), ஐ.டி துறையில் பணியாற்றிக்கொண்டே பாரம்பர்ய நெல், தானிய வகைகளை கடந்த 9 வருடங்களாக இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறார். அவருடைய மனைவி உமா மகேஸ்வரி அவருக்கு உறுதுணையாக இருப்பதோடு, விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனையும் செய்து வருகிறார்.

இருவரும் `தற்சார்பு வாழ்வியல்' என்ற கொள்கையில் 9 வருடங்களாக இயற்கை விவசாயத்தில் பட்டை தீட்டி வருகின்றனர். மேலும், மரபு மருத்துவமும் கற்றுத் தேர்ந்து அதையும் மேற்கொண்டு வருகின்றனர். இதைப் பிறருக்கு கற்றுக் கொடுப்பதிலும் பெரும் பங்காற்றி வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள குறவப்பன்பேட்டையில் உள்ளது இவர்களுடைய வயல். நாம் சென்றவுடன் இன்முகத்தோடு வரவேற்று வயலைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்
எஸ்.தேவராஜன்

தான் கடந்து வந்த பாதை பற்றியும், இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு பற்றியும் பேச ஆரம்பித்தார் ராஜராஜன். ``நாங்கள் விவசாயக் குடும்பம்தான்..!  தாத்தா முழு நேர விவசாயி. தாத்தா காலத்தில் மிகச் சிறப்பாக பாரம்பர்ய விவசாயம் மேற்கொண்டிருக்கிறோம் என்று அப்பா அடிக்கடி சொல்வார். அப்பா காலத்தில் முழுக்க முழுக்க ரசாயன விவசாயம்..! அப்பா அம்மா இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். கோயம்புத்தூர் PSG  பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பிரிவில் இன்ஜினீயரிங் முடிச்சேன்.

படித்து முடித்த உடனே பாம்பேல ஒரு சாப்ட்வேர் புரோகிராமராக ஒரு வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, 2002-ல் சென்னையில் இருக்க zoho கம்பெனில சேர்ந்தேன். இப்ப புராடக்ட் மேனேஜர் ஆகவும், (health care divisioner) ஹெல்த்கேர்லயும் வொர்க் பண்ணிகிட்டு இருக்கேன்.

``இயற்கை விவசாயம்தான் மனநிறைவை கொடுக்குது" கம்ப்யூட்டரிலிருந்து கழனிக்கு... கலக்கும் ஐ.டி ஊழியர்!
எஸ்.தேவராஜன்

இப்படி வேலை பார்த்துக்கிட்டு இருந்த நேரத்துல விவசாயம் பத்தின நம்மாழ்வாரோட  நிகழ்ச்சியில கலந்துக்கற வாய்ப்பு கிடைச்சது. அந்தக் கூட்டம் மூலமா கிடைச்ச விழிப்புணர்வே எங்களை விவசாயம் செய்ய தூண்டுச்சு. முதன்முதல்ல என்னோட பூர்வீக நிலமான ஒரு ஏக்கரில் முழுமையாக இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். இயற்கை விவசாயம் செய்வதற்காக பயிரிடப்பட்ட ரகம் பொன்னி. ஒரு ஏக்கரில் ஆரம்பித்து பின் 5 ஏக்கர் நிலத்தில் கடந்த 9 வருடங்களாக பாரம்பர்ய ரகங்களைப் பயிர் செய்து வருகிறோம். தற்போது மொத்தமா 5 ஏக்கரில் ஒன்றரை ஏக்கர்ல இட்லி அரிசி, ஒன்றரை ஏக்கர்ல சொர்ணமசூரி, அரை ஏக்கரில்  கேழ்வரகு , கால் காணில கம்பு , தலை சத்துக்காக மீதமுள்ள இடத்தில் தக்கைபூண்டும்  போட்டிருக்கோம்.

நிலத்தை தயார் படுத்துதல்

``முதன்முதலில் இயற்கை விவசாயம் செய்யும்போது, இயற்கை விவசாயத்துக்கு நிலத்தை தயார்படுத்தணும். பல தானிய பயிர்களை விதைத்து, நிலத்தின் உயிர்ப்புத் தன்மைக்காக , தழைச்சத்து கிடைப்பதற்காக முதலில் பலதானிய பயிர்களை நாங்கள் விதைத்தோம். ரசாயன தாக்கத்தைக் குறைத்து நிலத்தை உயிர்ப்புள்ள நிலமா மாத்துறதுக்காக இந்த பல தானிய பயிர்களை விதைக்கிறோம். நிலத்தை உழுதுட்டு அதுக்கப் புறமாக அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு எல்லாம் கலந்து போடணும். இது எல்லா பயிர்களுக்கும் பொருந்தும். அதுக்கப்புறம் விதைக்கிறதுதான். விதைக்கிறதுக்கு முன்னாடி `விதைநேர்த்தி' என்று ஒன்று இருக்கு. அதுபடி விதைகளைத் தேர்ந்தெடுத்து வச்சுக்கணும்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்
எஸ் .தேவராஜன்

``விதைகளைத் தேர்ந்தெடுத்து தேவையான அளவு தண்ணில கொஞ்சம் கல்லு உப்பு போட்டு அதுல ஒரு நாட்டு முட்டையை எடுத்து முழுசா மிதக்க விடணும். அது உள்ள போயிடுச்சு அப்படின்னா அதுக்கு இன்னும் செரிவு தேவை அப்படின்னு அர்த்தம். அது மேல மிதக்கிற வரைக்கும் உப்பு போட்டுக்கிட்டே இருக்கணும். முட்டை மேல வரும்போது அதற்கான செரிவு போதுமான அளவு கிடைச்சிருச்சு அப்படின்னு அர்த்தம். இப்ப செரிவுள்ள அந்த உப்பு தண்ணியில விதைகளைக் கொட்டும்போது, நேர்த்தியான விதைகள் அடியிலயும், முளைப்புத்திறன் கம்மியா உள்ள விதைகள் எல்லாம் மேலயும் வந்துரும். நேர்த்தியான விதைகளைச் சேகரித்து எடுத்து, உடனடியாக உப்புத் தண்ணீரில் இருந்து சாதாரண தண்ணீரில் அலசி எடுக்கணும். அப்போது உப்புத்தன்மை இல்லாமல் போய்டும். அதிக நேரம் உப்புத் தண்ணீரில் விதைகள் இருக்கக் கூடாது.

பயிரிடும் முறை

முளைக்க வைத்த விதைகளை ஒரு ஏக்கருக்கு 30 கிலோ விதைக்கலாம். 2 கிலோகூட விதைக்கலாம். அதற்கு பல முறைகள் இருக்கு. விதைச்சப்புறம் பத்து பதினைந்து நாளில் மறுபடியும் ஜீவாமிர்தம். அப்புறம் பஞ்சகவ்யா கொடுக்கலாம். அதுக்கப்புறம் நாத்து பறிச்சு நடணும். இளம்பயிர்லயே நாத்து பிரிச்சு நட காரணம், அதிகமா முளைச்சு வரும், அதிக மகசூல் கிடைக்கும். இதுல கம்பு மட்டும் நேரடி விதைப்பு. இதுல பெரும்பான்மையான சத்து வளர்ச்சி பருவத்திலேயே பயிர்களுக்கு கிடைச்சுடும். அதுக்கப்புறம் பூக்கும் பருவம் வரும். பூக்கும் பருவம் அப்ப நம்ம நீர் மோர் கரைசல், தேமோர் கரைசல் கொடுக்கணும்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்
எஸ்.தேவராஜன்

பூக்கும் பருவத்துல தேமோர் கரைசல் எல்லா பயிர்களுக்கும் ஏற்றது. பூக்கும் பருவத்தில, பூச்சி தாக்குதல் இருந்தா பூச்சிவிரட்டி கொடுக்கலாம். அதீத பூச்சி தாக்குதலுக்கு இஞ்சி அதோட மிளகாய் சேர்த்து கொடுக்கலாம். ஒரு கட்டத்துக்கு மேல் விளைச்சல் வந்ததுக்கப்புறம் தண்ணீர் கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமா இருந்தாதான் பயிர் வந்து சாயாம இருக்கும். பெரும்பான்மையான பாரம்பர்ய ரகங்களில் பயிர்கள் சாயாது.

பயிரிடப்படும் பாரம்பர்ய ரகங்கள்:

பொன்னி - நான்கரை மாதங்கள்

சீரகசம்பா - நான்கரை மாதங்கள்

சொர்ணமசூரி - நான்கரை மாதங்கள்

கறுப்புக்கவுனி - 145 நாள்கள்

மாப்பிள்ளை சம்பா- 160 நாள்கள்

பூங்கார் (சிகப்பரிசி) - 3 மாதங்கள்

குள்ளக்கார் - நான்கரை மாதங்கள்

கருங்குறுவை - நான்கரை மாதங்கள்

60-ம்குறுவை - 60 நாள்கள்

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்
எஸ்.தேவராஜன்

ஒவ்வொரு சம்பா பருவத்திலும் தொடர்ந்து கறுப்புக் கவுனியை சாகுபடி செய்து வருகிறோம். மாப்பிள்ளை சம்பா மற்ற ரகங்களை ஒப்பிடும்போது 20 நாள்கள் அதிகம். இருக்கிறதிலேயே அதிக வாழ்நாள் கொண்ட பயிர் மாப்பிள்ளை சம்பா. அதீத சத்துகள் கொண்டவை. இதேபோன்று தங்கசம்பா. தங்கச்சம்பா சீரகசம்பாவைப் போன்றே சன்ன ரகம். தூயமல்லி அப்படிங்கற ஒரு நெல் ரகம். இது மிகவும் அரிதான ஒன்று. குருவை ரகத்துல சிறப்பு வாய்ந்தது பூங்கார் (சிகப்பரிசி).

செலவெல்லாம் போக ஏக்கருக்கு 50,000 ரூபாய் லாபம் கிடைக்கும். மதிப்புக் கூட்டுப் பொருள்களும் தயார் செய்றோம். முழுக்க முழுக்க என் மனைவிதான் மதிப்புக் கூட்டுப் பொருள்களை எல்லாம் பார்த்துகுறாங்க'' என்று பேசி முடித்த ராஜராஜன் தன் மனைவியை அறிமுகப்படுத்தினார்.

புன்னகையுடன் பேச ஆரம்பித்த உமா மகேஸ்வரி, ``மதிப்புக்கூட்டு பொருளிலிருந்து நல்ல சத்துள்ள பொருள்களை மத்தவங்களுக்கு கொடுக்கிறோம். எங்களோட பயன்பாட்டுக்கு பயன்படுத்துகிறோம். குழந்தைகளும் அதைத்தான் விரும்புறாங்க. ஒருவாட்டி அதில் இருக்க பொருளை வச்சு நாங்க தின்பண்டங்கள் செய்து கொடுக்கும்போது திரும்பியும் அதைத்தான் குழந்தைகள் கேக்குறாங்க.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்
எஸ் .தேவராஜன்

எல்லா வகையான அரிசியிலும் இருக்க அவல், அடுப்பில்லாமல் சமைத்த புட்டு ரெடி பண்ணிடலாம். அந்த புட்டுல முழுமையான உயிர்ச்சத்து கிடைக்கும். குழந்தைகளிலிருந்து எல்லாருக்குமே இது ரொம்ப நல்ல ஒரு இணை உணவு.

அதுமட்டுமல்லாமல் கஞ்சி வருவதற்குத் தேவையான அரிசியாகவோ, உப்புமா பண்றதக்குத் தேவையான தினையாகவோ இதை நம்ப உபயோகிக்கலாம். இது மட்டுமல்லாம, சீடை தட்டை, முறுக்கு போன்ற பண்டங்களை பாரம்பர்ய ரகங்களான கறுப்பரிசி, சிவப்பரிசி, கறுப்புக்கவுனி இந்த அரிசிகளிலிருந்தும், எள், கடலை இதிலிருந்தும் செய்யலாம். இப்படி மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றலாம். எங்களோட அடுத்த திட்டம் கிராமப்புற பெண்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது. பாரம்பர்ய ரகங்கள் பண்ற மாதிரியே காய்கறிகளையும் பழங்களையும் பண்ணலாம்னு இருக்கும்.

இயற்கை விவசாயிகளுக்கு எனத் தனியே ஒரு சந்தை இருந்தால் நல்லது. எல்லாரும் பாரம்பர்யத்துக்கு மாறனும் அப்படின்னு நான் கேட்டுக்குறேன். நம் உணவுமுறையைக் கொஞ்சம் மாற்றி அமைத்துக்கொண்டால் நல்லா இருக்கும்" என்று விடைகொடுத்தார்.