Published:Updated:

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி; ஆய்வுக்கு உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்!

பூச்சிக்கொல்லி

பூச்சிகளை அழிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால், பூச்சிகள் மட்டுமல்லாது, பூமிக்கு நன்மை விளைவிக்கக்கூடிய பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி; ஆய்வுக்கு உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்!

பூச்சிகளை அழிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால், பூச்சிகள் மட்டுமல்லாது, பூமிக்கு நன்மை விளைவிக்கக்கூடிய பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன.

Published:Updated:
பூச்சிக்கொல்லி

குப்பைக்கிடங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், நிலத்தடி நீர் மற்றும் மண்ணில் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் உள்ளதா என்பதை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

National Green Tribunal
National Green Tribunal
Photo: Vikatan / Ashok kumar.D

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பசுமை தீர்ப்பாயத்தின் சிறப்பு அமர்வில் கோபிநீலன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் பூச்சிகளை அழிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால், பூச்சிகள் மட்டுமல்லாது, பூமிக்கு நன்மை விளைவிக்கக்கூடிய பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன, அதுமட்டுமல்லாமல் இதற்காகப் பயன் படுத்தப்படும் மருந்து பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள் சரியான முறையில் அழிக்கப்படாமல் எச்சங்களாகக் குப்பைகளில் கொட்டப்படுகின்றன.

இவ்வாறு கொட்டப்படும் பூச்சிக்கொல்லிக் கழிவுகள் மண்ணிலும் நீரிலும், காற்றிலும் கலந்து சூழலுக்கு பாதிப்பை விளைவிக் கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மண்ணிலும் நிலத்தடி நீரிலும் கலந்த இந்தப் பூச்சிக்கொல்லிகள், விளைவிக்கப்படும் உணவுப் பொருள்கள் வழியாக மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை நெறிப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

பூச்சிக்கொல்லி
பூச்சிக்கொல்லி

இந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரான ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான சிறப்பு அமர்வால் விசாரிக்கப் பட்டது. அதில் நகரங்களில் அபாயகரமான கழிவுகள் கொட்டப்படும் இடங்களிலும், குப்பைக் கிடங்குகளிலும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும், நிலத்தடி நீர் மற்றும் மண்ணில் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 500 மீட்டர் பரப்பளவில் நிலத்தடி நீர் மற்றும் மண்ணின் மாதிரிகளை பரிசோதிக்க வேண்டும், இதை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism