Published:Updated:

டெல்டாவைப் பாழடிக்கும் ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் குழாய்கள்; இஸ்மாயில் குழு அறிக்கை என்ன ஆச்சு?

கச்சா எண்ணெய் பரவிய வயல்

தமிழக அரசின் வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றாமல் பூமி மட்டத்திலிருந்து 3 அடி, 4 அடி ஆழத்தில் மட்டுமே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

டெல்டாவைப் பாழடிக்கும் ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் குழாய்கள்; இஸ்மாயில் குழு அறிக்கை என்ன ஆச்சு?

தமிழக அரசின் வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றாமல் பூமி மட்டத்திலிருந்து 3 அடி, 4 அடி ஆழத்தில் மட்டுமே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
கச்சா எண்ணெய் பரவிய வயல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயு-கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டங்களால் இப்பகுதி விவசாயிகளின் விளைநிலங்களில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. நிலத்தடி நீர், காற்று உள்ளிட்டவையும் மாசடைந்து மக்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

டெல்டா விவசாயம்
டெல்டா விவசாயம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கக்கூடிய வகையில் மிகவும் ஆபத்தான திட்டங்களான மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் என எண்ணெய்-எரிவாயு திட்டங்கள் காவிரி டெல்டாவை தொடர்ந்நு அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. இந்நிலையில்தான் இப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இது மட்டும் போதாது, தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளையும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் பேராபத்துகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் எரிவாயு-கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி வந்தார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில்தான் இதுகுறித்து கள ஆய்வு செய்ய, மண்ணியல் விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது. அக்குழு கள ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 ஒ.என்.ஜி.சி.
ஒ.என்.ஜி.சி.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன் ‘’திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வயல்வெளிகளில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பேராசிரியர் இஸ்மாயில்
பேராசிரியர் இஸ்மாயில்

அவ்வாறு கொண்டு செல்லப்படுகிற பாதைகளில் விளைநிலங்களுக்கு கீழே புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றாமல் பூமி மட்டத்திலிருந்து 3 அடி, 4 அடி ஆழத்தில் மட்டுமே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால், உழவு பணிகளை மேற்கொள்ள இருக்கும்போது குழாயில் அழுத்தம் ஏற்பட்டு வெடிப்பு ஏற்படுகிறது. கோடையில் வெப்ப தாக்கத்தால் குழாய்களில் உடைத்துக்கொண்டு கச்சா எண்ணெய் வெளியேறி விளைநிலங்களைப் பாழடித்துக் கொண்டிருக்கிறது. இதனை முன்கூட்டியே கண்காணிப்பதற்கு கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான பொறியியல் வல்லுநர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறதா? கண்காணிப்பில் இருந்தால் பேராபத்து தொடர்ந்துகொண்டே இருப்பது ஏன்?

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

இதிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாப்பதற்காக தமிழக அரசு மண்ணியல் வல்லுநர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் உயர்மட்டக்குழுவை அமைத்து அக்குழு ஆய்வு செய்ததாகவும், ஆய்வின் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இஸ்மாயில் குழு அறிக்கையின் அடிப்படையில், ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை களைந்து அதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். அதுவரையிலும் ஓ.என்.ஜி.சி குழாய் பாதையில் கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இஸ்மாயில் குழு ஆய்வு குறித்து அறிக்கையை வெளியிட்டு உண்மைநிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு செய்ய வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism