Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: கசக்கும் பாகற்காய் விலை... கண்ணீரில் கூடலூர் விவசாயிகள்!

bitter gaurd
bitter gaurd

கிலோவுக்கு முப்பத்தஞ்சி ரூபாய்க்கு மேல கெடச்சாதான் புரோஜனமா இருக்கும். ஆனா, எங்ககிட்ட 20 ரூபாய்க்கும் கம்மியாதான் வாங்குறாங்க. செலவுக்கே கட்டல.

மலையகத்தின் சமவெளி என அழைக்கப்படும் கூடலூரில் தேயிலை, காப்பி, நெல், வாழை என அனைத்துப் பயிர்களும் விளையும் காலநிலையைக் கொண்ட பொன் விளையும் பூமியாக உள்ளது. அதேபோல் யானை, புலி, இருவாச்சி போன்ற காட்டுயிர்களின் வாழிடமாகவும் உள்ளது.

bitter gaurd
bitter gaurd

மனித-வன விலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் இந்தப் பகுதியில் தற்போது மாற்று பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். யானை உள்ளிட்ட வன‌ விலங்குகள் தவிர்க்கூடிய பாகற்காய் சாகுபடியில் அதிகளவு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அறுவடைக்காலம் என்பதால் கூடலூர், பாடந்தொரை, தொரப்பள்ளி, தோட்டமூலா, அள்ளூர் வயல், ஸ்ரீ மதுரை, முதுமலை ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பாகற்காய் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இவற்றுக்கு போதிய விலை கிடைக்காததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

bitter gaurd
bitter gaurd

இது குறித்து நம்மிடம் பேசிய விவசாயி மணி, "எங்க ஏரியால பாகக்காதான் மெயின். யானை உள்ள வராதுங்குறதுதான் முக்கியமா நாங்க இதைத் தேர்வு செய்றோம். கிலோவுக்கு 35 ரூபாய்க்கு மேல கெடச்சாதான் புரோஜனமா இருக்கும். ஆனா, எங்ககிட்ட 20 ரூபாய்க்கும் கம்மியாதான் வாங்குறாங்க. செலவுக்கே கட்டல. அடுத்த வெள்ளாமைக்கு முட்டுவலியில்லாம தவிக்கிறோம்.

இது குறித்து கூடலூரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் பேசுகையில், ``இங்கு விளையும் பாகற்காய்களை கேரளா மற்றும் கர்நாடக மாநில வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக கேரள, கர்நாடக வியாபாரிகள் தற்போது அதிகம் வருவதில்லை.

bitter gaurd
bitter gaurd

மேலும் சில வியாபாரிகள் மிகக்குறைந்த விலையில் தோட்டத்திலேயே வந்து வாங்கிச் சென்று வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இது விவசாயிகளையே பாதிக்கிறது" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு