இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நீலகிரியில் நடைபெறவுள்ள கோடை விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மே மாதம் முழுவதும் நடைபெற இருக்கும் கோடை விழாவில் காய்கறிகள், மலர்கள், பழங்கள் மற்றும் நறுமண பொருள்களின் கண்காட்சிகளும் நடைபெற உள்ளன.

கோடை விழாவைக் காண லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்பதால் பயணிகளைக் கவரும் வகையில், பூங்காக்களை பொலிவுப் படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்லும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ரகங்களில் லட்சக்கணக்கான மலர்ச் செடிகள் பூக்கும் தருணத்தில் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்லும் மலர் வகைகளை அவரவர் வீடுகளில் வளர்க்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்யவும் ஏற்பாடு நடந்து வருகிறது. மலர் மற்றும் அலங்கார நாற்றுகளை நடவு செய்து பராமரிக்க ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நாற்றங்கால்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது இந்த நாற்றங்கால்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 2 லட்சம் மலர் நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. ரூ.10 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படும் நாற்றுகளைச் சுற்றுலாப் பயணிகள் தற்போதே ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மலர் நாற்றுகள் விற்பனை குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், ``தோட்டக்கலைத்துறையின் கீழ் ஜாம், ஜெல்லி, டீ, காபி மற்றும் தாவரங்களை விற்பனை செய்து வருகிறோம்.

கோடை சீஸனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்லும் வகையில் ஆர்க்கிட், காக்டஸ், அந்தூரியம் என ஐம்பதுக்கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 2 லட்சம் நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. மலைப்பகுதி மற்றும் சமவெளிப் பகுதிகளில் வளரக்கூடிய தாவர வகைகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்" என்றார்.