Published:Updated:

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் அதிசயம்; மத்திய அரசுடன் மோதும் ஓ.பி.எஸ்!

ஓபிஎஸ்

``மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முற்றிலும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும், கேரளாவுக்குத் துணைபோவதுபோல் அமைந்துள்ளது. நீர்வள ஆணையத்தின் மனுத்தாக்கலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு."

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் அதிசயம்; மத்திய அரசுடன் மோதும் ஓ.பி.எஸ்!

``மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முற்றிலும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும், கேரளாவுக்குத் துணைபோவதுபோல் அமைந்துள்ளது. நீர்வள ஆணையத்தின் மனுத்தாக்கலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு."

Published:Updated:
ஓபிஎஸ்

முல்லை பெரியாறு அணைப் பாதுகாப்பு தொடர்பாக மறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இதற்கு தமிழக விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ``முல்லை பெரியாறு அணைக்கு தேக்கடியில் இருந்து படகு மூலம்தான் செல்ல வேண்டும். பேபி அணையைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் ஐந்து கிலோ மீட்டர் நீளமுள்ள வல்லக்கடவு முல்லைப் பெரியாறு அணுகு சாலையை சரி செய்த பின் அந்தச் சாலை வழியாகக் கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

முல்லைப்பெரியாறு
முல்லைப்பெரியாறு

உச்ச நீதிமன்ற தீர்ப்பை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு, அணுகு சாலையை சரி செய்யவோ, அங்குள்ள மரங்களை வெட்டவும் முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இதுகுறித்து கண்காணிப்புக் குழு முன்பு பலமுறை தமிழக அரசு சார்பில் எடுத்துக் கூறப்பட்டு இருக்கிறது. இருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், அணையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் அதனுடைய கட்டமைப்புகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துவிட்டு, அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபோன்ற சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் கேரள அரசின் நடவடிக்கையை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த, தேவையான நடவடிக்கை எடுக்கும் வகையில், மனுத்தாக்கல் செய்யாமல் அதை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் மனுத்தாக்கல் செய்திருப்பது நியாயமற்றது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முற்றிலும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும், கேரளாவுக்கு துணை போவதுபோல் அமைந்துள்ளது மத்திய நீர்வள ஆணையத்தின் மனுத்தாக்கல். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கை கடும் எதிர்ப்பைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். பேபி அணை மற்றும் அணைப் பகுதிகளில் வலுப்படுத்தும் வகையில், மரங்களை வெட்டவும், அணுகு சாலையை சரி செய்யவும் அனுமதி வழங்குமாறு, கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசின் சார்பில் திறமையான வழக்கறிஞர்களை மூலம் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் இதை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மத்திய நீர்வள ஆணையம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மறு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.