Published:Updated:

300 சதுர அடி போதும்... மாடித்தோட்டம் அமைக்கலாம்!

சுல்தான் இஸ்மாயில்
பிரீமியம் ஸ்டோரி
News
சுல்தான் இஸ்மாயில்

பயிற்சி

மாடித்தோட்டம், இன்று பெரும்பாலான நகரவாசிகளை ஆக்கிரமித்திருக்கும் ஒரு விவசாயக் களம். இயற்கைக் காய்கறிகள், உடல் மற்றும் மனநலம் என மாடித்தோட்டத்தின் பயன்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். மாடித்தோட்டத்துக்கான முதலீடு வெகு குறைவு என்பது கூடுதல் பலம்.
மைத்ரேயன்
மைத்ரேயன்

இதனடிப்படையில் மாடித்தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்து, பசுமை விகடன் கடந்த ஜூலை 25-ம் தேதி ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்ற தலைப்பில் நேரலை (ஆன்லைன்) கருத்தரங்கை நடத்தியது. இதில் ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் இஸ்மாயில், மாடித்தோட்ட விவசாயி மைத்ரேயன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியை வழங்கினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில் பேசும்போது, “வீட்டின் பால்கனியில் தோட்டம் அமைக்க 15-க்கு 5 அடி இடம் போதுமானது. சின்னச் சின்னத் தொட்டிகளில் அழகுச் செடிகள், சூரியஒளி படும் இடங்களில் கீரைகள் உள்ளிட்டவை வளர்க்கலாம். வீட்டுக்கு முன்பாகவும், வீட்டின் ஓரமாகவும் தோட்டம் அமைக்க மொத்தமாக 360 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. மாடியில் தோட்டம் அமைக்க 300 சதுர அடி இடம் தேவை. அதில் பீன்ஸ், கத்திரி, வெண்டை, கீரை வகைகள், மலர் வகைகள் எனப் பல செடிகளை வளர்க்கலாம். நாம் வளர்க்கும் செடிகளுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி, இஞ்சிப் பூண்டுக் கரைசல், வளர்ச்சிக்குப் பஞ்சகவ்யா எனக் கொடுக்க வேண்டும். வீட்டில் வீணாகும் காய்கறிக் கழிவுகளை கம்போஸ்ட் செய்து செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்” என்றார்.

சுல்தான் இஸ்மாயில், சுப்பாராவ்
சுல்தான் இஸ்மாயில், சுப்பாராவ்

அடுத்ததாகப் பேசிய சென்னையைச் சேர்ந்த மாடித்தோட்ட விவசாயி மைத்ரேயன், “வீட்டுக்குத் தேவையான காய்கறிகளில் 60 சதவிகிதம் மாடித்தோட்டத்திலேயே உற்பத்தி செய்து கொள்கிறேன். மாடித்தோட்டப் பயிர்களுக்குக் காலநிலை அறிந்து பயிர் செய்ய வேண்டும். காலை மாலை இருவேளைகளிலும் தோட்டத்தைக் கவனிப்பது முக்கியம். ஒவ்வொரு செடியையும் கவனித்துப் பூச்சிகள் தாக்கியுள்ளதா? என்று பார்க்க வேண்டும். அப்படிப் பூச்சித்தாக்குதல் இருந்தால் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். நாட்டு விதைகளைப் பயன்படுத்துவது சிறந்தது. ஒருமுறை மட்டும் விதைகளை வாங்கி விதைத்தாலே போதும். பின்னர் அதிலிருந்தே விதைகள் எடுத்து அடுத்த விதைப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகப் மலேசியா நாட்டில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அலுவலர் சுப்பாராவ் கலந்துகொண்டார்.