Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: காப்பி நாற்று உற்பத்தி! - பொது முடக்கத்தில் அசத்தும் பழங்குடி இனப் பெண்கள்

coffee planting
coffee planting

தங்களுக்குத் தேவையான காப்பி நாற்றுகளுக்கு பிறரைச் சார்ந்தும், வெளியில் பணம் கொடுத்தும் வாங்கிவந்த செங்கல்புதூர் பழங்குடி மக்கள், தற்போது தாங்களாகவே காப்பி நாற்றுகளை உற்பத்திசெய்து, பிறருக்கும் வழங்க உள்ளனர்.

சுற்றுலாவையும், தோட்டப்பயிர்களையும் முதன்மைத் தொழிலாகச் சார்ந்துள்ள நீலகிரி மாவட்டத்தில், பொது முடக்கத்தால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரமும் முடங்கியுள்ளது.

sengalputhoor village
sengalputhoor village

கட்டுக்குள் இருந்த நீலகிரியில், தற்போது கொரோனா பெருந்தொற்று அதிவேகத்தில் பரவிவருகிறது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துவிட்டது. தொற்று பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது முதல், நீலகிரி மலைக்கிராமங்களில் வாழும் மக்கள், பெரும்பாலும் ஊருக்குள்ளேயே முடங்கிவிட்டனர். கொரோனா அச்சத்தால் புதிதாக வெளியாட்கள் யாரையும் தங்கள் கிராமங்களுக்குள் அனுமதிப்பதில்லை.

sengalputhoor village
sengalputhoor village

இந்த நிலையில், குன்னூரின் கடைக்கோடியில் அமைந்துள்ள செங்கல்புதூர் பழங்குடியின கிராம மக்கள், தங்கள் ஊர் எல்லைகளை அடைத்துவிட்டு, தன்னார்வலர்களின் உதவியுடன் ஆக்கப்பூர்வமாக காப்பி நாற்றுகளை உற்பத்தி செய்து, ஊரடங்கிலும் அசத்திவருகின்றனர்.

இந்த நம்பிக்கை முயற்சிகுறித்து நம்மிடம் பேசிய பழங்குடியின பாட்டி தேவி, "வழக்கமாகவே நாங்க ஊரைவிட்டு வெளிய அதிகமா போறது இல்ல. இப்போ ஏதோ கொரோனா வருதுனு சொல்றாங்க. எங்க மக்கள் யாருமே டவுன் பக்கம் போறத நிப்பாட்டிட்டோம். வண்டி வசதி இல்லாததால எங்க பொருள்களை விற்க முடியாம தவிக்கிறோம். கொஞ்நாள் ஊர்ல வேலைவெட்டி இல்லாம இருந்தோம். சிலபேர் உதவி பண்றோம்னு சொன்னாங்க. ஊர் மக்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து, காப்பி நாத்து உற்பத்தி பண்றோம்.

நீலகிரி: காப்பி நாற்று உற்பத்தி! - பொது முடக்கத்தில் அசத்தும் பழங்குடி இனப் பெண்கள்

ஒருத்தர் ஒரு நாளைக்கு 150 பாக்கெட் தயார் பண்ணலாம். 35 குடும்பம் இருக்கோம். இதுவரை எங்க நெலத்துக்கே வெளியே இருந்துதான் வாங்குவோம். ஆனா இப்போ, எங்க நிலத்துல நட்ட மீதியை மத்தவங்களுக்குக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இப்போ, காப்பிய நட்டோமுனா பின்னாடி எங்க பசங்க இதுல காய்க்கிற காப்பிய வித்து பொழச்சிக்குவாங்கன்னு நம்பித்தான் நடுறோம்" என‌ நம்பிக்கையுடன் வேலையைத் தொடர்ந்தார்.

இவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய மற்றொரு பழங்குடியின பெண் ராணி, "காப்பி நாத்து உற்பத்தியில ஒரு பாக்கெட்டுக்கு ஒரு ரூபாய் கிடைக்குது. ஏதோ பரவால. ஆனா, கடைக்கோடியில இருக்க எங்க கிராமத்துக்கு மளிகை, காய்கறி, பொருள்கள் சரியா கிடைக்கிறது இல்ல. ரேஷன் பொருள் கிடைக்குது. ஆனா பத்துறது இல்லை.

coffee planting
coffee planting

வெங்காயம், தக்காளிகூட கிடைக்கல. அதேமாதிரி, ஆஸ்பத்திரிக்குப் போக வசதியும்‌ இல்ல. வட்டிகாரங்க (நுண்கடன் நிறுவனங்கள்) வந்து ரொம்ப மோசமா பேசுறாங்க. இது ரெண்டையும் கொஞ்சம் அரசாங்கம் கவனிச்சிக் கொடுத்தா சமாளிச்சுக்குவோம்" என பொதுமுடக்க பாதிப்புகள் குறித்து விவரித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு