பிரீமியம் ஸ்டோரி
மெரிக்கன் படைப்புழுத் தாக்குதல் மக்காச்சோளப் பயிர்களில் ஏற்படுத்திய பாதிப் பிலிருந்து விவசாயிகள் இன்னும் மீளவில்லை. அதற்குள் மரவள்ளிப் பயிர்களில் பாதிப்பை உருவாக்கியுள்ளது மாவுப்பூச்சி. இதனால் தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், மாவுப்பூச்சித் தாக்குதல் தொடர் பாகத் தமிழக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 21.11.2020 அன்று நேரலை நிகழ்ச்சியை நடத்தியது பசுமை விகடன்.
நேரலையில் சீனிவாசன் ராமசாமி
நேரலையில் சீனிவாசன் ராமசாமி

தைவான் நாட்டில் இருக்கும் உலகக் காய்கறி மையத்தின் முதல்நிலை விஞ்ஞானி சீனிவாசன் ராமசாமி கலந்துகொண்டு தெளிவான விளக்கம் அளித்தார். அப்போது பேசியவர், ‘‘சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில்தான் மரவள்ளிச் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. ஏற்கெனவே மரவள்ளியில் தேமல் நோய் தாக்குதலால் மகசூல் இழப்பைச் சந்தித்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள். மனிதர்களுக்குத் தோல் நோய் ஏற்படுவதைப்போல மரவள்ளி இலைகளில் மஞ்சள் வண்ணத்தில் தேமல் போன்று உருவாகும். இதற்குக் காரணம் ஒரு விதமான வைரஸ். அது தானாகப் பரவாது. சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈக்கள் இலையில் சாறு உறிஞ்சும்போது, அதில் இருக்கும் வைரஸையும் சேர்த்து உறிஞ்சிக்கொள்ளும். அப்படியே மற்றொரு செடியில் அமரும்போது, அங்கு வைரஸைப் பரப்பிவிடும்.

மரவள்ளி மாவுப்பூச்சியைத் தடுக்கும் ஒட்டுண்ணி!

20 நாள்களில் அந்தச் செடியிலும் வைரஸ் பரவி, தேமல் நோய் உருவாகிவிடும். பிறகு இலைகள் மஞ்சள் வண்ணத்துக்கு மாறிவிடும். செடியின் வளர்ச்சி குன்றிவிடும். மகசூல் பாதிப்பு ஏற்படும். கடந்த 15 ஆண்டுகளாக மரவள்ளியில் இது பெரிய பிரச்னையாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டுக் கடைசியில் மாவுப்பூச்சித் தாக்குதல் தொடங்கி இருக்கிறது. இது நமது ஊரில் ஏற்கெனவே இருக்கும் மாவுப்பூச்சி வகையைச் சேர்ந்தது இல்லை. இந்தியாவுக்குப் புது வரவு. ஆப்பிரிக்க நாடுகளில் மாபெரும் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ள இவ்வகை மாவுப்பூச்சிகள் உலகின் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, தற்போது இந்தியாவில் கால் பதித்துள்ளது.

மரவள்ளி மாவுப்பூச்சியைத் தடுக்கும் ஒட்டுண்ணி!

இது ஒருவகையில் வித்தியாசமான பூச்சி. பொதுவாகப் பூச்சிகளில் ஆண்-பெண் கலவி நடந்து பெண் பூச்சி முட்டை வைக்கும். ஆனால், இந்த மாவுப்பூச்சி இனத்தில் ஆண் இனம் இல்லாமலேயே பெண் பூச்சி முட்டை வைக்கும். இன்னொரு அதிசயம், முட்டை யிலிருந்து வெளியே வருவதும் முழுக்கப் பெண் பூச்சிகள்தான். ஒரு பெண் பூச்சியின் ஆயுள்காலம் 20 நாள்கள். அதற்குள் 500 முட்டைகள் வைத்துவிடும். அந்த 500-ம் தாய் பூச்சிகளாகிவிடும். இதன் இனப்பெருக்க வேகம் பிரமிக்கத்தக்கது. ஒரு செடியில் ஒரு மாவுப்பூச்சி இருந்தால் போதும். இரண்டு மூன்று மாதங்களில் லட்சக்கணக்கான மாவுப்பூச்சிகள் உருவாகிவிடும். இதன் உடம்பின் மேல் பகுதியில் மெழுகு போன்ற ஒரு பூச்சு இருக்கிறது. அது இதற்கு இயற்கை அளித்துள்ள பாதுகாப்பு. இதன் இயற்கை எதிரிகளான இரை விழுங்கிகள் இதைத் தாக்கும்போது, மெழுகு பகுதிதான் முதலில் தாக்குதலுக்கு உள்ளாகும். அதற்குள் பூச்சி நகர்ந்துவிடும். பூச்சிக்கொல்லி தெளித்தாலும் அது பூச்சியின் மீது படாத வகையில் மெழுகு கேடயமாகக் காக்கும்.

மரவள்ளி மாவுப்பூச்சியைத் தடுக்கும் ஒட்டுண்ணி!

வளர்ந்த பூச்சி இலையின் நடுப்பகுதியில் உள்ள நரம்புப் பகுதிக்கு வந்துவிடும். அங்கு அமர்ந்துகொண்டு சாறு உறிஞ்சத் தொடங்கும். சராசரியாக 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இதன் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். மழைதான் இதற்கு ஆகாது. 80 சதவிகிதப் பூச்சிகள் அதில் அழிந்துவிடும். இதன் தாக்குதலுக்கு உள்ளான செடியின் நுனி இலைகள் சுருங்கி, வளர்ச்சி பாதிக்கப்படும். இதைத் தடுக்க ஒட்டுண்ணி தான் ஒரே வழி. உலக நாடுகள் அனாகைரஸ் லோபெஸி (Anagyrus Lopezi) என்ற ஒட்டுண்ணிமூலம்தான் மாவுப்பூச்சியைச் சமாளித்து வருகின்றன. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் பெங்களூருவில் உள்ள உயிரியல் கட்டுப்பாட்டு நிறுவனம் இதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இந்த ஒட்டுண்ணி இந்தியாவுக்கு வரக்கூடிய ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. வந்தாலும் பலகட்ட ஆய்வுக்குப் பிறகுதான் பயன்பாட்டுக்கு வரும். கூடிய விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார்கள்’’ என்றவர் தொடர்ந்து வாசகர்களின் கேள்வி களுக்குப் பதிலளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு