Published:Updated:

உயரும் ஊட்டி உருளைக்கிழங்கு விலை; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

ஊட்டி உருளைக்கிழங்கு
ஊட்டி உருளைக்கிழங்கு

ஊட்டியில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்குக்கு தற்போது ரூ.50 முதல் 60 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு விளையும் கிழங்குகளை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மேலும் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் மண்டிகளில் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

ஊட்டி உருளைக்கிழங்கு
ஊட்டி உருளைக்கிழங்கு
ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ₹20,000 மானியம்; விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு!

கடந்த வாரம் வரை கிலோ ஒன்றுக்கு ரூ.40-க்கு கீழ் விற்பனையாகி வந்த உருளைக்கிழங்கு தற்போது ரூ.55 முதல் 60 வரை விலை போகிறது.

ஊட்டி நகராட்சி சந்தையில் நேற்று நடத்தப்பட்ட ஏலத்தில் உருளைக்கிழங்கின் தரத்துக்கு ஏற்றவாறு கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் 60 வரை விலை போனது. உரிய விலை கிடைத்து வருவதால் பெரும்பாலான சிறு மற்றும் குறு விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஊட்டி உருளைக்கிழங்கு
ஊட்டி உருளைக்கிழங்கு
ஒரு கிலோ ₹16,400; சர்வதேச ஏலத்தில் புதிய உச்சம்; இந்த நீலகிரி தேயிலையில் என்ன ஸ்பெஷல்?

இது குறித்து நம்மிடம் பேசிய உருளைக்கிழங்கு விவசாயி பரமசிவம், ``உருளைக்கிழங்கில் எப்போதும் பெருசா லாபம் ஒண்ணும் கிடைக்காது. போன வாரம் வரை விலை ரொம்ப குறைவா இருந்தது. இந்த வாரம் கொஞ்சம் பரவால்ல. இந்த விலை கிடைச்சா போட்ட முதல் வந்துடும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு