விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்காத யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் உள்பட 3 பேருக்கு பிடியாணை பிறப்பித்தது அரியலூர் நீதிமன்றம்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் குழுமூர் கிராமத்தை சேர்ந்த 60 விவசாயிகள் யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் கம்பெனியில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். பயிர் காப்பீடு செய்த 60 விவசாயிகளுக்கு இயற்கைச் சீற்றங்களால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில் பயிர் காப்பீடு வழங்காத யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் மீது கடந்த 2014-ம் ஆண்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி ஒவ்வொரு விவசாயியின் மன உளைச்சலுக்கு ரூ.2 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாகவும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரமும் வழங்க அப்போதைய நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி 9 லட்சத்து 33 ஆயிரத்து 45 ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்காததால் அரியலூர் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர், விவசாய காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர், அரியலூர் கிளை மேலாளர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, இந்த உத்தரவை ஒரு மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளார்.