Published:Updated:

`டானிக் மூலம் மகசூலைக் கூட்டுங்கள்!' - தென்னை விவசாயிகளை அழைக்கும் KVK

தென்னை டானிக்

``குரும்பை உதிர்வதைத் தடுக்க, விவசாயிகள் தனியார் கடைகளில் கிடைக்கக்கூடிய விதவிதமான டானிக்குகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அவற்றின் விலை மிகவும் அதிகம். அவற்றில் பெரும்பாலானவை உரிய பலன் கொடுப்பதுமில்லை."

`டானிக் மூலம் மகசூலைக் கூட்டுங்கள்!' - தென்னை விவசாயிகளை அழைக்கும் KVK

``குரும்பை உதிர்வதைத் தடுக்க, விவசாயிகள் தனியார் கடைகளில் கிடைக்கக்கூடிய விதவிதமான டானிக்குகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அவற்றின் விலை மிகவும் அதிகம். அவற்றில் பெரும்பாலானவை உரிய பலன் கொடுப்பதுமில்லை."

Published:Updated:
தென்னை டானிக்

2018-ம் ஆண்டு கஜா புயலாலும், கடந்த ஆண்டு வீசிய புரெவி புயலின் காரணமாகவும் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள தென்னை மரங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அது ஒருபுறமிருக்க, தப்பிப் பிழைத்து, எஞ்சியுள்ள தென்னை மரங்களில் குரும்பை உதிர்தல் மற்றும் குரும்பை உருவாகாமல் இருத்தல் போன்றவை முக்கிய பிரச்னைகளாக இருந்து வருகின்றன. இதனால் குறைவான மகசூல் கிடைப்பதால், இப்பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகள் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில்தான் இப்பிரச்னையைத் தடுக்கவும், தரமான காய்களை உருவாக்கவும், குறைந்த விலையில் தரமான டானிக் தங்களிடம் இருப்பதாகத் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நீடாமங்கலம் கேவிகே
நீடாமங்கலம் கேவிகே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தனி தோப்புகளாக மட்டுமல்லாமல், நெல் சாகுபடி செய்யப்படும் வயல்களின் வரப்புகளில் தென்னை வளர்க்கப்படுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன், ``தென்னையில் குரும்பை வைக்கவும், குரும்பை உதிராமல் காய்களாக மாறவும், திரட்சியான தேங்காய்கள் கிடைக்கவும், குறைந்த விலையில் தரமான டானிக் கிடைக்க, இங்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

தென்னை மரம்
தென்னை மரம்

டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இது மிக எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தினால், எங்களது நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இதை விநியோகம் செய்கிறோம். குரும்பை உதிர்வதைத் தடுக்க, விவசாயிகள் தனியார் கடைகளில் கிடைக்கக்கூடிய விதவிதமான டானிக்குகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அவற்றின் விலை மிகவும் அதிகம். அதுமட்டுமல்லாமல் அவற்றில் பெரும்பாலானவை உரிய பலன் கொடுப்பதுமில்லை, தரத்திற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள, தென்னை டானிக்கின் விலை மிகவும் குறைவு, ஒரு லிட்டர் 309 ரூபாய்தான். இது அடர் திரவ நிலையில் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு லிட்டர் தென்னை டானிக் உடன் 4 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு மரத்திற்கு 200 மில்லி வீதம் 25 மரங்களுக்கு வேரில் பாலிதீன் பையைக் கொண்டு கட்ட வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் உள்ள அனைத்து மரங்களுக்கும் மரத்திலிருந்து இரண்டடி தூரம் தள்ளி மண்ணைத் தோண்டும்போது கிடைக்கும் இளம் வேர்களில் கத்தியைக் கொண்டு சீவி தென்னை டானிக் பாக்கெட்டை உள்ளே நுழைத்து கட்டி விட வேண்டும்.

தென்னை விவசாயம்
தென்னை விவசாயம்

வறட்சியாக இருக்கும்போது ஓரிரு நாள்களில் இந்த மருந்து மரத்தால் உறிஞ்சப்பட்டு பயிர் எடுத்துக்கொள்கிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இதைப் பயன்படுத்தும்போது தென்னை இலைகள், ஓலைகள் கரும் பச்சை நிறமாக மாறி குரும்பை உதிராமல் வாளிப்பான காய்களைத் தரும். ஒல்லிக்காய், காய்களில் சொறி விழுதல் போன்ற பிரச்னைகளும் தடுக்கப்படும். இந்த டானிக்கை தென்னை மரங்களுக்கு கொடுக்க, ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மிகவும் ஏற்றது. விவசாயிகள் பிளாஸ்டிக் கேன்களோடு வந்து எங்களது நீடாமங்கலம் கே.வி.கே-வில் இதை வாங்கிச் செல்லலாம். மேலும், விவரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் நக்கீரனை 93602 47160 என்ற செல் எண்ணில் தொடர்புகொள்ளலாம்’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism