Published:Updated:

நீலகிரி: நாற்று நடவில் கூடலூர் விவசாயிகள்! - பேரிடரில் துளிர்க்கும் நம்பிக்கை

நாற்று நடவில் கூடலூர் விவசாயிகள்.
நாற்று நடவில் கூடலூர் விவசாயிகள்.

ஊரே வெள்ளத்தில் தத்தளிக்கும் வேளையில், துயரங்களைத் தூக்கியெறிந்து விட்டு இந்தப் பெருமழையைச் சாதகமாக்கி நெல் நாற்று நடவில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நம்பிக்கை பாராட்டை பெற்று வருகிறது.

அவலாஞ்சியை மீறி கூடலூரில் கொட்டித் தீர்த்து வருகிறது பெருமழை. கூடலூர், மேல் கூடலூர், தேவாலா இந்தப் பகுதிகளில் 20 செ.மீ-க்கும் குறையாமல் கடந்த மூன்று நாள்களாகக் கொட்டிய மழையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது.

நாற்று நடவில் கூடலூர் விவசாயிகள்
நாற்று நடவில் கூடலூர் விவசாயிகள்

முதல் மைல், வேடன் வயல், புத்தூர் வயல், புறமனவயல் உள்ளிட்ட ‌கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்ததால், நூற்றுக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல நூறு ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, இஞ்சி, மரவள்ளி, சேனைக்கிழங்கு உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. கடந்த ஆண்டு பெய்த பெருமழை துயரிலிருந்தே இன்னும் மீண்டிராத இந்த விவசாயிகளுக்கு, பேரிடியாய் வந்தது இந்த இரண்டாம் பெருமழையும் பேரிடரும்.

நீலகிரி: நாற்று நடவில் கூடலூர் விவசாயிகள்! - பேரிடரில் துளிர்க்கும் நம்பிக்கை

ஊரே வெள்ளத்தில் தத்தளிக்கும் வேளையில், துயரங்களை தூக்கியெறிந்து விட்டு இந்த பெருமழையை சாதகமாக்கி நெல் நாற்று நடவில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நம்பிக்கை பாராட்டை பெற்று வருகிறது.

`அவலாஞ்சியைப் பின்னுக்குத் தள்ளிய தேவாலா!' - பெருமழையில் தத்தளிக்கும் நீலகிரி

புத்தூர் வயல் பகுதியில் கொட்டும் மழையில் நெல் நாற்றுக்களை நட்டுக்கொண்டிருந்த விவசாயி ஜோஷிடம் பேசினோம். ``மூணு நாளை விடாம மழை பெய்யுது. மத்த பயிர்ங்க எல்லாமே தண்ணில மூழ்கிப் போச்சு. பக்கத்துல பயிர் செஞ்ச விவசாயிகளும் அறுவடைக்குத் தயாரா இருந்தாங்க. ஆனா, எதிர்பார்த்ததைவிட ரொம்ப அதிகமாவே கொட்டுன மழைல எல்லாமே போச்சு. சரி அதப்பத்தியே புலம்பாம தண்ணி நிண்ண‌ வயல உழுது, நாத்து நட ஆரம்பிச்சிட்டோம். நடக்குறது நடக்கட்டும் நம்ம வேலைய பார்ப்போம்" என வயலுக்குள் இறங்கினார்.

நாற்று நடவில் கூடலூர் விவசாயிகள்
நாற்று நடவில் கூடலூர் விவசாயிகள்

மழையில் பிளாஸ்டிக் ஷீட் அணிந்தபடி நாற்றுகளை நேர்த்தியாக போட்டுக்கொண்டிருந்த பழங்குடியின பெண் ஒருவர் பேசுகையில், ``ரெண்டு நாள் மழைய பாத்து பயந்து கெடந்தோம். தண்ணி கொஞ்சம் வடிய ஆரம்பிச்சதும், நாத்து நடுறோம். இந்த வண்டல்ல நட்டா நல்லா செழிப்பா வரும்" என்றார் நம்பிக்கையுடன்.

அடுத்த கட்டுரைக்கு