Published:Updated:

`அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை!' - கவலையில் தென் மாவட்ட விவசாயிகள்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021

``செலவு அதிகம் என்று அதிமுக ஆட்சியில் சொன்னதையே இப்போதைய ஆட்சியிலும் சொல்லி சர்க்கரை ஆலையை திறக்காமல் மூடியபடியே இருக்கிறது."

`அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை!' - கவலையில் தென் மாவட்ட விவசாயிகள்

``செலவு அதிகம் என்று அதிமுக ஆட்சியில் சொன்னதையே இப்போதைய ஆட்சியிலும் சொல்லி சர்க்கரை ஆலையை திறக்காமல் மூடியபடியே இருக்கிறது."

Published:Updated:
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021

மூடப்பட்டிருக்கும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறப்பது சம்பந்தமாக இன்று தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாததால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட கரும்பு விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள கூட்டுறவு ஆலைகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இரண்டு ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை

இதனால், இந்த ஆலையை நம்பி கரும்பு சாகுபடி செய்தவர்களும், ஆலையில் வேலை பார்த்தவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஆலையை திறக்க அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லாத நிலையில் ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது விவசாயிகளிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன், மாவட்ட அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் மதுரை வட்டார கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அலங்காநல்லூர் ஆலை திறப்பு பற்றி தெரிவிக்கவில்லை.

வேளாண் பட்ஜெட்டை வாசிக்கும் அமைச்சர்
வேளாண் பட்ஜெட்டை வாசிக்கும் அமைச்சர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கரும்பு விவசாயிகள், ``மதுரைக்கு அருகே அமைந்திருக்கும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை முக்கியமானது. இந்த ஆலையில் அரவைக்கு தேவையான கரும்பு வரவில்லை என்று நிர்வாகம் காரணம் சொன்னது.

ஆனால், நிர்வாக கோளாறால்தான் ஆலை இயங்காமல் உள்ளது. கரும்பு பற்றாக்குறையெல்லாம் இல்லை. 2 லட்சம் டன் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் செலவு அதிகம் என்று அதிமுக ஆட்சியில் சொன்னதையே இப்போதைய ஆட்சியிலும் சொல்லி ஆலையை திறக்காமல் மூடியபடியே இருக்கிறது. சரி, பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். அதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை " என்றனர்.

இதுகுறித்து மேலும் நம்மிடம் பேசிய பெரியாறு வைகை ஆயக்கட்டு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் எம்பி.இராமன், ``கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு மூவாயிரத்துக்கும் மேல் உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறினார்கள். தற்போது பட்ஜெட்டில் சிறப்பு ஊக்கத்தொகையாக 195 ரூபாய் மட்டும் உயர்த்தி 2950 ரூபாயாக அறிவித்து கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளார்கள்.

எம்பி.இராமன்
எம்பி.இராமன்

அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து கரும்பு விவசாயிகளை காப்பாற்ற எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. இது மிகவும் கவலையளிக்கிறது.

உசிலம்பட்டி பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைப்பதாக கூறியதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மொத்ததில் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்" என்றார்.